என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனி பகவானுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
    ஓம் அருளுங்கால் இனியனே போற்றி
    ஓம் அண்டியோர்க்காவலனே போற்றி
    ஓம் அலிக்கிரகமே போற்றி
    ஓம் அடர்த்தியிலா கிரகமே போற்றி
    ஓம் அனுஷத்ததிபதியே போற்றி
    ஓம் அன்னதானப் பிரியனே போற்றி
    ஓம் அசுப கிரகமே போற்றி
    ஓம் ஆட்டுவிப்பவனே போற்றி
    ஓம் ஆயுட்காரகனே போற்றி
    ஓம் ஆதியூரில் அருள்பவனே போற்றி

    ஓம் ஆணவமழிப்பவனே போற்றி
    ஓம் இருவாகனனே போற்றி
    ஓம் இளைத்த தேகனே போற்றி
    ஓம் இரும்புத் தேரனே போற்றி
    ஓம் இரும்பு உலோகனே போற்றி
    ஓம் ஈடிலானே போற்றி
    ஓம் ஈசுவரனானவனே போற்றி
    ஓம் உக்கிரனே போற்றி
    ஓம் உத்திரட்டாதி நாதனே போற்றி
    ஓம் உபகிரகமுளானே போற்றி

    ஓம் எமன் அதிதேவதையனே போற்றி
    ஓம் எள் விரும்பியே போற்றி
    ஓம் எவர்க்கும் அஞ்சானே போற்றி
    ஓம் எண்பரித் தேரனே போற்றி
    ஓம் ஏழாம் கிரகனே போற்றி
    ஓம் கரு மெய்யனே போற்றி
    ஓம் கலி புருஷனே போற்றி
    ஓம் கழுகு வாகனனே போற்றி
    ஓம் கருங்குவளை மலரனே போற்றி
    ஓம் கரிய ஆடையனே போற்றி

    ஓம் கருஞ்சந்தனப் பிரியனே போற்றி
    ஓம் கருங்கொடியனே போற்றி
    ஓம் கருநிறக் குடையனே போற்றி
    ஓம் கண்ணொன்றிலானே போற்றி
    ஓம் காகமேறியவனே போற்றி
    ஓம் காசியில் பூசித்தவனே போற்றி
    ஓம் காரியே போற்றி
    ஓம் காற்றுக் கிரகமே போற்றி
    ஓம் குளிர்க் கோளே போற்றி
    ஓம் கும்பராசி அதிபதியே போற்றி

    ஓம் குச்சனூர்த் தேவனே போற்றி
    ஓம் குளிகன் தந்தையே போற்றி
    ஓம் குறுவடிவனே போற்றி
    ஓம் கொள்ளிக்காட்டில் அருள்பவனே போற்றி
    ஓம் கைப்புச்சுவையனே போற்றி
    ஓம் சடையனே போற்றி
    ஓம் சமரிலானே போற்றி
    ஓம் சனிவிரதப் பிரியனே போற்றி
    ஓம் சனிவார நாயகனே போற்றி
    ஓம் சாயை புத்ரனே போற்றி

    ஓம் சுடரோன் சேயே போற்றி
    ஓம் சூரனே போற்றி
    ஓம் சூலாயுதனே போற்றி
    ஓம் சூர்ய சத்ருவே போற்றி
    ஓம் சுக்ர நண்பனே போற்றி
    ஓம் சிவனடியானே போற்றி
    ஓம் சிவபக்தர்க்கடியானே போற்றி
    ஓம் சீற்றனே போற்றி
    ஓம் செயலறச் செய்பவனே போற்றி
    ஓம் தமோகணனே போற்றி

    ஓம் தண்டாயுதனே போற்றி
    ஓம் தசரதனுக்கருளியவனே போற்றி
    ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
    ஓம் தீபப் பிரியனே போற்றி
    ஓம் திருநள்ளாற்றுத் தேவனே போற்றி
    ஓம் துலாராசியிலுச்சனே போற்றி
    ஓம் துயரளித்தருள்வோனே போற்றி
    ஓம் தைரியனே போற்றி
    ஓம் தொலை கிரகமே போற்றி
    ஓம் நம்பிக்கிரங்கியவனே போற்றி

