என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகத்தை தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.
    நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
    சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 1


    வணக்கத்திற்கு உரியவளாகி சகலருடைய சித்தத்தையும் கவர்ந்து விருப்பங்களில் செலுத்தும் மஹா மாயை ஆனவள். ஸ்ரீ பீடத்தில் நிலைத்து வசிப்பவள். தேவர்களால் வழிபடப்படுபவளும் சங்கு சக்கரம் கதை இவற்றைத் திருக்கரங்களில் தாங்கியிருப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி
    ஸர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 2


    கருடவாகனத்தில் ஆரோகணித்து வருபவள். கோலாசுரன் என்னும் கொடியவனுக்கு பயங்கரியாகி, அவனை அழித்தவள். எல்லா பாவங்களையும் அழிப்பவளும்  ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
    ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 3


    உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவள். அனைத்து வரங்களையும் அளிப்பவள். எல்லா தீமைகளுக்கும் பயங்கரியாக விளங்குபவளும் எல்லா துக்கங்களையும் தீர்ப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஸித்தி புத்தி ப்ரதே தேவி புத்தி முக்தி ப்ரதாயினி
    மந்த்ர மூர்த்தே ஸதாதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 4


    அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்வீக வெற்றியினை அருள்பவள். மோக்ஷத்திற்கான நல்ல ஞானத்தை அளிப்பவளும் மந்த்ரங்களின் வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மகேஸ்வரி
    யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 5


    முதலும்  முடிவும் அற்ற தேவியானவள். பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவள். யோக நிலையில் தோன்றியவளும் யோக வடிவாகத் திகழ்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    ஸ்தூல சூக்ஷ்ம மஹாரெளத்ரே மகாசக்தி மகோதரே
    மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 6


    பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவள். எளிதில் உணரப்பட முடியாதவள். (பிழைகளைக் காணுங்கால்) எல்லையற்ற கோபம் உடையவள். அளவிடற்கரிய பெரும் சக்தி என விளங்குபவளும் பெரும் பாவங்களைத் தொலைப்பவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
    பரமேஸி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 7


    பத்மாசனத்தில் அமர்ந்தவள். பரப்ரம்மத்தின் வடிவாகத் திகழ்பவள். பரமேஸ்வரி என விளங்குபவளும் அகில உயிர்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே!.. உன்னை வணங்குகின்றேன்.

    ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
    ஜகஸ்திதே ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே 8


    தூய வெண்ணிற ஆடையுடன் இலங்குபவள். பலவிதமான  அலங்காரங்கள் கொண்டு திகழ்பவள். பூவுலகெங்கும் வியாபித்திருப்பவளும் அகில உலகங்களுக்கும் அன்னை என ஆனவளும் ஆகிய மஹாலக்ஷ்மியே! உன்னை வணங்குகின்றேன்.

    மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம்ய படேத் பக்திமான்நர
    ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா 9


    மஹாலக்ஷ்மி அஷ்டகத்தினைச் சொல்லி மனப்பூர்வமாகத் துதிப்பவர் எல்லா இடர்களையும் வென்று மனோராஜ்யங்களை அடைந்தவராகி இருப்பர்.

    ஏக காலம் படேந் நித்யம் மஹாபாப விநாஸனம்
    த்வி காலம் ய படேந் நித்யம் தன தான்ய ஸமன்வித
    திரி காலம் ய படேந் நித்யம் மஹாசத்ரு விநாஸனம்
    மஹாலக்ஷ்மிர் பவேந் நித்யம் ப்ரஸன்ன வரதா ஸுபா 10


    தினமும் ஒரு முறை சொல்லி வழிபடுபவரின் பெரும் பாப வினைகள் அழியும். தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும். தினமும் மூன்று முறை சொல்லி வழிபடுபவர் (ஐம்புலன் எனும்) எதிரிகளை எளிதாக வெல்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் பேரருளைப் பெற்று உய்வர். ஸ்ரீ மஹாலக்ஷ்மி அவர் நெஞ்சகத்தில் நிலைத்து நிற்பாள்.
    ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள், ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் தவறாமல் அவசியம் பாலாவை வழிபட வேண்டும்.
    1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்:

    ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|
    இதில் சௌம் என்பதை “சௌஹ¨ம் “என்று சொல்லுவது சிறந்தது.

    ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

    க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை தரும்.

