என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த குபேரன் 108 போற்றியை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் நிறைந்த செல்வ வளத்தை பெறலாம்.
    1. அளகாபுரி அரசே போற்றி
    2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
    3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
    4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
    6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
    7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
    11. ஓங்கார பக்தனே போற்றி
    12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
    13. கனகராஜனே போற்றி
    14. கனகரத்தினமே போற்றி
    15. காசு மாலை அணிந்தவனே போற்றி
    16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
    17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
    18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    19. குருவாரப் பிரியனே போற்றி
    20. குணம் தரும் குபேரா போற்றி
    21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
    22. கும்பத்தில் உறைபவனே போற்றி
    23. குண்டலம் அணிந்தவனே போற்றி
    24. குபேர லோக நாயகனே போற்றி
    25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
    29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
    30. சங்கரர் தோழனே போற்றி
    31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    32. சமயத்தில் அருள்பவனே போற்றி
    33. சத்திய சொரூபனே போற்றி
    34. சாந்த சொரூபனே போற்றி
    35. சித்ரலேகா பிரியனே போற்றி
    36. சித்ரலேகா மணாளனே போற்றி
    37. சிந்தையில் உறைபவனே போற்றி
    38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
    40. சிவபூஜை பிரியனே போற்றி
    41. சிவ பக்த நாயகனே போற்றி
    42. சிவ மகா பக்தனே போற்றி
    43. சுந்தரர் பிரியனே போற்றி
    44. சுந்தர நாயகனே போற்றி
    45. சூர்பனகா சகோதரனே போற்றி
    46. செந்தாமரைப் பிரியனே போற்றி
    47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
    50. சொக்கநாதர் பிரியனே போற்றி
    51. சௌந்தர்ய ராஜனே போற்றி
    52. ஞான குபேரனே  போற்றி
    53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    56. திருவிழி அழகனே போற்றி
    57. திருவுரு அழகனே போற்றி
    58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
    59. திருநீறு அணிபவனே போற்றி
    60. தீயவை அகற்றுவாய் போற்றி
    61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    62. தூயமனம் படைத்தவனே போற்றி
    63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    64. தேவராஜனே போற்றி
    65. பதுமநிதி பெற்றவனே போற்றி
    66. பரவச நாயகனே போற்றி
    67. பச்சை நிறப் பிரியனே போற்றி
    68. பவுர்ணமி நாயகனே போற்றி
    69. புண்ணிய ஆத்மனே போற்றி
    70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
    71. புண்ணிய புத்திரனே போற்றி
    72. பொன்னிற முடையோனே போற்றி
    73. பொன் நகை அணிபவனே போற்றி
    74. புன்னகை அரசே போற்றி
    75. பொறுமை கொடுப்பவனே போற்றி
    76. போகம்பல அளிப்பவனே போற்றி
    77. மங்கல முடையோனே போற்றி
    78. மங்களம் அளிப்பவனே போற்றி
    79. மங்களத்தில் உறைவாய் போற்றி
    80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    81. முத்து மாலை அணிபவனே போற்றி
    82. மோகன நாயகனே போற்றி
    83. வறுமை தீர்ப்பவனே போற்றி
    84. வரம் பல அருள்பவனே போற்றி
    85. விஜயம் தரும் விவேகனே போற்றி
    86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
    87. வைர மாலை அணிபவனே போற்றி
    88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    89. நடராஜர் பிரியனே போற்றி
    90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
    91. நவரத்தினப் பிரியனே போற்றி
    92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    95. ராவணன் சோதரனே போற்றி
    96. வடதிசை அதிபதியே போற்றி
    97. ரிஷி புத்திரனே போற்றி
    98. ருத்திரப் பிரியனே போற்றி
    99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
    100. வெண்குதிரை வாகனனே போற்றி
    101. கைலாயப் பிரியனே போற்றி
    102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
    104. மாட்சிப் பொருளோனே போற்றி
    105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    106. யௌவன நாயகனே போற்றி
    107. வல்லமை பெற்றவனே போற்றி
    108. குபேரா போற்றி  போற்றி

    - இந்த குபேரன் 108 போற்றியை தினமும் தொடர்ந்து சொல்லி வந்தால் நிறைந்த செல்வ வளத்தை பெறலாம்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த திருவிளக்கு பிரார்த்தனையை தினமும் முறையாக சொல்லி வந்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
    பொதுவில் ஸ்லோகங்கள் சொல்லும் பொழுது ஓரிரு கிராம்பு அல்லது ஏலக்காய் மென்று விழுங்கிதான் இறைவனின் நாமங்களைச் சொல்லுவர். ஏனெனில் சொல்லும் வாய் கூட நல்ல மணத்தோடு இருக்க வேண்டும் என்பதே இதன் கருத்து.

