search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை
    X

    நினைத்ததை நிறைவேற்றும் வாராகிமாலை

    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும். வாராகி மாலையின் பொருளையும் படிப்பதால் கிடைக்கும் பயனையும் அறிந்து கொள்ளலாம்.
    வாராகி வழிபாடு மிகவும் கட்டுபாட்டுக்கு உரியது. அனைத்தும் புரிந்து தான் நெருங்க வேண்டும்.

    பகைமுடித்தல்:-

    வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
    சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவிஎங்கள்
    கருத்திற் பயிலும் வாராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
    பருத்தி பொதிக்கிட்ட தீப்பொறிகாணும் பகைத்தவர்கே...

    பொருள்:-

    வாராகியின் வல்லமை புரியாமல், அவள் வணங்கும் பக்தனை பகைத்து கொண்டால் இவள் பொருத்திருக்கமாட்டாள். ருத்திரனின் இயக்கம் இருக்கும் இந்த வாராகியாகப்பட்டவள், தன் பக்தனுக்கு தீங்கு இழைத்தவர்களை கண்டு கண்சிவந்து வெட்டி வீழ்த்துவாள் பொருத்திருக்கமாட்டாள் பக்தனை காப்பதில் அவ்வளவு  ஆவேசம்.

    பயன்:-

    வேண்டுமென்றே ஒருவர் நமக்கு தீங்கு செய்தால் அதை விலக்க இதை படிக்கலாம்.

    வாக்கு வெற்றி:-

    “பாப்பட்டசெந்தமிழ் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
    பூசப்பட்டதும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
    கூப்பிட்டது உன்செவி கேட்கலையோ? அண்ட கோளமட்டும்
    தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யானர்தெரு எங்குமே

    விளக்கம்:-

    பொதுவாக நம் தாய் தந்தை என்று தான் நாம் விரும்பி வணங்கும் தெய்வத்தை அழைக்கின்றோம். இது நமக்கும் நாம் வணங்கும் தெய்வத்திற்கும் உள்ள

    நெறுக்கத்தை காட்டுகின்றது. மேலும் செந்தமிழ் பாக்களால் உன்னை அர்ச்சித்ததெல்லாம் தீயில் எரிந்ததா புகழ்ந்து கூப்பிட்டது உன்  கமல செவிகளில்

    விழவில்லையோ? வானமுகடு வரை நெருப்பால் இந்த உலகம் அழிந்ததா என மனம் உருகி வேண்டுகின்ற வடிவத்தை சொல்லுகின்றது.

    பயன்பாடு:-

    மிக பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கும்போது இப்பாடலை பாடி தற்காத்து கொள்ளலாம்.

    தேவி வருகை:-

    எங்கும் எரியக் கிரிகள் பொடிபட, எம்பகைஞர்
    அங்கம் பிளந்திட விண்மீன் கிழிந்திட ஆர்தெழுந்து
    பொங்கும் கடல்கள் சுவறிட சூலத்தை போகவிட்டு
    சிங்கத்தின் மீது வருவாள் வாராகி சிவசக்தியே

    விளக்கம்:-

    வாராகியின் கோபம் எப்படிபட்டது தெரியுமா? அன்னை வருகிறாள், மிகபெரிய உக்ர ரூபிணியாய் சிம்ம வாகனத்தில் ஏறி நின்றே வருகின்றாள். அவள்

    வருவதற்கு முன்பே அவள் சூலம் பாய்ந்து வருகின்றது. இந்த நிகழ்வு நடக்கின்றபோது, நெருப்பு பறக்கின்றதாம், மலைவெடித்து சிதறுகின்றதாம், பகைவர்கள்

    உடல் பிளந்து விழுகின்றார்கள். விண்ணும் மண்ணும் பிளக்கின்றது, கடல் வற்றிபோகின்றது. அவள் சக்திக்கு இது ஒரு விளக்கம்.

    பயன்:-

    உடல்நிலை பெரிதும் பாதிக்கின்றபோது இப்பாடலை படித்து பயன்பெறலாம்.

    ஆன்ம பூஜை:-

    ‘‘சக்தி கவுரி மகாமாயி ஆயிஎன் சத்துருவைக்
    குத்தி இரணக் குடலைப் பிடுங்கிக் குலாவிநின்றே
    இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
    நித்தம் நடித்து வருவாள் வாராஹி என் நெஞ்சகத்தே.

    விளக்கம்:-

    வாராகி தேவி சக்தி, கவுரி, மகாமாயி என்ற மூன்று தெய்வங்களின் வவானவள். அவள் தன் பக்தனுடைய சத்ருக்களை எப்படி சூரையாயிடுவாள் என

    மேற்கண்ட பாடல் விளக்குகின்றது. வாராகி தன் பக்தனை சோதித்த எதிரியை தன் கூரிய நகங்களால் குத்தி அவள் வயிற்றை கிழித்து பிடுங்கி வீசுகின்றாள். எட்டு திசைகளிலும் மலைகள் வெடித்து சிதறுகின்றது. அப்போது நளின நடையோடு வந்து அவள் குருதி கொண்டு தன் பக்தன் நெற்றியில் வெற்றி திலகமிடுவாள்.