    சௌஹம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம். சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

    இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள் மந்திரத்தை முறையாய் ஜெபித்து வந்தால் ஆன்மீகத்திலும், வாழ்விலும் உயர்ந்த நிலையை அடையலாம்.

    2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:

    ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

    3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:

    ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

    முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

    வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள் நம் அனைவரையும் வாழ்விலும் ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர வழிகாட்ட, உறுதுணையாய் நிற்க உதவுகிறது. எனவே ஆத்ம ஞானம் பெற விரும்புபவர்கள், ஆத்மாவை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் தவறாமல் அவசியம் பாலாவை வழிபட வேண்டும்.
    வாழ்வில் நடக்கும் பல்வேறு துன்பம், நோயிலிருந்து விடுபட பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் பாராயாணம் செய்து பயன்பெறுங்கள்.
    ஓம் ஷண்முக பதயே நமோ நம
    (ஓம் ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷண்மத பதயே நமோ நம
    (ஓம் ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
    (ஓம் ஆறு திருக்கழுத்துக்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம
    (ஓம் ஆறு கிரீடங்களை அணிந்துள்ள தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்கோண பதயே நமோ நம
    (ஓம் அறுகோணச் சக்கரத்தில் எழுந்தருளியிருக்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷட்கோச பதயே நமோ நம
    (ஓம் ஆறு தோத்திர நூல்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நவநிதி பதயே நமோ நம
    (ஓம் ஒன்பது வகையான செல்வங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சுபநிதி பதயே நமோ நம
    (ஓம் பேரின்பச் செல்வத்தின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நரபதி பதயே நமோ நம
    (ஓம் அரசர் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சுரபதி பதயே நமோ நம
    (ஓம் தேவர்கள் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நடச்சிவ பதயே நமோ நம
    (ஓம் நடனம் ஆடும் சிவனின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
    (ஓம் ஆறெழுத்துத் தலைவனுக்கு வணக்கம் )

    ஓம் கவிராஜ பதயே நமோ நம
    (ஓம் கவியரசர் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் தபராஜ பதயே நமோ நம
    (ஓம் தவத்தினருக்கு அரசான தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் இகபர பதயே நமோ நம
    (ஓம் இம்மை இன்பத்தையும் மறுமை இன்பத்தையும் அளிக்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் புகழ்முனி பதயே நமோ நம
    (ஓம் திருப்புகழ் பாடிய முனிவராகிய அருணகிரிநாதரின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஜயஜய பதயே நமோ நம
    (ஓம் மிகுந்த வெற்றியையுடைய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் நயநய பதயே நமோ நம
    (ஓம் மிக்க நன்மையும் இன்பமும் தரும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மஞ்சுள பதயே நமோ நம
    (ஓம் அழகுருவான தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் குஞ்சரி பதயே நமோ நம
    (ஓம் தேவகுஞ்சரி எனும் தெய்வயானை அம்மையின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் வல்லீ பதயே நமோ நம
    (ஓம் வள்ளியம்மை தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மல்ல பதயே நமோ நம
    (ஓம் மற்போரில் வல்ல தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
    (ஓம் கைவிடு படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
    (ஓம் கைவிடாப் படைகளின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
    (ஓம் சஷ்டி திதியில் அமைந்த கந்த விரத்தத் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் இஷ்டி பதயே நமோ நம
    (ஓம் வேள்வித் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அபேத பதயே நமோ நம
    (ஓம் வேற்றுமையற்ற தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் சுபோத பதயே நமோ நம
    (ஓம் மெய்ஞ்ஞானம் அருளும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் வியூஹ பதயே நமோ நம
    (ஓம் சேனைகளின் படைவகுப்புத் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மயூர பதயே நமோ நம
    (ஓம் மயூர நாதனுக்கு வணக்கம்)

    ஓம் பூத பதயே நமோ நம
    (ஓம் பூத வீரர்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் வேத பதயே நமோ நம
    (ஓம் வேதங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் புராண பதயே நமோ நம
    (ஓம் புராணங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் பிராண பதயே நமோ நம
    (ஓம் ஆன்மாவின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் பக்த பதயே நமோ நம
    (ஓம் அடியார்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் முக்த பதயே நமோ நம
    (ஓம் பாச பந்தங்களினின்றும் விடுபட்டவர்களுடைய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அகார பதயே நமோ நம
    (ஓம் அகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் உகார பதயே நமோ நம
    (ஓம் உகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் மகார பதயே நமோ நம
    (ஓம் மகாரம் எனும் வியட்டிப் பிரணவமாய் விளங்கும் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் விகாச பதயே நமோ நம
    (ஓம் எங்கும் நிறைந்துள்ள இறைவனுக்கு வணக்கம்)