    அவ்வாறு கூறப்பட வேண்டிய திருவிளக்கு பிரார்த்தனை

    விளக்கே திருவிளக்கே வேதனுடன் நற்பிறப்பே
    ஜோதி விளக்கே ஸ்ரீதேவி வெண்மணியே
    அந்தி விளக்கே அலங்காரப் பெண்மணியே
    காந்தி விளக்கே காமாட்சி தேவியரே
    பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரிபோட்டு
    குளம் போல் நெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
    பொட்டும் இட்டேன் குங்குமத்தால் பூமாலை சூட்டி விட்டேன்
    ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குலம் விளங்க
    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும்தான் விளங்க
    மாளிகையிலே ஜோதியுள்ள மாதாவை கண்டு கொண்டேன்
    மாங்கல்ய பிச்சை, மடிப்பிச்சை தாருமம்மா! சந்தானம்
    பிச்சையுடன் தனங்களைத் தாருமம்மா! பெட்டி நிறைய
    பூஷணங்களைத் தாருமம்மா! புகழ் உடம்பைத் தந்து எங்கள்
    பக்கத்தில் நில்லுங்கம்மா! அகத் தெளிவைத் தந்து எந்தன்
    அகத்தினில் வாழுமம்மா!
    நமஸ்தே! நமஸ்தே! நமஸ்தே!!!

    எனக்கூறி நமஸ்கரிக்க வேண்டும்.

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    திருமண தடை, வேலை போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் குரு பகவானின் கவசம் ஒன்று உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.
    மிகவும் அரிதான இந்த கவசத்தை ஒவ்வொரு வியாழக்கிழமையில் காலை 6 முதல் 7 மணி வரை குரு ஹோரை நேரத்தில் பாராயணம் செய்தால் குருபகவானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம் என்பது நம்பிக்கை.

    சீரியன் மனத்துள் வேண்டும்
    சித்தி தந்து அளித்துச் செய்யும்
    பாரியல் கருமம் கூட்டிப்
    பரவுமெய்ஞ் ஞான வாழ்வு
    மேரியல் செல்வப் பேறும்
    யாவையும் ஒருங்கு நல்கும்
    தேரியல் அறிஞன தேவர்
    தேசிகன் திருத்தாள் போற்றி

    அரும் பிருகற்பதிப் பேர்
    ஆண்டகை சென்னி காக்க
    வருந்திரு நெற்றி காக்க
    வானவர் குரவன் கன்னம்
    விரும்பினன் காக்க நாட்டம்
    வேண்டுவ தருவோன் காக்க
    பருங்குமிழ் பொருவு நாசி
    பண்ணவன் அரசன் காக்க

    பாட்டு அமர்செவ்வாய் வேத
    பாரகன் காக்க துண்டம்
    கூட்டு முற்றிவன் காக்க
    குலவரைப் புயம் இரண்டும்
    வேட்டமர் சுகம் தந்து ஆள்வோன்
    விரும்பினன் காக்க செங்கை
    வாட்டும் வச்சிரங் கைக்கொள்ளும்
    வானவன் வழாது காக்க

    பருவரை பொருவு மார்பம்
    பயிலுங்கீட் பதி புரக்க
    விருதனம் வாக்கு வல்லோன்
    என்றும் வந்து எய்திக் காக்க
    வருசுகம் நல்கும் நாதன்
    வயங்கு எழில் வயிறு காக்க
    பொருவரு நீதி வல்லோன்
    பொற்புஉறு நாபி காக்க

