என் மலர்

  ஆன்மிகம்

  புத்தாண்டின் ராசிப்படி பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
  X

  புத்தாண்டின் ராசிப்படி பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் (2019) 12 ராசிகளின் படி பெண்களுக்கான சிறப்பு பலன்களை அறிந்து கொள்ளலாம்.
  மேஷம்

  மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த புத்தாண்டில் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குருவின் பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கூடுதலாகக் கிடைக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்ப முன்னேற்றம் கூடும். சனி, செவ்வாய் பார்வை காலத்தில் மனக்கவலை அதிகரிக்கும். மக்கள் செல்வங்களால் பிரச்சினைகள் உருவாகும். சிந்தித்து செயல்பட்டால் வந்த துயர் விலகும்.

  ரிஷபம்

  ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஓர் இனிய ஆண்டாக அமையப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். சென்ற ஆண்டில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கேட்ட இடத்திற்கு இடமாறுதல் கிடைக்கும். எதிர்பார்த்த சம்பளமும், வந்து சேரும். பிரதோஷ வழிபாடும், குலதெய்வ வழிபாடும் பெருமை சேர்க்கும்.

  மிதுனம்

  மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பேணி வைத்துக்கொள்வது இயலாத காரியமாகத் தெரியும். இருப்பினும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நினைத்தது நிறைவேறும்.பிள்ளைகளுக்கான வேலை வாய்ப்பும், மாலை சூடும் வாய்ப்பும் கைகூடும். உடன்பிறப்புகளின் பகை உருவாகலாம். பணிபுரியும் பெண்களுக்கு இனிய தகவல் வந்து சேரும். ஆஞ்சநேயர் வழிபாடும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

  கடகம்

  கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு பிரச்சினைகளிலிருந்து விடுபடும் ஆண்டாக அமையப்போகின்றது. வருடத்தொடக்கத்தில் ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு பின்னோக்கிச் சென்று முன்னேற்றமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கப் போகின்றது. மேலும் குரு பார்வையாலும், குடும்ப முன்னேற்றம் கூடுதலாகவே இருக்கும். கணவன்- மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். குருப் பெயர்ச்சிக்குப் பிறகு உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். இனிய பலன்கள் நடைபெற சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்வதோடு குலதெய்வப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுவது நல்லது.

  சிம்மம்

  சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டில் சுபச்செய்திகள் வந்து கொண்டேயிருக்கும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளால் உங்களுக்கு உதிரி வருமானங்கள் கிடைக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல செய்தி இல்லம் தேடிவரும். வீடு வாங்கும் யோகமும், பழைய நகைகளைப் புதுப்பித்து புதிய ஆபரணம் வாங்கும் யோகமும் கைகூடும். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதால் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், சர்ப்ப சாந்தியும், குருப்பிரீதியும் செய்வது நல்லது.

  கன்னி

  கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு வருடத் தொடக்கத்தில் வசந்த காலமாகவே இருக்கும். சுப காரியப் பேச்சுகள் கை கூடும். கணவன்-மனைவிக்குள் அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் ஈடேறும். தாய்வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் இனிமை தரும். ெவளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களுக்கு குருப்பெயர்ச்சிக்குப் பின் எடுக்கும் முயற்சி வெற்றி தரும். வராகி வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் வருங்காலத்தை நலமாக்கிக் கொடுக்கும்.

  துலாம்

  துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும் ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் மனக்கவலை மாறும். மங்கல காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு சிறப்பாக முடிவடையும். 5-ம், 9-ம் மிஞ்சும் பலன்தரும் என்பதால், 9-ம் இடத்திற்கு ராகு வருவதற்கு முன்னதாகவே பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாகனம் வாங்கி மகிழும் யோகம் உண்டு. குலதெய்வ வழிபாடும், வராகி வழிபாடும் குடும்ப முன்னேற்றத்தைக் கூடுதலாக்கும்.

  விருச்சிகம்

  விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையப் போகின்றது. மற்றவர்கள் பாராட்டும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயரும். மக்கள் செல்வங்களின் கல்யாண காரியங்கள் துரிதமாக நடைபெறும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் நிலையங்களுக்குக் கூட உங்களை உரிமையாளராக்க குடும்பத்தினர் சம்மதிப்பர். தாய்வழி ஆதரவும், சகோதரவழி ஆதரவும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், குலதெய்வ வழிபாடும், ஆதியந்தப் பிரபு வழிபாடும் குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.

  தனுசு


  தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு பொருளாதார நிலை உயரும் ஆண்டாக அமையப் போகின்றது. ராசிநாதன் செவ்வாயைக் குரு பார்ப்பதன் மூலமும் குருமங்கள யோகத்தையும், சூரியன் புதனோடு இணைந்து புத ஆதித்ய யோகத்தை உருவாக்கும் விதத்தில் ஆண்டு தொடங்குவதால் மங்கள நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். பிப்ரவரி மாதம் ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். தீட்டிய திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பணிபுரியும் பெண்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு தானாகக் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குருபகவான் வழிபாடும் ராகு-கேது பிரீதியும் நலங்களையும், வளங்களையும் வரவழைத்துக்கொடுக்கும்.

  மகரம்

  மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் வருமானப் பெருக்கத்திற்கு வழிபிறக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும், ஆதரவும் கூடும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் குடும்பத்தில் சுப காரியப் பேச்சுகளை தீவிரமாகப் பேசி முடிப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். அதே போல அணிந்திருக்கும் ஆபரணங்களையும் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி புரியும் இடத்தில் இருந்த சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு எதிர்பார்த்த இடமாற்றங்கள் அமையும். இனிய வாழ்வமைய குலதெய்வ வழிபாட்டையும், விநாயகப் பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

  கும்பம்

  கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சீரும், சிறப்பும் தரும் ஆண்டாக அமையப் போகின்றது.செல்வ நிலை உயரும். குடும்பத்தில் நடைபெற வேண்டிய கல்யாணம் கைகூடும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன்-மனைவி உறவில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டு புதிய வாழ்வை அமைத்துக்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. உயர்பதவியும், ஊதிய உயர்வும், எதிர்பார்த்தபடி வந்து சேரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. புனித ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாடும், ஆறுமுகப்பெருமான் வழிபாடும் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் கூட்டும்.

  மீனம்

  மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத்தில் தொடக்கம் வளர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். குருமங்கள யோகத்தால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யமும், அன்பும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உத்தியோகத்திலும், பதவியிலும் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். பணிபுரியும் பெண்கள் திடீர் என பதவி மாற்றம் காண்பர். நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைத்து மனக்கவலை அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு, குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும், ராகு-கேது பிரீதியும் இனிய வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும்.
  Next Story
  ×