    ஓம் நளனைச் சோதித்தவனே போற்றி
    ஓம் நீலவண்ணப் பிரியனே போற்றி
    ஓம் நீண்டகாலச் சுழலோனே போற்றி
    ஓம் பத்தொன்பதாண்டாள்பவனே போற்றி
    ஓம் பயங்கரனே போற்றி
    ஓம் பக்கச் சுழலோனே போற்றி
    ஓம் பத்மபீடனே போற்றி
    ஓம் பத்திரை சோதரனே போற்றி
    ஓம் பிணிமுகனே போற்றி
    ஓம் பிரபலனே போற்றி

    ஓம் பீடிப்பவனே போற்றி
    ஓம் ப்ரஜாபதி ப்ரத்யதி தேவதையனே போற்றி
    ஓம் புஷ்பப்பிரியனே போற்றி
    ஓம் புதன்மித்ரனே போற்றி
    ஓம் பூசத் ததிபதியே போற்றி
    ஓம் பேதமிலானே போற்றி
    ஓம் பைய நடப்பவனே போற்றி
    ஓம் போற்றப்படுபவனே போற்றி
    ஓம் மகரத்தாள்பவனே போற்றி
    ஓம் மாங்கல்ய காரகனே போற்றி

    ஓம் மதிப்பகையே போற்றி
    ஓம் மநு சோதரனே போற்றி
    ஓம் முடவனே போற்றி
    ஓம் முதுமுகனே போற்றி
    ஓம் மும்முறை பீடிப்பவனே போற்றி
    ஓம் மூபத்தாண்டில் சுற்றுபவனே போற்றி
    ஓம் மேல் திசையனே போற்றி
    ஓம் மேற்கு நோக்கனே போற்றி
    ஓம் யமுனை சோதரனே போற்றி
    ஓம் யமனுடன் பிறந்தோனே போற்றி

    ஓம் வன்னி சமித்தனே போற்றி
    ஓம் வலிப்பு தீர்ப்பவனே போற்றி
    ஓம் வக்கரிப்பவனே போற்றி
    ஓம் வளை மூன்றுளானே போற்றி
    ஓம் வில்லேந்தியவனே போற்றி
    ஓம் வில்வப்பிரியனே போற்றி
    ஓம் ஸ்ரம் பீஜ மந்திரனே போற்றி
    ஓம் சனீச்வரனே போற்றி
    சகல சந்தோஷங்களும் கிடைக்க தினமும் வழிபாடு செய்யும் போது சிவபெருமானை நினைத்து சொல்ல வேண்டிய ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் விரிவாக பார்க்கலாம்.
    நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய
    பஸ்மாங்கராகாய மஹேஸ்வராய!
    நித்யாய ஸுத்தாய திகம்பராய
    தஸ்மை நகாராய நம ஸிவாய!!

    பொருள்: பாம்பு மாலை சூடியவரே! முக்கண்களைக் கொண்டவரே! திருநீறு அணிந்தவரே! மகேஸ்வரரே! நித்யமானவரே! பரிசுத்தமானவரே! திசைகளை ஆடையாக அணிந்தவரே! பஞ்சாட்சர மந்திரமான நமசிவாய என்பதன் வடிவமானவரே! சிவபெருமானே! உம்மை வணங்குகிறேன்.
    நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம். இந்த காயத்ரி மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
    ராம தூதரான ஆஞ்சநேயருக்கு பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் என பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். அனுமன் ராமாயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். பல சாகசச் செயல்களைச் செய்து காட்டியவர். சீதையைத் தேடி கண்டுபிடிக்க கடலைத் தாண்டியவர். வாலியிடம் இருந்து சுக்ரீவனைக் காத்தவர். ராவணனின் மகன்களைக் கொன்றவர். இலங்காபுரியை தீக்கிரையாக்கியவர்.

    ராமர் கொடுத்த மோதிரத்தை சீதையிடமும், சீதை கொடுத்த சூடாமணியை ராமனிடமும் கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை படரச் செய்தவர். வேகத்தில் தந்தை வாயுவுக்கு சமமான அனுமன், புத்திக்கூர்மை, தைரியம், பராக்கிரமம், சக்தி, தேஜஸ் போன்றவற்றில் ராமனுக்கு நிகரானவர். இந்திரஜித் எய்த நாகபாணத்தால், மூர்ச்சையாகி விழுந்த லட்சுமணனைக் காப்பாற்ற, சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து, தனது உள்ளங்கையில் தாங்கியபடி வந்தவர். மகாபாரதப் போரில், அர்ச்சுனனின் தேர் கொடியில் இருந்து, அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர் அனுமன். ஆஞ்சநேயரின் விஸ்வரூபம் சீதைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே விஸ்வரூபம் பீமனுக்கு பயத்தைக் கொடுத்தது.