    எங்கும் சென்று அளிக்கும்ஈசன்
    எழிற்கடி புரக்க ஊருத்
    தங்கு புண்ணியன் புரக்க
    சங்கமெய்ஞ் ஞானம் ஈயும்
    புங்கவன் புரக்க பாதம்
    புகல் உலகெல்லாமாகும்
    அங்கணன் புரக்க மேனி
    அமர் குருப் புரத்து காக்க
    காலையும் உச்சிப் போதும்
    கதிரவன் குடபான் மேவு
    மாலையும் வானோர் போற்ற

    வருகுரு கவசம் என்னும்
    நூலை அன்போடு உரைக்கும்
    நுண்ணியன் வேட்டாங்கு எய்திச்
    சோலைஅம் தரு விண்ணாட்ட
    சுரரையும் வெற்றி கொள்ளும்
    மறைமிகு கலைநூல் வல்லோன்
    வானவர்க்கு அரசன் மந்திரி
    நறைசொரி கற்பகப் பொன்
    நாட்டினுக்கு அதி பனாகி
    நிறைதனம் சிவிகை மண்ணில்
    நீடு போகத்தை நல்கும்
    இறையவன் குரு வியாழன்
    இருமலர்ப் பாதம் போற்றி போற்றி.!

    - ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்களை நீங்கும் சிவமகா மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
    ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
    ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்
    ஓம் ஆம் ஹ்வும் சவ்ம்

    ஒவ்வொரு மனிதனும் சுயமாக உணரமட்டுமே முடியக்கூடிய விஷயங்களில் ஒன்று இது:

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஏமாற்றுதல், பொய் சொல்லுதல் இந்த ஐந்தும் பஞ்சமா பாதகம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் ஏற்படும் பாவங்களால் நமது முன்னேற்றம் தடைபடுகிறது.

    இந்த மந்திரத்தை, அதிகாலை குளித்துவிட்டு, மேலே சட்டை அணியாமல், ஈராம்காயாத வேஷ்டியுடன், நீ, ஒரே ஒருமுறை, பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால் உனது - அதாவது உன் மனைவி மற்றும் உன் முன்னோர்களாகிய உன் அப்பா அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும்.
    தினமும் சிவனுக்கு உகந்த இந்த நமசிவாய மாலையை சொல்லி வந்தால் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.
    ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாயஓம் ஓம் நமசிவாய

    ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும்
    சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும்
    நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை
    ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே

    சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ
    சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ
    முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ
    அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே

    ஆறு நாடு தேடினும் ஆனை சேனைதேடினும்
    கோடிவாசி தேடினும் குறுக்கே வந்து நிற்குமோ
    ஓடி இட்ட பிச்சையும் உகந்து செய் த தர்மமும்
    சாடிவிட்ட குதிரைபோல் தர்மம் வந்து நிற்குமே

    கண்ணிலே இருப்பவனே கருங்க டல் கடந்துமால்
    விண்ணில் இருப்பவனே மேவி யங்கு நிற்பனே
    தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன்
    என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே

    அண்டமேழு முழலவே யனிந்தயோனி யுழலவே
    பண்டு மாலயனுடன் பரந்து நின்றுழலவே
    எண்டிசை கடந்து நின்றிருண்ட சக்தியுழலவே
    அண்டரண்ட மொன்றதாய் ஆதி நடமாடுமே

    அகார காரணத்திலே யனேகனேக ரூபமாய்
    உகார காரணத்திலே யுருத்தரித்து நின்றனன்
    மகார காரணத்திலே மயங்குநின்ற வையகம்
    சிகார காரணத்திலே தெளிந்ததே சிவாயமே

    பூவும் நீரும் என்மனம் பொருது கோயில் என்னுளம்
    ஆவியோடு லிங்கமா யகண்ட மெங்குமாகிலும்
    மேவு கின்ற ஐவரும் விளங்கு தீப தீப மாய்
    ஆடு கின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தியில்லையே

    ஒன்று மொன்று மொன்றுமே யுலகனைத்து மொன்றுமே
    அன்று மின்று மொன்றுமே அனாதியான தொன்றுமே
    கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பறுத்து நாட்டினால்
    அன்று தெய்வ மும்முள அறிந்ததே சிவாயமே

    ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாற தெங்கனே
    செய்ய திங்களங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
    ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோவில்கொண்டபின்
    வையகத்தில் மாந்தரோடு வாய் திறப்பதில்லையே