    அமைதியை நோக்கி நாம் செயல்பட நினைத்தால் இப்பாடலை பிராயணம் செய்யலாம்.

    தேவி தாபணம்:-

    ‘‘நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
    நஞ்சணி கண்டத்தி நாராயணி தனை நம்புதற்கு
    வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை  உண்ணக்
    கொஞ்சி நடந்து வருவாள் வாராகி குலதெய்வமே....

    விளக்கம்:-

    தேவி கொஞ்சி அடிமேல் அடி எடுத்து வைத்து நட்ந்து வருகிறாள். எதற்கு, தன்னை வேண்டி நின்ற பக்தரை வருத்துபவரை வதம் செய்ய, அதற்கு ஏன் கொஞ்சி

    நடக்க வேண்டும், தன்னை வணங்கும் பக்தர்களை காக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில்தான் அவள் நஞ்சுடைய கண்டம் உடையவள் என்பது பொருள்.

    பயன்:-

    அன்பாக அன்னையை அழைக்கும் போது இதை பாடலாம்.

    அடக்குதல்:-

    ‘‘மதுமாமிசம் தனைத் தின்பாள் இவாளன்று மாமறையோர்
    அதுவே உதாசினம் செய்தி டுவார் அந்த அற்பர்கள் தம்
    கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடிதடித்து
    விதிர்வானில் வெட்டி எறிவாள் வாராகி என் மெய்தெய்வமே..

    விளக்கம்:-

    வாராகி அன்னை ஆவேசமிக்க தெய்வம், அவளது தன்மை புரியாமல் அவளை அலட்சியம்  ஏளனம் செய்தாலோ அவர்கள் வாயடைத்து ஊமையாய் மாறுவர். மேலும் இரண்டு கூறுகளாக அவர்களை வெட்டி எரிந்து விடுவாள் என்பது பொருள்.

    பயன்:-

    எதிர்ப்புகளை எளிதில் வெல்லலாம்.

    அம்பிகை காட்சி:-

    ‘‘ஐயும் கிலியும் என்று தொண்டர் போற்ற அரியபச்சை
    மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
    கையும், பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
    வையம் துதிக்க வருவாள் வாராகி மலர்கொடியே...’’

    விளக்கம்:-

    மனதை மகிழ்விக்கும் பச்சை நிறதிருமேனி, கருணை பெருகும் விழிகள், பிரம்பு, கபாலம், சூலம், ஏந்திய திருகரங்கள், இப்படி வெளிப்படுத்துகிறாள். அதுவும் ஐம்

    கலௌம் என்ற பீஜ மந்திரங்களாக மனம் மொன்றித் துதிக்கின்ற அன்பர் முன்காட்சி கொடுக்கின்றாள்.

    பயன்:-

    அம்பிகையை அழைக்க இப்பதிகத்தை பாடலாம்.

    காக்கும் வடிவம்:-

    தாளும் மனமும் தலையும் குலையத் தரியவர்கள்
    மாளும் படிக்க வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
    கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
    வாளும் கட்கமும் சூலமும் ஏந்திவரும் துணையே

    விளக்கம்:-

    வாராகியை மனமொன்றி துதிக்கும் பக்தன் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் வெற்றி சங்கு ஒலிக்க வாளும், சூலமும் தாங்கியவர்களாக துணைக்கு

    வருகிறாள் வாராகி அவளைப் போற்றி பணியும் அன்பர்களுக்கு நவக்கிரகங்களாலோ  பகைவராலோ பயமில்லை, ஏனெனில், வாராகியின் அருள்

    பெருங்கவசமாய் காத்து நிற்கும்.

    பயன்-:--

    தன்னைதற்காத்து கொல்ல இந்த பதிகம் பாடலாம்.

    அன்னையின் அருள்:-

    வரும்துணை என்று வாராகி என்றன் அன்னையை  வாழ்த்தி நிதிம் பொருந்தும் தகைமையம் பூணாதவர்  புலால் உடலை பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும் விருந்துண்ண பட்டுகிடப்பர் கண்டீர், உடற் வேறுபட்டே

    விளக்கம்:-

    உயிர்துணையாக விளங்கும் அருந் தில் நாயகி வாராகியை பாடிப்பரவுதலே பிறவிபயன். அதை செய்யாதவர்கள் அனைவரும் வெறும் தோல் போர்த்திய உடன் கூடுகள், அந்த  உடற்கூடுகள் பருந்து, கழுகு, பேய் மற்றும் பூதங்களின் விருந்தாகும்.

    பயன்:-

    இதை பாடினால் அன்னை அருள் எளிமையாக கிடைக்கும்.
    Next Story
    ×