    பொதுவாக பல இடங்களில் ஆஞ்சநேயர் இடது கையால் சஞ்சீவி மலையையும், வலது கையால் கதையையும் தாங்கியபடி இடுப்பில் சிவந்த ஆடையை உடுத்திக்கொண்டும், மார்பில் மணிமாலையை அணிந்தபடியும், இதயத்தில் ஸ்ரீராமரின் சரணங்களையும், வாக்கில் ஸ்ரீராம நாமத்தையும் தரித்துக் கொண்டு, பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் தோற்றத்தில் காணப்படுகிறார். நமது விருப்பங்கள் நிறைவேற கீழ்கண்ட ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தைத் தினமும் 108 தடவை சொல்லி வரலாம்.

    ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
    வாயுபுத்ராய தீமஹி
    தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்’

    நாம் ஆஞ்சநேயரை அறிந்து கொள்வோம். வாயுவின் புத்திரனான அவர் மீது தியானம் செய்வோம். அனுமன் என்னும் பெயர் கொண்ட அவர் நம்மை காத்து அருள்புரிவார் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால், தம்பதியர் ஒற்றுமை ஏற்படும். எடுத்த காரியம் வெற்றியாகும். பகைவர்கள் விலகுவர். கவலைகள் அகலும். நாவன்மை பிறக்கும்.
    பிரச்சனைகள் தீர இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்து வர வேண்டும்.
    எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

    ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
    வக்ர துண்டாய தீமஹி
    தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

    இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.

    இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும். உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும். இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும். இது அனுபவ உண்மை.

    ஒம் கம் கணபதியே நமஹ

    இது கணபதியின் மூல மந்திரம். இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும். இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும். இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை. இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!
    முருகனை பிரதான தெய்வமாக கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு அருள் அவன் அருள் வழங்குவான். கீழே முருகனுக்கு உகந்த ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    ’ஐயனே என்ற அடியார்க்கு அருள்வான் ஆறுமுகன்’ இது அருள் வாக்கு. முருகனை பிரதான தெய்வமாக கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு அருள் அவன் அருள் வழங்குவான்.

    ஆறுமுகம் படைத்த ஐயனே சரணம்
    ஆதிசிவன் குமரா அப்பனே சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்
    அடியார்க்கு அருள்வாய் அப்பனே சரணம்
    ஆடும் மயில் ஏறும் ஆண்டவா சரணம்
    ஐங்கரனுக்கு இளையா ஆறுமுகா சரணம்
    முருகனே மால்மருகனே சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்
    வள்ளிமணவாளனே வடிவேலா சரணம்
    புள்ளிமயில் மேலே வருவோனே சரணம்
    குஞ்சரி மனமகிழ் குமரேசா சரணம்
    கோபாலன் மருகனே குருபரா சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்
    பண்டார வேடம் கொண்ட பழனியப்பா சரணம்
    பழமுதிர்ச் சோலையில் வாழ்பவனே சரணம்
    கழுகுமலை வாழும் கந்தா சரணம்
    காத்திடுவாய் எங்களை கதிர்வேலா சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரவணபவ ஓம் சண்முகா சரணம்.
    துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
    1. ஓம் அனுமனே போற்றி
    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
    3. ஓம் அறக்காவலனே போற்றி
    4. ஓம் அவதார புருஷனே போற்றி
    5. ஓம் அறிஞனே போற்றி
    6. ஓம் அடக்கவடிவே போற்றி
    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    15. ஓம் இசை ஞானியே போற்றி
    16. ஓம் இறை வடிவே போற்றி
    17. ஓம் ஒப்பிலானே போற்றி
    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
    19. ஓம் கதாயுதனே போற்றி
    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
    22. ஓம் கர்மயோகியே போற்றி
    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    25. ஓம் கடல் தாவியவனே போற்றி
    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    29. ஓம் கூப்பிய கரனே போற்றி
    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
    39. ஓம் சூராதி சூரனே போற்றி
    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    44. ஓம் சோக நாசகனே போற்றி
    45. ஓம் தவயோகியே போற்றி
    46. ஓம் தத்துவஞானியே போற்றி
    47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
    49. ஓம் தீதழிப்பவனே போற்றி
    50. ஓம் தீயும் சுடானே போற்றி
    51. ஓம் நரஹரியானவனே போற்றி
    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    55. ஓம் பண்டிதனே போற்றி
    56. ஓம் பஞ்சமுகனே போற்றி
    57. ஓம் பக்தி வடிவனே போற்றி
    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    66. ஓம் பீம சோதரனே போற்றி
    67. ஓம் புலனை வென்றவனே போற்றி
    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    69. ஓம் புண்ணியனே போற்றி
    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    71. ஓம் மதி மந்திரியே போற்றி
    72. ஓம் மனோவேகனே போற்றி
    73. ஓம் மாவீரனே போற்றி
    74. ஓம் மாருதியே போற்றி
    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    79. ஓம் ராமதாசனே போற்றி
    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    81. ஓம் ராமதூதனே போற்றி
    82. ஓம் ராம சோதரனே போற்றி
    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    93. ஓம் லங்கா தகனனே போற்றி
    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
    96. ஓம் வாயுகுமாரனே போற்றி
    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
    101. ஓம் விஸ்வரூபனே போற்றி
    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
    தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த 108 போற்றியை சொல்லி பைரவர் வழிபாடு செய்தால் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். அந்த 108 போற்றியை கீழே பார்க்கலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம். பைரவர் சன்னதி முன்பு கூட்டாக அமர்ந்து, ஒருவர் சொல்ல மற்றவர்கள் திருப்பிச் சொல்லலாம்.