    ஆதியுண்டு அந்தமில்லை யன்று நாலு வேதமில்லை
    ஜோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்ததேதுமில்லை
    ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்
    ஆதியன்று தன்னையும் யாரறிவாரண்ணலே

    மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும்
    மூன்று மஞ்செழுத்துமாய் முழங்கு மவ்வெழுத்துளே
    ஈன்ற தாயும் அப்பரும் இயங்குகின்ற நாதமும்
    தோன்று மண்டலத்திலே சொல்ல வெங்குதில்லையே

    கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
    ஞானமற்ற நெஞ்சகத்தில் வல்லதேது மில்லையே
    ஊனமுற்ற ஜோதியோடு உணர்வு சேர்த்தடக்கினால்
    தேனதத்தினூரல் போல் தெளிந்ததே சிவாயமே

    தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
    செங்கண்மாலு மீசனும் சிறந்திருந்த தெம்முளே
    விங்களங்கள் பேசுவாய் விளங்குகின்ற மாந்தரே
    எங்குமாகி நின்ற நாமம் நாமறிந்த நாமமே

    தாய் தந்தை குருவும் நீ சகல தேவகணங்கள் நீ
    சிந்தை நீ தெளிவும் நீ சித்தி முக்தி தானும் நீ
    விந்தும் நீ வினையும் நீ மேலதாய வேதம் நீ
    எந்தை நீ இறைவன் நீ என்னையாண்ட ஈசன் நீ

    சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
    சக்தியற்று சம்புவற்று ஜாதி பேதமற்றுநன்
    முக்தியற்று மூலமற்று மூல மந்திரங்களும்
    வித்தை யித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே

    நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நின்றதொன்றுதான்
    நல்லதென்ற போது நல்லதாகி நின்றபின்
    நல்லதல்ல கெட்டதென்றால் கெட்டதாகுமாதலால்
    நல்லதொன்று நாடிநின்று நாமஞ் சொல்லவேண்டுமே

    பார்த்து நின்ற தம்பலம் பரமனாடுந் தம்பலம்
    கூத்து நின்ற தம்பலம் கோரமான தம்பலம்
    வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலம்
    சீற்றமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே

    விண்ணினின்று மின்னெழுந்து மின்னோடுங்குவாறு போல்
    எண்ணுள் நின்று எண்ணுமீசன் என்னகத்திருக்கையால்
    கண்ணினின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்
    எண்ணுள்நின்ற என்னையும் நானறிந்ததில்லையே

    உருக்கலந்த பின்னலோ வுன்னை நானறிந்ததும்
    இருக்கிலென் மறக்கிலென் இணைந்திருந்தபோதெல்லாம்
    உருக்கலந்து நின்றபோது நீயும் நானும் ஒன்றலோ
    திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே

    சிவாய வென்ற வக்ஷரம் சிவனிருக்கு மக்ஷரம்
    உபாய மென்று நம்புதற்கு உண்மையான வக்ஷரம்
    கபாடமற்ற வாசலைக்கடந்து போன வாயுவை
    உபாய மிட்டழைத்துமே சிவாய வஞ்செழுத்துமே

    சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து தேவராகலாம்
    சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து வானமாவலாம்
    சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொண்டவான் பொருள்
    சிவாய மஞ்செழுத்திலே தெளிந்து கொள்ளுமுண்மையே
    சிவன் கோவிலுக்கு செல்லும் போது முதலில் நந்தி தேவரின் முன் நின்று இந்த வணக்கத்தை சொல்லிய பிறகே சிவன் வழிபாடு செய்ய வேண்டும்.
    (ஆடுக ஊஞ்சல் ஆடுகவே என் ற மெட்டு)
    வழிவிடு நந்தி வழிவிடுவே
    வாழ்வில் நாங்கள் வளர்ந்துயர
    வழிவிடு நந்தி ! வழிவிடுவே
    வையகம் வளர வழிவிடுவே. (வழிவிடு)

    எம்பிரான் சிவனைச் சுமப் பவனே
    எல்லா நலனும் தருபவனே
    ஏழைகள் வாழ்வில் இருளகல
    என்றும் அருளைச் சுரப்பவனே. (வழிவிடு)