    ஓம் ஆதி பதயே நமோ நம
    (ஓம் எல்லாவற்றிற்கும் முதற்காரணமாகிய தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் பூதி பதயே நமோ நம
    (ஓம் சகல ஐசுவரியங்களின் தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் அமார பதயே நமோ நம
    (ஓம் மாரனை எரித்த தலைவனுக்கு வணக்கம்)

    ஓம் குமார பதயே நமோ நம
    (ஓம் குமாரனாகிய பிரானுக்கு வணக்கம்)
    ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியில் வழிபடும் பொழுது, கேது கிரகத்திற்கு என உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்புக்குரியதாகும்.
    நவக்கிரகங்களில் ஒருவரான கேது, புகை நிற மேனியைக் கொண்டவர். இவருக்கு காலன், தூம கேது, லோக கேது, மாச கேது, சர்வ கேது, ரவுத்திரன் போன்ற பெயர்களும் உள்ளன. இவர் வாயு திசைக்கு உரியவரான கேது, ஆணுமற்ற, பெண்ணுமற்ற அலிக்கிரகமாகும். அசுரர்களில் பெரியவர் கேது. இவருக்கு ராசியில் தனி வீடு கிடையாது. எந்த இடத்தில் இருக்கிறாரோ, அதற்கான பலனைக் கிரகித்து அளிக்கும் வல்லமை கொண்டவர். ராகுவைப் போலவே, கேதுவுக்கும் சூரியனும், சந்திரனும் பகைக் கிரகங்கள்.

    பஞ்ச பூதங்களில் இவர் நீர். இவரது உச்ச வீடு விருச்சிக ராசியாகும். நீச வீடு ரிஷபம். புதன், சுக்ரன், சனி போன்றவை நட்புக் கிரகங்கள். ஆலயத்தில் நவக்கிரக சன்னிதியில் வழிபடும் பொழுது, கேது கிரகத்திற்கு என உள்ள காயத்ரி மந்திரத்தை சொல்லி வழிபடுவது சிறப்புக்குரியதாகும். கேதுவுக்கான காயத்ரி மந்திரத்தை, தினந்தோறும் 108 முறை சொல்வது சாலச்சிறந்தது.

    கேது காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் அஸ்வத்வஜயா வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னக் கேதுஹ் ப்ரசோதயாத்’

    குதிரைக் கொடியை வைத்திருக்கும் கேதுவை அறிந்து கொள்வோம். சூலம் ஏந்திய கரத்தை கொண்ட அவன் மீது தியானம் செய்வோம். கேது பகவானாகிய அவன், நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருள்.

    இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுக்கு, வேத, வேதாந்த அறிவு உண்டாகும். பிரச்சினைகள் விலகும். விஞ்ஞான, மெய்ஞான அறிவைப் பெறலாம். வியாதிகள் நீங்கும். பகையை வெல்வீர்கள். பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். நட்பு வளரும்.
    மதுரை மீனாட்சி அம்மனுக்கு உகந்த 108 போற்றித் திருநாமங்கள் உள்ளன. இந்த திருமண தடை நீக்கும் மதுரை மீனாட்சி அம்மன் 108 போற்றியை பார்க்கலாம்.
    01. ஒம் அங்கயற்கண் அம்மையே போற்றி
    02. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    03. ஓம் அருமறையின் வரம்பே போற்றி
    04. ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
    05. ஓம் அரசிளங்குமரியே போற்றி
    06. ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி
    07. ஓம் அமுத நாயகியே போற்றி
    08. ஓம் அருந்தவ நாயகியே போற்றி
    09. ஓம் அருள் நிறை அம்மையே போற்றி


    10. ஓம் ஆலவாய் அரசியே போற்றி
    11. ஓம் ஆறுமுகம் அன்னையே போற்றி
    12. ஓம் ஆதியின் பாதியே போற்றி
    13. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
    14. ஓம் ஆனந்த வல்லியே போற்றி
    15. ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
    16. ஓம் இமயத்தரசியே போற்றி
    17. ஓம் இடபத்தோன் துணையே போற்றி
    18. ஓம் ஈஸ்வரியே போற்றி


    19. ஓம் உயிர் ஓவியமே போற்றி
    20. ஓம் உலகம்மையே போற்றி
    21. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    22. ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
    23. ஓம் ஏகன் துணையே போற்றி
    24. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
    25. ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
    26. ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
    27. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி


    28. ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
    29. ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
    30. ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
    31. ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
    32. ஓம் கனகமணி குன்றே போற்றி
    33. ஓம் கற்பின் அரசியே போற்றி
    34. ஓம் கருணை ஊற்றே போற்றி
    35. ஓம் கல்விக்கு வித்தே போற்றி
    36. ஓம் கனகாம்பிகையே போற்றி


    37. ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
    38. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
    39. ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
    40. ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
    41. ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
    42. ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
    43. ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
    44. ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
    45. ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி


    46. ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
    47. ஓம் சக்தி வடிவே போற்றி
    48. ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
    49. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
    50. ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
    51. ஓம் சிவயோக நாயகியே போற்றி
    52. ஓம் சிவானந்த வல்லியே போற்றி
    53. ஓம் சிங்கார வல்லியே போற்றி
    54. ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி


    55. ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
    56. ஓம் சேனைத் தலைவியே போற்றி
    57. ஓம் சொக்கர் நாயகியே போற்றி
    58. ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
    59. ஓம் ஞானாம்பிகையே போற்றி
    60. ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி
    61. ஓம் தமிழர்குலச் சுடரே போற்றி
    62. ஓம் தண்டமிழ்த்தாயே போற்றி
    63. ஓம் திருவுடையம்மையே போற்றி


    64. ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
    65. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
    66. ஓம் திருநிலை நாயகியே போற்றி
    67. ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
    68. ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
    69. ஓம் தென்னவன் செல்வியே போற்றி
    70. ஓம் தேன்மொழியம்மையே போற்றி
    71. ஓம் தையல் நாயகியே போற்றி
    72. ஓம் நற்கனியின் சுவையே போற்றி


    73. ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
    74. ஓம் நல்ல நாயகியே போற்றி
    75. ஓம் நீலாம்பிகையே போற்றி
    76. ஓம் நீதிக்கரசியே போற்றி
    77. ஓம் பக்தர்தம் திலகமே போற்றி
    78. ஓம் பழமறையின் குருந்தே போற்றி
    79. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
    80. ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
    81. ஓம் பவளவாய்க் கிளியே போற்றி


    82. ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
    83. ஓம் பசுபதி நாயகியே போற்றி
    84. ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
    85. ஓம் பாண்டியர் தேவியே போற்றி
    86. ஓம் பார்வதி அம்மையே போற்றி
    87. ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
    88. ஓம் பெரிய நாயகியே போற்றி
    89. ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
    90. ஓம் பொற்கொடி அன்னையே போற்றி


    91. ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
    92. ஓம் மங்கல நாயகியே போற்றி
    93. ஓம் மழலைக்கிளியே போற்றி
    94. ஓம் மனோன்மணித் தாயே போற்றி
    95. ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
    96. ஓம் மாயோன் தங்கையே போற்றி
    97. ஓம் மாணிக்க வல்லியே போற்றி
    98. ஓம் மீனவர்க்கோன் மகளே போற்றி
    99. ஓம் மீனாட்சியம்மையே போற்றி


    100. ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி
    101. ஓம் முக்கண்சுடர் விருந்தே போற்றி
    102. ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
    103. ஓம் வடிவழகு அம்மையே போற்றி
    104. ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
    105. ஓம் வேதநாயகியே போற்றி
    106. ஓம் வையகம் வாழ்விப்போய் போற்றி
    107. ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
    108. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி.
    நெமிலி பாலாவின் இந்த தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியை வழிபட்டு வந்தால் அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.
    பராசக்தி தானே விரும்பி எடுத்துக்கொண்ட குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி.

    அருண கிருண ஜாலா ரஞ்சிதா சாவகாசா
    வித்ருத ஜப படீகா புஸ்தகா பீதி ஹஸ்தா
    இதரகர வராட்யா புஹ்ல கஹ்லார ஸம்ஸ்தா
    நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாண சீலா.

    ரெங்கநாதருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை நாளை வைகுண்ட ஏகாதசி அன்று சொல்லி பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் அனைத்து இன்பங்களும் வாசல் தேடி வரும்.
    ஸப்த ப்ராகார மத்யே ஸரஸி ஜமுகுளோத் பாஸமானே விமானே
    காவேரி மத்ய தேஸே ம்ருதுதரபணிராட் போக பர்யங்க பாகே!
    நித்ரா முத்ராபிராமம் கடிநிகிட ஸிர: பார்ஸ்வ வின்யஸ்த ஹஸ்தம்!
    பத்மா தாத்ரீ கராப்யாம் பரிசித சரணம் ரங்கராஜம் பஜேஹம்!!

