search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நவராத்திரி திருவிழாவையொட்டி வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் பவனி வந்தபோது எடுத்த படம்.
    X
    நவராத்திரி திருவிழாவையொட்டி வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் பவனி வந்தபோது எடுத்த படம்.

    கன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழா: வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் பவனி

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவையொட்டி வெள்ளி கலைமான் வானத்தில் பகவதி அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவில் 2-ம் நாளான நேற்று முன்தினம் வணிகத்துறை சார்பில் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வாகன பவனி நடைபெற்றது.

    3-ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு சென்னை பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவனத்தலைவர் டி.ஆர். பாலகிருஷ்ணன்ராஜா ஏற்பாட்டில் பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், கலபம், குங்குமம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் அன்னதானம், மாலை சொற்பொழிவு, இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும், 9 மணிக்கு கலைமான் வாகனத்தில் அம்மன் வாகன பவனி ஆகியவை நடைபெற்றது.
    Next Story
    ×