search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆண்டாள்
    X
    ஆண்டாள்

    மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 15

    'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?' எனத்தொடங்கும் திருப்பாவையையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
    'எல்லே இளங்கிளியே; இன்னம் உறக்குதியோ?'
    'சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்'
    'வல்லை உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!'
    'வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக'
    'ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறுடையை?'
    'எல்லாரும் போந்தாரோ?' போந்தார், போந்தெண்ணிக்கொள்;
    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
    வல்லானை, மாயனைப் பாடேலோர் எம்பாவாய். 
     
    பொருள்: ''ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! ''நாங்கள் அழைத்தும் உறங்குகிறாயே?'' என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, ''இதோ வந்து விடுகிறேன்,'' என்கிறாள். 

    தோழிகள், ''உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.'' என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், ''சரி..சரி... நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்,'' என்கிறாள்.

    ''அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?'' என்று கடிந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×