    01. ஓம் பைரவனே போற்றி
    02. ஓம் பயநாசகனே போற்றி
    03. ஓம் அஷ்டரூபனே போற்றி
    04. ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    05. ஓம் அயன்குருவே போற்றி

    06. ஓம் அறக்காவலனே போற்றி
    07. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    08. ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    09. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    11. ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    12. ஓம் ஆலயக்காவலனே போற்றி
    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    14. ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
    15. ஓம் உக்ர பைரவனே போற்றி

    16. ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
    17. ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
    18. ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    19. ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    20. ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் எல்லை தேவனே போற்றி
    22. ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    23. ஓம் கபாலதாரியே போற்றி
    24. ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    25. ஓம் கர்வ பங்கனே போற்றி

    26. ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    27. ஓம் கதாயுதனே போற்றி
    28. ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
    29. ஓம் கருமேக நிறனே போற்றி
    30. ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    31. ஓம் களவைக் குலைப்போனே போற்றி
    32. ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    33. ஓம் கால பைரவனே போற்றி
    34. ஓம் காபாலிகர் தேவனே போற்றி
    35. ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    36. ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
    37. ஓம் காசிநாதனே போற்றி
    38. ஓம் காவல்தெய்வமே போற்றி
    39. ஓம் கிரோத பைரவனே போற்றி
    40. ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    41. ஓம் சண்ட பைரவனே போற்றி
    42. ஓம் சட்டை நாதனே போற்றி
    43. ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    44. ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
    45. ஓம் சிவத்தோன்றலே போற்றி

    46. ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
    47. ஓம் சிக்ஷகனே போற்றி
    48. ஓம் சீர்காழித்தேவனே போற்றி
    49. ஓம் சுடர்ச்சடையனே போற்றி
    50. ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    51. ஓம் சிவ அம்சனே போற்றி
    52. ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    53. ஓம் சூலதாரியே போற்றி
    54. ஓம் சூழ்வினை அறுப்பவனே போற்றி
    55. ஓம் செம்மேனியனே போற்றி

    56. ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    57. ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
    58. ஓம் தலங்களின் காவலனே போற்றி
    59. ஓம் தீது அழிப்பவனே போற்றி
    60. ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    61. ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    62. ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    63. ஓம் நவரச ரூபனே போற்றி
    64. ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
    65. ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    66. ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    67. ஓம் நாய் வாகனனே போற்றி
    68. ஓம் நாடியருள்வோனே போற்றி
    69. ஓம் நிமலனே போற்றி
    70. ஓம் நிர்வாணனே போற்றி

    71. ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    72. ஓம் நின்றருள்வோனே போற்றி
    73. ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    74. ஓம் பகையளிப்பவனே போற்றி
    75. ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    76. ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
    77. ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
    78. ஓம் பால பைரவனே போற்றி
    79. ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
    80. ஓம் பிரளயகாலனே போற்றி