    பொருள்:

    காவிரிநதியின் நடுவில் ஏழு மதில்களால் சூழப்பட்ட கோவிலில் வீற்றிருப்பவரே! ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டவரே! இடது கையை இடுப்பில் வைத்து யோக நித்திரையில் இருப்பவரே! ஸ்ரீதேவி, பூதேவி தாயாரால் வணங்கப்படும் திருப்பாதம் கொண்டவரே! ரங்கநாதரே! உம்மை வணங்குகிறேன்.
    வீடு, மனை வாங்க விரும்புபவர்கள் இந்த சனி பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை தினமும் அல்லது சனிக்கிழமைகயில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.
    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ஓம் ரவிசுதாய வித்மஹே
    மந்தக்ரஹாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் வைவஸ்வதாய வித்மஹே
    பங்குபாதாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ஓம் சனீஸ்வராய வித்மஹே
    சாயாபுத்ராய தீமஹி
    தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

    ஓம் சதுர்புஜாய வித்மஹே
    தண்டஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
     
    அனைவருக்கும் நலமே அமையட்டும் என இறைவனை பிராத்திக்கிறோம். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி! 
    குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 108 போற்றியை தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் சொல்லி வந்தால் குருவருள் கிடைக்கும்.
    1. ஓம் அறிவுருவே போற்றி
    2. ஓம் அழிவிலானே போற்றி
    3. ஓம் அடைக்கலமே போற்றி
    4. ஓம் அருளாளனே போற்றி
    5. ஓம் அல்லல் அறுப்பவனே போற்றி
    6. ஓம் அடியாரன்பனே போற்றி
    7. ஓம் அகத்துறைபவனே போற்றி
    8. ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    9. ஓம் அற்புதனே போற்றி
    10. ஓம் அபயகரத்தனே போற்றி

    11. ஓம் ஆன்கீழமர்ந்தவனே போற்றி
    12ஓம் ஆன்மீகநாதனே போற்றி
    13. ஓம் ஆச்சாரியனே போற்றி
    14. ஓம் ஆசாரக்காவலே போற்றி
    15. ஓம் ஆக்கியவனே போற்றி
    16. ஓம் ஆதரிப்பவனே போற்றி
    17. ஓம் ஆதி பகவனே போற்றி
    18. ஓம் ஆதாரமே போற்றி
    19. ஓம் ஆழ்நிலையானே போற்றி
    20. ஓம் ஆனந்த உருவே போற்றி
    21. ஓம் இருள் கொடுப்பவனே போற்றி
    22. ஓம் இருமை நீக்குபவனே போற்றி
    23. ஓம் இசையில் திளைப்பவனே போற்றி
    24. ஓம் ஈடேற்றுபவனே போற்றி
    25. ஓம் உய்யவழியே போற்றி
    26. ஓம் ஊழிக்காப்பே போற்றி
    27. ஓம் எந்தையே போற்றி
    28. ஓம் எளியோர்க்காவலே போற்றி
    29. ஓம் ஏகாந்தனே போற்றி
    30. ஓம் ஏடேந்தியவனே போற்றி
    31. ஓம் ஒளிப்பிழம்பே போற்றி

    32. ஓம் ஓங்கார நாதமே போற்றி
    33. ஓம் கயிலை நாதனே போற்றி
    34. ஓம் கங்காதரனே போற்றி
    35. ஓம் கலையரசே போற்றி
    36. ஓம் கருணைக்கடலே போற்றி
    37. ஓம் குணநிதியே போற்றி
    38. ஓம் குருபரனே போற்றி
    39. ஓம் சதாசிவனே போற்றி
    40. ஓம் சச்சிதானந்தமே போற்றி
    41. ஓம் சாந்தரூபனே போற்றி

    42. ஓம் சாமப்பிரியனே போற்றி
    43. ஓம் சித்தர் குருவே போற்றி
    44. ஓம் சித்தியளிப்பவனே போற்றி
    45. ஓம் சுயம்புவே போற்றி
    46. ஓம் சொற்பதங்கடந்தவனே போற்றி
    47. ஓம் ஞானமே போற்றி
    48. ஓம் ஞானியே போற்றி
    49. ஓம் ஞானநாயகனே போற்றி
    50. ஓம் ஞானோபதேசியேபோற்றி
    51. ஓம் தவசீலனே போற்றி

