என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளி பிரம்மோற்சவ விழா
    X

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளி பிரம்மோற்சவ விழா

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் ஆடிவெள்ளி மற்றும் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் ஆடிவெள்ளி மற்றும் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடந்து வருகிறது. ஆடி 3-ம் வெள்ளியான இன்று இரவு சிம்ம வானத்தில் அம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    வரும், 26-ந்தேதி, 4-ம் வெள்ளி திருத்தேர் பவனியும், 5-ம் வெள்ளி தெப்பல் உற்சவமும், 6-ம் வெள்ளி இலட்சதீபம், யானை வாகனமும், 7-ம் வெள்ளி ஊஞ்சல் சேவை, 8, மற்றும் 9-ம் வெள்ளியன்று சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

    இதைதொடர்ந்து, வரும் 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதில், பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் படி பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் சுப்பி ரமணியம், கோவில் செயல் அலுவலர் குமரன், மேலாளர் பாபு, கணக்கர் முரளி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஆடி மாத 3-வது வெள்ளிக் கிழமையையொட்டி, இன்று 109 அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.பக்தர்கள் காவடி கரகம் எடுத்து வந்து தரிசனம் செய்தனர். வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பாலாற்றங் கரையோரத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் இன்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. செல்லியம்மன் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித் தார். ஏராளமான பெண்கள் கோவிலில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

    காட்பாடி ரோட்டில் உள்ள விஷ்ணு துர்கையம்மனுக்கு வெண்ணை காப்பு அலங் காரம் செய்யப்பட்டிருந்தது. தோட்டப்பாளையம் படவேட்டம்மன் மற்றும் டிட்டர்லைன் கருமாரி அம்மனும் சிறப்பு அலங்காரரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    Next Story
    ×