    நீரில் என்றும் குளிப்பவனே
    நெய்யில் என்றும் மகிழ்பவனே
    பொய்யில்லாத வாழ்வு தர
    பொங்கும் கருணை வாரிதியே. (வழிவிடு)

    உந்தன் கொம்பு இரண்டிடையே
    உமையாள் பாகன் காட்சிதர
    தேவர் எல்லாம் அருள் பெற்றார்
    தேனாய் இனிக்கும் செய்தி அப்பா. (வழிவிடு)

    தேடிய பலனைத் தந்திடுவாய்
    தேவர் போற்றும் நந்திதேவா !
    வாழ்வில் வளமே வந்துயர
    வழியே காட்டி அமைந் திடுவாய். (வழிவிடு)

    நந்தனார் போற்றும் நந்தி தேவா !
    நாலுந் தெரிந்த வல்லவ னே
    எம்பி ரான் அருளை எமக்கருள
    என்றுந் துணையாய் நிற்பவனே. (வழிவிடு)

    பிரதோஷம் என்றால் உன் மகிமை
    பெரிதும் வெளியில் தெரிந்திடுமே
    தேவர்க்குக் காட்சி உன்மூலம்
    தெரியச் செய்த பெரியவனே. (வழிவிடு)
    தினமும் சொல்ல வேண்டிய லட்சுமி நரசிம்மர் 108 பேற்றியை கீழே பார்க்கலாம்.
    பிரதோஷம், செவ்வாய்க்கிழமை, சுவாதி நட்சத்திர நாட்களில் லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் விளக்கேற்றி, பானகம் (எலுமிச்சை, சர்க்கரை கலவை) நிவேதனம் செய்து, இந்த போற்றியை பக்தியுடன் சொல்லுங்கள். துன்பமெல்லாம் தீர்ந்து இன்பம் சேரும்.

