என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்காமீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
    X
    திருக்காமீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

    வைகாசி பிரம்மோற்சவ விழா திருக்காமீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்

    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சந்திரசேகர் பெருமானுக்கு மஞ்சள் நீராட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதன்பின் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் உள்ளிட்ட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×