    81. ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
    82. ஓம் பூஷண பைரவனே போற்றி
    83. ஓம் பூதங்களின் நாதனே போற்றி
    84. ஓம் பெரியவனே போற்றி
    85. ஓம் பைராகியர் நாதனே போற்றி

    86. ஓம் மல நாசகனே போற்றி
    87. ஓம் மகோதரனே போற்றி
    88. ஓம் மகா பைரவனே போற்றி
    89. ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
    90. ஓம் மகா குண்டலனே போற்றி

    91. ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    92. ஓம் முக்கண்ணனே போற்றி
    93. ஓம் முக்தியருள்வோனே போற்றி
    94. ஓம் முனீஸ்வரனே போற்றி
    95. ஓம் மூலமூர்த்தியே போற்றி

    96. ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    97. ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    98. ஓம் ருத்ரனே போற்றி
    99. ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
    100. ஓம் வடுக பைரவனே போற்றி

    101. ஓம் வடுகூர் நாதனே போற்றி
    102. ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
    103. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    104. ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    105. ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    106. ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
    107. ஓம் விபீஷண பைரவனே போற்றி
    108. ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
    கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
    மகாவிஷ்ணுவின் வாகனங்களில் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுபவர் கருடன். பறவைகளுக்கு தலைவனாக விளங்குபவர் இவர். கருடன் பிறந்தபோது, அவரது தாய் வினதை அடிமை வாழ்வில் இருந்தார். சொந்த சகோதரியான கத்ரு தான், அவரை அடிமையாக வைத்திருந்தாள்.

    இந்திரனிடம் உள்ள அமிர்தத்தை கொண்டு வந்தால், வினதையை விடுவிப்பதாக கூறினாள் கத்ரு. எனவே தேவலோகம் சென்று, இந்திரனுடன் பேரிட்டு அமிர்தத்தைக் கொண்டு வந்தார் கருடன். இதையடுத்து வினதை விடுவிக்கப்பட்டார். வினதை விடுதலையானதும், கத்ருவிடம் இருந்த அமிர்தத்தை எடுத்துச் சென்று மீண்டும் தேவலோகத்திலேயே ஒப்படைத்துவிட்டார் கருடன்.

    அவரது வீரச் செயல்களைக் கண்ட மகாவிஷ்ணு, கருடனை தன்னுடைய முதன்மை வாகனமாக ஏற்றுக்கொண்டார். மகாவிஷ்ணு, மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம் போன்றவை பற்றி கருடனிடம் கூறிய விவரங்களே ‘கருட புராணம்’ என்று அழைக்கப்படுகிறது. நம்மில் பெரும்பாலானவர்கள், வீட்டை விட்டு வெளியே வரும்போது கருடன் வானில் தென்பட்டால், நல்ல சகுனம் என்று கருதுவது வழக்கத்தில் இருக்கிறது. அழகிய சிறகுகளைக் கொண்ட கருடன், சர்ப்பங்களை உணவாகக் கொள்பவர். எனவே இவரை வழிபட்டால் நாகதோஷம் விலகும் என்று கூறப்படுகிறது.

    தன்னை வழிபடும் பக்தர்களின் குறைகளை கருடன், தன்னுடைய எஜமானரான மகாவிஷ்ணுவிடம் கொண்டு செல்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கருடனை வழிபடும் போது கருட காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வழிபட்டால், நினைத்த காரியங்கள் எளிதாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

    கருட காயத்ரி மந்திரம்

    ‘ஓம் தத்புருஷாய வித்மஹே
    ஸூவர்ண பட்சாய தீமஹி
    தன்னோ கருடஹ் ப்ரசோதயாத்’

    பரம புருஷனை அறிந்து கொள்வோம். சொர்ணத்தைப் போல் ஒளிவீசும் அவன் மீது தியானம் செய்வோம். கருட பகவானான அவர் நம்மை காத்து அருள் செய்வார் என்பது இதன் பொருளாகும்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து கருடனை வழிபடுபவர்களுக்கு, விஷ ஜந்துகளால் ஆபத்து நேராது. தத்துவ அறிவு உண்டாகும். கருடனைத் துதித்தால் நாராயணனின் அருளும் கிடைக்கும். பகை விலகும். ஆபத்து அகலும். நல்ல காரியங்கள் நடந்தேறும்.
    முருகனுக்கு உகந்த இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை வளமாக்கும்.
    ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
    தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