    1. ஓம் திருக்கடிகைத் தேவாபோற்றி
    2. ஓம் திருமாமகள் கேள்வாபோற்றி
    3. ஓம் யோக நரசிங்காபோற்றி
    4. ஓம் ஆழியங்கையாபோற்றி
    5. ஓம் அக்காரக் கனியேபோற்றி
    6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய்போற்றி
    7. ஓம் எக்காலத்தும் எந்தாய்போற்றி
    8. ஓம் எழில் தோள் எம்மிராமாபோற்றி
    9. ஓம் சங்கரப்ரியனேபோற்றி
    10. ஓம் சார்ங்க விற்கையாபோற்றி
    11. ஓம் உலகமுண்ட வாயாபோற்றி
    12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மாபோற்றி
    13. ஓம் அடியவர்க்கருள்வாய்போற்றி
    14. ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
    15. ஓம் தாமரைக் கண்ணாபோற்றி
    16. ஓம் காமனைப் பயந்தாய்போற்றி
    17. ஓம் ஊழி முதல்வாபோற்றி
    18. ஓம் ஒளி மணிவண்ணனேபோற்றி
    19. ஓம் ராவணாந்தகனேபோற்றி
    20. ஓம் இலங்கை எரித்த பிரான்போற்றி
    21. ஓம் பெற்ற மாளியேபோற்றி
    22. ஓம் பேரில் மணாளாபோற்றி
    23. ஓம் செல்வ நாரணாபோற்றி
    24. ஓம் திருக்குறளாபோற்றி
    25. ஓம் இளங்குமாரபோற்றி
    26. ஓம் விளக்கொளியேபோற்றி
    27. ஓம் சிந்தனைக்கினியாய்போற்றி
    28. ஓம் வந்தெனை ஆண்டாய்போற்றி
    29. ஓம் எங்கள் பெருமான்போற்றி
    30. ஓம் இமையோர் தலைவாபோற்றி
    31. ஓம் சங்கு சக்கரத்தாய்போற்றி
    32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய்போற்றி
    33. ஓம் வேதியர் வாழ்வேபோற்றி
    34. ஓம் வேங்கடத்துறைவாபோற்றி
    35. ஓம் நந்தா விளக்கேபோற்றி
    36. ஓம் நால் தோளமுதேபோற்றி
    37. ஓம் ஆயர்தம் கொழுந்தேபோற்றி
    38. ஓம் ஆழ்வார்களுயிரேபோற்றி
    39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய்போற்றி
    40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய்போற்றி
    41. ஓம் மூவா முதல்வாபோற்றி
    42. ஓம் தேவாதி தேவாபோற்றி
    43. ஓம் எட்டெழுத்திறைவாபோற்றி
    44. ஓம் எழில்ஞானச் சுடரேபோற்றி
    45. ஓம் வரவரமுனி வாழ்வேபோற்றி
    46. ஓம் வட திருவரங்காபோற்றி
    47. ஓம் ஏனம்முன் ஆனாய்போற்றி
    48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய்போற்றி
    49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய்போற்றி
    50. ஓம் நஞ்சரவில் துயின்றாய்போற்றி
    51. ஓம் மாலேபோற்றி
    52. ஓம் மாயப் பெருமானேபோற்றி
    53. ஓம் ஆலிலைத் துயின்றாய்போற்றி
    54. ஓம் அருள்மாரி புகழேபோற்றி
    55. ஓம் விண் மீதிருப்பாய்போற்றி
    56. ஓம் மண்மீது உழல்வோய்போற்றி
    57. ஓம் மலைமேல் நிற்பாய்போற்றி
    58. ஓம் மாகடல் சேர்ப்பாய்போற்றி
    59. ஓம் முந்நீர் வண்ணாபோற்றி
    60. ஓம் முழுதும் கரந்துறைவாய்போற்றி
    61. ஓம் கொற்றப் புள்ளுடையாய்போற்றி
    62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய்போற்றி
    63. ஓம் அனைத்துலக முடையாய்போற்றி
    64. ஓம் அரவிந்த லோசனபோற்றி
    65. ஓம் மந்திரப் பொருளேபோற்றி
    66. ஓம் இந்திரனுக்கருள்வாய்போற்றி
    67. ஓம் குரு பரம்பரை முதலேபோற்றி
    68. ஓம் விகனைசர் தொழும் தேவாபோற்றி
    69. ஓம் பின்னை மணாளாபோற்றி
    70. ஓம் என்னையாளுடையாய்போற்றி
    71. ஓம் நலம்தரும் சொல்லேபோற்றி
    72. ஓம் நாரண நம்பிபோற்றி
    73. ஓம் பிரகலாதப்ரியனேபோற்றி
    74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய்போற்றி
    75. ஓம் பேயார் கண்ட திருவேபோற்றி
    76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளேபோற்றி
    77. ஓம் ஏமகூட விமானத்து இறைவாபோற்றி
    78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய்போற்றி
    79. ஓம் கல்மாரி காத்தாய்போற்றி
    80. ஓம் கச்சி யூரகத்தாய்போற்றி
    81. ஓம் வில்லியறுத்த தேவாபோற்றி
    82. ஓம் வீடணனுக்கருளினாய்போற்றி
    83. ஓம் இனியாய்போற்றி
    84. ஓம் இனிய பெயரினாய்போற்றி
    85. ஓம் புனலரங்காபோற்றி
    86. ஓம் அனலுருவேபோற்றி
    87. ஓம் புண்ணியாபோற்றி
    88. ஓம் புராணாபோற்றி
    89. ஓம் கோவிந்தாபோற்றி
    90. ஓம் கோளரியேபோற்றி
    91. ஓம் சிந்தாமணிபோற்றி
    92. ஓம் சிரீதராபோற்றி
    93. ஓம் மருந்தேபோற்றி
    94. ஓம் மாமணி வண்ணாபோற்றி
    95. ஓம் பொன் மலையாய்போற்றி
    96. ஓம் பொன்வடிவேபோற்றி
    97. ஓம் பூந்துழாய் முடியாய்போற்றி
    98. ஓம் பாண்டவர்க் கன்பாபோற்றி
    99. ஓம் குடந்தைக் கிடந்தாய்போற்றி
    100. ஓம் தயரதன் வாழ்வேபோற்றி
    101. ஓம் மதிகோள் விடுத்தாய்போற்றி
    102. ஓம் மறையாய் விரிந்த விளக்கேபோற்றி
    103. ஓம் வள்ளலேபோற்றி
    104. ஓம் வரமருள்வாய்போற்றி
    105. ஓம் சுதாவல்லி நாதனேபோற்றி
    106. ஓம் சுந்தரத் தோளுடையாய்போற்றி
    107. ஓம் பத்தராவியேபோற்றி
    108. ஓம் பக்தோசிதனேபோற்றி
    எல்லா ஆபத்துகளும் நீங்கவும், கண் திருஷ்டிகள் அகலவும் கீழே உள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் பிராயாணம் செய்து வந்தால் நல்லது.
    ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
    த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
    நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
    வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

    பொதுப்பொருள்: சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

    (தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.)

    முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம் நீங்க கீழே உள்ள ஸ்லோகத்தை தொடர்ந்து எத்தனை நாட்கள் படித்து வர வேண்டும் என்பதை பார்க்கலாம்.
    த்ரயாணாம் தேவாநாம் திரிகுண ஜநிதாநாம் தவ ஸிவே
    பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
    ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
    ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா:

    (சௌந்தர்யலஹரி-25)

    பொருள் :


    ஈசனின் மனைவியான தேவியே நமஸ்காரம். உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்களால் தோன்றிய நான்முகன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளால் செய்யப்படும் பூஜையாகும். உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன சிம்மாசனத்தின் அருகில் கிரீடங்களுக்கு மேலாகத் தம் கைகளைக் கூப்பியபடி அவர்கள் மூவரும் நின்று கொண்டிருக்கிறார்கள். உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையும் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ?

    - இத்துதியை 45 நாட்கள் தினமும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து 1000 தடவை பாராயணம் செய்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, தடங்கல்கள் எல்லாம் நீங்கி எளிதாகக் கிட்டும்.
    சகல மங்களங்களும் கிடைக்க இந்த ஸ்லோகத்தை பிரதோஷத்தன்று சொல்லி வர வேண்டும்.
    பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
    காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
    பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
    ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
    (மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)

    பொதுப்பொருள் :

    பக்தர்களுடைய மனக்கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம்.

    (ஒவ்வொரு சனிப்பிரதோஷத்தன்றும் இத்துதியை பாராயணம் செய்தால் சிவ அபசாரம் நீங்கி சகல மங்களங்களும் பெருகும்.)
    தேய்பிறை அஷ்டமி நாட்களில் இந்த ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரத்தை சொல்லி வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
    ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
    ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
    சகவம்ஸ ஆபதுத்தோறணாய
    அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
    ஸ்வர்ணாகர்ஷணபைரவாஅய
    மமதாரித்திரிய வித்வேஷணாய
    ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

     
    தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் அமையும் இராகு காலத்தில் ஜபிக்க வேண்டும். மேலும் வெள்ளிகிழமை அன்று 27 திராட்சை மாலையாக போட்டுவந்தால் நினைத்த காரியம் நடைபெறும் இது உண்மை.

    கடன் தொல்லையை தீர்க்கும் இந்த நரசிம்மர் ஸ்தோத்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் கடன் தொல்லையில் இருந்து பூரணமாக விடுபடலாம்.
    இந்த ஸ்லோகத்தை மனமுருக, 108 முறை தினமும் துதித்து வந்தால் விரைவில் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.

    கடன் உங்களுக்கு வரவே வராமல் தடுக்க, புதன் கிழமைகளில், புதன் ஹோரைகளில் ( காலை : ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை ; இரவு எட்டு மணியில் இருந்து 9 மணி வரை ) இந்த ஸ்லோகத்தை கூறி வழிபாடு செய்து வரவும்..

    தேவதாகார்ய ஸித்யர்த்தம் ஸ்பாஸ்தம்ப ஸமுத்பவம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   1.

    லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   2.

    ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ரப்ஜாயுத தாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   3.

    ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ரூஜ விஷநாசநம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  4.

    ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசநம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  5.

    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே   6.

    க்ரூரக்ரஹை: பீடிதாநாம் பக்தாநா மபயப்ரதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  7.

    வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம்
    ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே  8.

    ய இதம் படதே நித்யம் ருணவிமோசந ஸம்ஜ்ஞிதம்
    அந்ருணீ ஜாயதே ஸ்த்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்   9.
    ×