search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோமாதா
    X
    கோமாதா

    கோமாதாவை வழிபட மாத்ரு பஞ்சகம் - தமிழ்த்துதி

    வாழ்வில் வெற்றியைப் பெற்று, தோஷங்களை விரட்டிச் சந்தோஷம் மட்டுமே நிலை பெற கோமாதாவிற்கு உகந்த இந்த மாத்ரு பஞ்சகத்தை சொல்லி வழிபடலாம்.
    தாயை வணங்குவோர் தரணியில் உயர்ந்து நிற்பர். அந்தத் தாய் பூமியாக பாரத மாதாவாக, ஆலயக் கருவறையில் தனி உருவாக நிற்கும் பராசக்தியாய், தாயுமானவ சிவனாய், மாரியாக, காளியாக, பெற்ற தாயாக எல்லா சக்தியும் கொண்ட கோமாதா... பசுவாக நேரில் காண்கிறோம். வாழ்வில் வெற்றியைப் பெற்று, தோஷங்களை விரட்டிச் சந்தோஷம் மட்டுமே நிலை பெற...! வாரத்தில் வெள்ளி அல்லது மாதம் ஒருமுறை வரும் பவுணர்மி அன்று பசுவுக்கு வெல்லம் பச்சரிசி கலந்து கொடுத்து அகத்தி கீரையும் தந்து 3 முறை வலம் வர வேண்டும்.

    கருத்தரித்த நாள் முதலாய் உள்ளிருந்து
    கணந்தோறும் காத்தருள் சுரந்து சுரந்து
    உருவெடுக்கும் என்னுயிரால் ருசியிழந்து
    உணவு குன்றி மசக்கை எழ மெலிந்து மெலிந்து
    வருந்துகிற கவலை எழும் வேளை தனில்
    வளர்கின்ற பிள்ளைச்சுமை சுமந்து சுமந்து
    பெருத்த வலி சூழ்ந்துள்ள காலைதனில்
    பிரசவத்தின் சூல்வலிக்கு இறங்கி இறங்கி
    திருத்தமொடு பூமிதனில் தவழ விட்டு
    சிம்மாசன மடியேற்றி மகிழ்ந்து மகிழ்ந்து
    பொறுத்தனை மலமூத்திரம் கழிந்த காலை
    புன்னகையே பூத்து முகம் மலர்ந்து மலர்ந்து
    கருத்தொரு நலங்கோடி தந்தனையம்மா!
    கடன் சுமை என்னிடத்தே மிகுந்து மிகுந்து
    உறுத்துகின்ற பான்மைதீரப் பதிலெதுவோ
    ஒன்றினுக்கு ஒன்றேனும் உவந்து உவந்து.
    Next Story
    ×