    இம்மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறந்து விளங்கும். ஏனென்றால் புராண காலத்தில் முருகன் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர்தான் குரு பகவானின் பரிகாரத்தலமாக இருந்துள்ளது.
    சனிக்கிழமை மற்றும் பெருமாளுக்கு உகந்த நாட்களில் பாட வேண்டிய திருவேங்கடனின் திருநாமங்களை கீழே பார்க்கலாம். படித்து பலன் பெறுங்கள்.
    வேங்கடாசா வாசுதேவ:
    வாரி ஜாஸந வந்தித:
    ஸ்வாமி புஷ்கரிணி வாஸ:
    சங்கு சக்ர கதாதர:
    பீதாம் பரதரோ தேவ:
    கரூடா ரூட சோபித:
    விஸவாத்மா விஸ்வலோகச:
    விஜயோ வேங்கடேஸவரா:
    அர்ச்சனைகள், சுலோகங்களை சொல்லிய பிறகு, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வர வேண்டும்.
    மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றாக கூறப்படுவது ராம அவதாரம். ஒழுக்கத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர். ஆகையால்தான் அவர் இப்போதும் மக்களின் மனதில் தெய்வமாக குடிகொண்டு வாழ்ந்து வருகிறார். கவுசல்யாதேவி குழந்தை வரம் வேண்டி, ரங்கநாதரை வழிபட்டு வந்தார். அந்த ரங்கநாதரே, ஸ்ரீராமனாக அவதரித்து வந்தார். ஸ்ரீராமன் சத்தியத்தினாலேயே பகைவர்களை அழிப்பவர். ஒரு இல், ஒரு வில், ஒரு சொல் என்ற தத்துவப்படி வாழ்க்கை நடத்தியவர். தேவர்களுக்கெல்லாம் அரசனாக இந்திரன் இருப்பதுபோல, உலக உயிர்களுக்கெல்லாம் அரசனாக ராமன் விளங்குகிறார்.

    ஸ்ரீராமரின் கதையைக் கேட்பவர்கள், எல்லாப் பயன்களையும் அடைவர் என்பது நம்பிக்கை. மேலும் ராமாயணத்தையோ அல்லது அதன் ஒரு பாகமாகிய சுந்தரகாண்டத்தையோ படித்து வந்தால், மனதால் எதை நினைக்கிறோமோ அவையெல்லாம் கைகூடும். தந்தை- தாய்க்கு சிறந்த தனயனாக, உடன் பிறந்தவர்களுக்கு இனிய சகோதரனாக, மனைவிக்கு சிறந்த கணவனாக, மக்களுக்கு ஒப்பற்ற அரசனாக, குருவிற்கு சிறந்த மாணவனாக என்று பலவற்றிலும் சிறப்பாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர்.

    தினமும் ராம நாமத்தைச் சொன்னாலே நற்பலன்கள் ஏற்படும். அதிலும் ராம காயத்ரியை சொல்வதால் சிறப்புமிக்க பலன்களைப் பெறலாம். ஸ்ரீராமர் சம்பந்தப்பட்ட அர்ச்சனைகள், சுலோகங்கள் முதலியவற்றை சொல்லிய பிறகு, கற்பூர தீபம் காட்டும் போது, ராம காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரித்து வர வேண்டும்.

    ராம காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் தஸரதாய வித்மஹே
    ஸீதாவல்லபாய தீமஹி
    தந்நோ ராமஹ் ப்ரசோதயாத்’.

    தசரதனின் மகனை அறிந்து கொள்வோம். சீதாதேவியின் கணவன் மீது தியானம் செய்வோம். அந்த ஸ்ரீராமன் நமக்கு எல்லா நலன்களையும் வழங்கி அருள் செய்வான் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வருவதால், ஆபத்து காலங்களில் நன்மை விளையும். புத்திரப்பேறு உண்டாகும். பகை விலகும். ஒழுக்கமாக வாழ வழி வகுக்கும். எண்ணிய வாழ்வு அமையும். பாவங்கள் அகலும். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். தத்துவார்த்தமான ஞானம் பெறலாம்.

    சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலையை அவிழ்த்து விரதத்தை முடித்துக் கொள்ளும் போது சொல்ல வேண்டிய மந்திரத்தை கீழே பார்க்கலாம்.
    அபூர்வ மசால ரோஹி
    திவ்ய தரிசன காரிணே
    சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
    தேஹிமே விரத விமோசனம்
    ×