search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரத்தினகீரிடம், தங்க சிம்மாசனம், திருவாட்சி காணிக்கை
    X

    திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரத்தினகீரிடம், தங்க சிம்மாசனம், திருவாட்சி காணிக்கை

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு 900 கிராம் எடையுள்ள ரத்ன கீரிடம், 450 கிராம் எடையுள்ள தங்க சிம்மாசனம், 200 கிராம் அளவிலான தங்கரேக்கில் திருவாட்சி ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டன.
    திருப்பரங்குன்றம் ஸ்கந்தகுரு வித்யாலய வேதசிவகாம பாடசாலையின் 25-வது ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிக பட்டரும், பாடசாலையின் முதல்வருமான ராஜா பட்டர் தலைமையில், பாடசாலை முன்னாள் மாணவர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு 900 கிராம் எடையுள்ள ரத்ன கீரிடம், 450 கிராம் எடையுள்ள தங்க சிம்மாசனம், 200 கிராம் அளவிலான தங்கரேக்கில் திருவாட்சி ஆகியவை காணிக்கையாக வழங்கப்பட்டன.

    இதனை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து. கண்ணன் பெற்றுக்கொண்டு, அதனை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் வழங்கினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன்கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) மாரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் தெய்வானையுடனான முருகப்பெருமானுக்கு புதிய ரத்தின கீரிடம் சூட்டப்பட்டு, தங்க திருவாட்சி, தங்கசிம்மாசனத்தில் சாமி எழுந்தருளியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

    தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பாடசாலை முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    Next Story
    ×