search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாபலி சக்கரவர்த்தி
    X
    மகாபலி சக்கரவர்த்தி

    மகாபலி சக்கரவர்த்தி காயத்ரி மந்திரம்

    எந்த ஒரு மன்னர் (அ) ஆட்சியாளர், நீதி நெறி பிறழாமல் ஆட்சி நடத்தி மக்களையும், நாட்டையும் காக்கின்றாரோ அவர், மகாபலி சக்கரவர்த்தியின் அம்சமாகக் கருதப்படுவார்.
    இவர் விஷ்ணு பக்தரான பிரகலாதனின் பேரனும், வீரோசனின் மகனும் ஆவார். அசுர குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவரும் மிகச் சிறந்த விஷ்ணு பக்தராவார். உலகை வெல்லும் நோக்குடன் யாகம் புரிந்த இவருக்கு, தேவர்கள் அனைவரும் பயந்தனர். தேவர்களைக் காக்க நினைத்த விஷ்ணு பகவான், வாமன அவதாரம் எடுத்து வந்து, மகாபலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டார். மகாபலியும் ஒப்புக்கொண்டார்.

    ஆனால் குள்ளமாக இருந்த மகாவிஷ்ணு, திரிவிக்கிரமனாக உயர்ந்து வளர்ந்து விண்ணுக்கும், மண்ணுக்குமாக நின்றார். தன் ஒரு அடியால் விண்ணுலகத்தையும், மற்றொரு அடியால் மண்ணுலகத்தையும் அளந்தவர், “மூன்றாவது அடியை எங்கே வைப்பது?” என்று மகாபலியிடம் கேட்டார். உடனே மகாபலி, மூன்றாவது அடியை தன்னுடைய தலையில் வைக்கும்படி கூறினார்.

    விஷ்ணுவும் அவ்வாறே செய்து, மகாபலியை பாதாள உலகத்திற்குள் தள்ளினார். மேலும் பாதாள உலகத்திற்கு அரசனாகவும், சிரஞ்சீவியாகவும் வாழ அருள்புரிந்தார். எந்த ஒரு மன்னர் (அ) ஆட்சியாளர், நீதி நெறி பிறழாமல் ஆட்சி நடத்தி மக்களையும், நாட்டையும் காக்கின்றாரோ அவர், மகாபலி சக்கரவர்த்தியின் அம்சமாகக் கருதப்படுவார்.

    இவருக்கான காயத்ரி மந்திரம்..

    “ஓம் மஹாபுருஷாய வித்மஹே
    யஸோதனாய தீமஹி
    தந்நோ மஹாபலி ப்ரசோதயாத்”
    Next Story
    ×