search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண்ணகி கோவிலில் முழுநிலவு விழா நாளை மறுநாள் நடக்கிறது
    X

    கண்ணகி கோவிலில் முழுநிலவு விழா நாளை மறுநாள் நடக்கிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் முழுநிலவு விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.
    தேனி மாவட்டம் கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதியில் வேங்கைக்கானல் என்ற இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்து உள்ளது. சுமார் 1,800 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் தமிழக-கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெறும். ‘சித்திரை முழு நிலவு விழா’ என்ற பெயரில் இந்த திருவிழா நடத்தப்படும்.

    திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்டு கோவலன் கொல்லப்பட்டதால், கோபத்தில் பொங்கிய கண்ணகி மதுரையை எரித்தாள். அப்போது மதுராபதி என்ற தெய்வம் கண்ணகியின் முன் தோன்றி முன்ஜென்ம கதை ஒன்றை கூறியதுடன், “நீ இன்றில் இருந்து 14 நாட்கள் கழித்த பின்பு உன் கணவனை கண்டு சேர்வாய்” என்று கூறியது.

    பின்னர், மதுரையை விட்டு புறப்பட்ட கண்ணகி வைகை ஆற்றின் கரைவழியே சென்று, பேறியாற்றங்கரை (பெரியாறு) வழியாக நெடுவேள் குன்றத்தில் ஏறி குன்றின் உச்சியில் இருந்த வேங்கை மரத்தின் நிழலில் நின்றாள். 14 நாட்கள் கடந்து சென்று அந்த இடத்தை அடைந்த பின்னர், கண்ணகி மீது பூமாரி பொழிந்தது. இந்திரன் முதலானோர் வாழ்த்த, வானில் இருந்து கோவலன் இறங்கி வந்தான். அவனுடன், கண்ணகி வானூர்தியில் ஏறி விண்ணுலகம் சென்றார்.


    கற்களால் கட்டப்பட்ட மங்கலதேவி கண்ணகி கோவிலை படத்தில் காணலாம்.

    இதனை அப்பகுதியில் வாழ்ந்த குன்றக்குறவர் மக்கள் பார்த்தனர். இதனை பார்த்த அந்த மக்கள் கண்ணகியை தங்கள் குலதெய்வமாக கொண்டு அவரை வாழ்த்தி குறவைக் கூத்து ஆடினர். இந்த காலக்கட்டத்தில் அங்கு வனவளம் காண்பதற்காக சேர நாட்டு மன்னன் சேரன்செங்குட்டுவன் வந்தான். கண்ணகியை அம்மனாக பாவித்து மக்கள் விளக்கேற்றி வழிபாடு நடத்திக் கொண்டு இருப்பதை பார்த்த சேரன்செங்குட்டுவன் இதற்கான விவரத்தை கேட்டார். அப்போது குன்றக் குறவர் இன மக்கள் கண்ணகி, கோவலனுடன் விண்ணுலகம் சென்றதை பார்த்த காட்சியை விவரித்தனர்.

    அதன்பிறகு கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கற்கோவில் கட்டினான். இதற்காக இமயமலையில் இருந்து கற்கள் எடுத்து வந்து கண்ணகி சிலையுடன் ‘பத்தினிக் கோட்டம்’ என்ற பெயரில் கோவில் கட்டினான். நான்கு பக்கமும் மதிற்சுவர் எழுப்பப்பட்ட கோவில் அமைந்த இடம் ‘கோட்டம்’ எனப்படும். அந்த வகையில் தான் பத்தினிக் கோட்டமும் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சுற்றுச்சுவர் தற்போது சிதைந்து கிடக்கிறது. பத்தினிக் கோட்டம் என்றது தான் நாளடைவில் கண்ணகிக் கோட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இக்கோவில் பின்னாளில் சிதிலமடைந்ததால், சோழப்பேரரசன் முதலாம் ராஜராஜன் தன்ஆட்சிகாலத்தில் கோவிலை சோழர் கலைப்பாணியில் மீட்டமைத்தான். இப்போதுள்ள வடிவம் தான் அது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி நாளில் ‘சித்திரை முழுநிலவு விழா’ என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு ‘சித்திரை முழுநிலவு விழா’ நாளை மறுநாள்(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    Next Story
    ×