என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறும் பூசாரியை படத்தில் காணலாம்.
    X
    அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறும் பூசாரியை படத்தில் காணலாம்.

    ஈரோடு முனியப்பசாமி கோவில் திருவிழா: அரிவாள் மீது ஏறிநின்று அருள்வாக்கு கூறிய பூசாரி

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் திருவிழாவில் அரிவாள் மீது பூசாரி ஏறிநின்று அருள்வாக்கு கூறினார்.
    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் நேற்று காலை காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் முனியப்பசாமிக்கு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், பக்தர்கள் பலர் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

    பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். பிறகு கோவிலில் உள்ள அரிவாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் அந்த அரிவாளை பக்தர்கள் பிடித்துக்கொண்டனர். அந்த அரிவாள் மீது பூசாரி கருப்பசாமி ஏறி நின்று அருள்வாக்கு கூறினார். அப்போது ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம் அருள்வாக்கு கேட்டனர்.

    விழாவில் பக்தர்கள் கிடா பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (வியாழக்கிழமை) மாலை நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    Next Story
    ×