    52. ஓம் தனிப்பொருளே போற்றி
    53. ஓம் திருவுருவே போற்றி
    54. ஓம் தியானேஸ்வரனே போற்றி
    55. ஓம் தீரனே போற்றி
    56. ஓம் தீதழிப்பவனே போற்றி
    57. ஓம் துணையே போற்றி
    58. ஓம் தூயவனே போற்றி
    59. ஓம் தேவாதிதேவனே போற்றி
    60. ஓம் தேவருமறியா சிவனே போற்றி
    61. ஓம்நன்னெறிக்காவலே போற்றி

    62. ஓம் நல்யாக இலக்கே போற்றி
    63. ஓம் நாகப்புரியோனே போற்றி
    64. ஓம் நான்மறைப்பொருளே போற்றி
    65. ஓம் நிலமனே போற்றி
    66. ஓம் நிறைந்தவனே போற்றி
    67. ஓம் நிலவணியானே போற்றி
    68. ஓம் நீறணிந்தவனே போற்றி
    69. ஓம் நெற்றிக்கண்ணனே போற்றி
    70. ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
    71. ஓம் பசுபதியே போற்றி

    72. ஓம் பரப்பிரம்மனே போற்றி
    73. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    74. ஓம் பிறப்பறுப்போனே போற்றி
    75. ஓம் பேறளிப்பவனே போற்றி
    76. ஓம் பேசாமற்றெளிவிப்பேன் போற்றி
    77. ஓம் பொன்னம்பலனே போற்றி
    78. ஓம் போற்றப்படுவனே போற்றி
    79. ஓம் மறைகடந்தவனே போற்றி
    80. ஓம் மறையாப் பொருளே போற்றி
    81. ஓம் மஹேசுவரனே போற்றி

    82. ஓம் மங்கலமளிப்பவனே போற்றி
    83. ஓம் மலைமுகட்டிருப்பவனே போற்றி
    84. ஓம் மாமுனியே போற்றி
    85. ஓம் மீட்பவனே போற்றி
    86. ஓம் முன்னவனே போற்றி
    87. ஓம் முடிவிலானே போற்றி
    88. ஓம் முக்கண்ணனே போற்றி
    89. ஓம் மும்மலமறுப்பவனே போற்றி
    90. ஓம் முனீஸ்வரனே போற்றி
    91. ஓம் முக்தியளிப்பவனே போற்றி

    92. ஓம் மூலப்பொருளே போற்றி
    93. ஓம் மூர்த்தியே போற்றி
    94. ஓம் மோஹம் தீர்ப்பவனே போற்றி
    95. ஓம் மோன சக்தியே போற்றி
    96. ஓம் மௌன உபதேசியே போற்றி
    97. ஓம் மேதா தட்சணாமூர்த்தியே போற்றி
    98. ஓம் யோக நாயகனே போற்றி
    99. ஓம் யோக தட்சணாமூர்த்தியேபோற்றி
    100. ஓம் யம பயமழிப்பவனே போற்றி
    101. ஓம் ருத்திரப்பிரியனே போற்றி

    102. ஓம் ருத்திராட்சம் பூண்டவனே போற்றி
    103. ஓம் வித்தகனே போற்றி
    104. ஓம் விரிசடையனே போற்றி
    105. ஓம் வில்லவப்பிரியனே போற்றி
    106. ஓம் வினையறுப்பவனே போற்றி
    107. ஓம் விஸ்வரூபனே போற்றி
    108. ஓம் தட்சணா மூர்த்தியே போற்றி போற்றி
    தினமும் செய்யும் இறைவழிபாட்டின் போது, ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வருவது சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
    கலியுக தெய்வமாக விளங்கும் திருவேங்கடவ பெருமாளை, ‘ஸ்ரீனிவாசன்’ என்றும் அழைப்பார்கள். இவர் அஷ்ட லட்சுமிகளையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். பாலாஜி, வேங்கடாஜலபதி, கோவிந்தன், ஏழுமலையான் என பல்வேறு திருப்பெயர்களைப் பெற்றவர். வேண்டுபவர் களுக்கு வேண்டியதைக் கொடுக்கும் அன்பும், அடியார் களின் துயரங்களைப் போக்கும் வல்லமையும் கொண்டவர். தவறுகளை பொறுத்து அருள்வதுடன், தீவினைப் பயன் களையும் போக்குவார்.

    திருப்பதியில் வீற்றிருக்கும் வேங்கடவனுக்கு, கோடி கோடியாக பக்தர்கள், காணிக்கைகளைச் செலுத்தி வழிபடுகிறார்கள். அதற்கு காரணம், நினைத்ததை நடத்தி வைப்பவர் கோவிந்தன் என்பதுதான். ஏழுமலையான் வீற்றிருக்கும் மலைக்கு, திருமலை என்பதைத் தவிர வேங்கடாத்திரி, நாராயணாத்திரி, விருஷபாத்திரி என்று பல பெயர்கள் உள்ளன.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமலை தெய்வமான ஸ்ரீனிவாசனின் சுப்ரபாதத்தை, முழுவதுமாக சொல்வது என்பது அனைவராலும் முடியாத காரியம். அதே வேளையில் ஸ்ரீனிவாசனின் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால், அனைத்து விதமான பலன்களையும் பெறலாம். தினமும் செய்யும் இறைவழிபாட்டின் போது, ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வருவது சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம் :

    ‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
    நிராபாஸாய தீமஹி
    தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’

    பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பகவானை அறிவோம். பந்தங்களில் இருந்து விடுபடச் செய்யும், அந்த பரம்பொருளின் மீது தியானம் செய்வோம். ஸ்ரீனிவாசனான அவன் நம்மை காத்து அருள்புரிவான் என்பது இதன் பொருளாகும்.

    இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி, இறைவனை வழிபடுவதால் விரும்பியது கிடைக்கும். ஆனந்தமான வாழ்வு அமையும். ஸ்ரீனிவாசனின் அருளை எளிதாகப் பெறலாம். பாவங்களைப் போக்கும். 16 வகையான பேறு களைப் பெறுவீர்கள். மரண பயம் நீங்கும். முக்தி கிடைக்கும்.
    திருமணம் தடையால் அவதிப்படுபவர்கள் முருகனுக்கு உகந்த திருச்செந்தூர் முருகன் போற்றியை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம்.
    பன்னிரு கரத்தாய் போற்றி
    பசும்பொன்மா மயிலாய் போற்றி
    முன்னிய கருணை யாறு
    முகப்பரம் பொருளே போற்றி
    கன்னியர் இருவர் நீங்காக்
    கருணைவா ரிதியே போற்றி
    என்னிரு கண்ணே கண்ணுள்
    இருக்கும்மா மணியே போற்றி!
    கீழே வரலட்சுமி 108 போற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
    கீழே வரலட்சுமி 108 போற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதை பக்தியுடன் படிப்போருக்கு செல்வம் கொழிக்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

    ஓம் அகில லட்சுமியே போற்றி
    ஓம் அன்ன லட்சுமியே போற்றி
    ஓம் அலங்கார லட்சுமியே போற்றி
    ஓம் அமிர்த லட்சுமியே போற்றி
    ஓம் அமர லட்சுமியே போற்றி
    ஓம் அம்ச லட்சுமியே போற்றி
    ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி
    ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி
    ஓம் அனந்த லட்சுமியே போற்றி
    ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி
    ஓம் ஆதி லட்சுமியே போற்றி
    ஓம் ஆத்ம லட்சுமியே போற்றி
    ஓம் ஆனந்த லட்சுமியே போற்றி
    ஓம் இஷ்ட லட்சுமியே போற்றி
    ஓம் இன்ப லட்சுமியே போற்றி
    ஓம் இதய லட்சுமியே போற்றி
    ஓம் ஈகை லட்சுமியே போற்றி
    ஓம் உதய லட்சுமியே போற்றி
    ஓம் உத்தம லட்சுமியே போற்றி
    ஓம் உபாசன லட்சுமியே போற்றி
    ஓம் ஐஸ்வர்ய லட்சுமியே போற்றி
    ஓம் ஓங்கார லட்சுமியே போற்றி
    ஓம் ஒளஷத லட்சுமியே போற்றி
    ஓம் கருணா லட்சுமியே போற்றி
    ஓம் கனக லட்சுமியே போற்றி
    ஓம் கபில லட்சுமியே போற்றி
    ஓம் கமல லட்சுமியே போற்றி
    ஓம் கற்பக லட்சுமியே போற்றி
    ஓம் கஜ லட்சுமியே போற்றி
    ஓம் கஸ்தூரி லட்சுமியே போற்றி
    ஓம் காருண்ய லட்சுமியே போற்றி
    ஓம் குண லட்சுமியே போற்றி
    ஓம் குரு லட்சுமியே போற்றி
    ஓம் கோமள லட்சுமியே போற்றி
    ஓம் கோமேதக லட்சுமியே போற்றி
    ஓம் சந்தான லட்சுமியே போற்றி
    ஓம் சங்கு லட்சுமியே போற்றி
    ஓம் சக்கர லட்சுமியே போற்றி
    ஓம் சர்வ லட்சுமியே போற்றி
    ஓம் சந்தோஷ லட்சுமியே போற்றி
    ஓம் சகல லட்சுமியே போற்றி
    ஓம் சாந்த லட்சுமியே போற்றி
    ஓம் சிங்கார லட்சுமியே போற்றி
    ஓம் சிந்தாமணி லட்சுமியே போற்றி
    ஓம் சீதா லட்சுமியே போற்றி
    ஓம் செல்வ லட்சுமியே போற்றி
    ஓம் சொர்ண லட்சுமியே போற்றி
    ஓம் சுந்தர லட்சுமியே போற்றி
    ஓம் சுப லட்சுமியே போற்றி
    ஓம் ஜெய லட்சுமியே போற்றி
    ஓம் ஜோதி லட்சுமியே போற்றி
    ஓம் ஞான லட்சுமியே போற்றி
    ஓம் தங்க லட்சுமியே போற்றி
    ஓம் தயா லட்சுமியே போற்றி
    ஓம் தர்ம லட்சுமியே போற்றி
    ஓம் தன லட்சுமியே போற்றி
    ஓம் தவ லட்சுமியே போற்றி
    ஓம் தான லட்சுமியே போற்றி
    ஓம் தான்ய லட்சுமியே போற்றி
    ஓம் தாமரை லட்சுமியே போற்றி
    ஓம் தெய்வ லட்சுமியே போற்றி
    ஓம் தீப லட்சுமியே போற்றி
    ஓம் தீர்த்த லட்சுமியே போற்றி
    ஓம் திவ்ய லட்சுமியே போற்றி
    ஓம் நாக லட்சுமியே போற்றி
    ஓம் நித்ய லட்சுமியே போற்றி
    ஓம் நிர்மல லட்சுமியே போற்றி
    ஓம் நீல லட்சுமியே போற்றி
    ஓம் பதும ராக லட்சுமியே போற்றி
    ஓம் பவள லட்சுமியே போற்றி
    ஓம் பக்த லட்சுமியே போற்றி
    ஓம் பத்ம லட்சுமியே போற்றி
    ஓம் பங்கஜ லட்சுமியே போற்றி
    ஓம் பராக்கிரம லட்சுமியே போற்றி
    ஓம் பாற்கடல் லட்சுமியே போற்றி
    ஓம் பாக்கிய லட்சுமியே போற்றி
    ஓம் பால லட்சுமியே போற்றி
    ஓம் புண்ணிய லட்சுமியே போற்றி
    ஓம் புவன லட்சுமியே போற்றி
    ஓம் புனித லட்சுமியே போற்றி
    ஓம் பொன் லட்சுமியே போற்றி
    ஓம் போக லட்சுமியே போற்றி
    ஓம் மகா லட்சுமியே போற்றி
    ஓம் மதன லட்சுமியே போற்றி
    ஓம் மதுர லட்சுமியே போற்றி
    ஓம் மங்கள லட்சுமியே போற்றி
    ஓம் மாதவ லட்சுமியே போற்றி
    ஓம் மகா லட்சுமியே போற்றி
    ஓம் மகுட லட்சுமியே போற்றி
    ஓம் மரகத லட்சுமியே போற்றி
    ஓம் மாணிக்க லட்சுமியே போற்றி
    ஓம் மாதா லட்சுமியே போற்றி
    ஓம் முத்து லட்சுமியே போற்றி
    ஓம் மோட்ச லட்சுமியே போற்றி
    ஓம் யோக லட்சுமியே போற்றி
    ஓம் ரத்தின லட்சுமியே போற்றி
    ஓம் ராம லட்சுமியே போற்றி
    ஓம் ராஜ்ய லட்சுமியே போற்றி
    ஓம் வரலட்சுமியே போற்றி
    ஓம் வித்யா லட்சுமியே போற்றி
    ஓம் விஜய லட்சுமியே போற்றி
    ஓம் விமல லட்சுமியே போற்றி
    ஓம் விஷ்ணு லட்சுமியே போற்றி
    ஓம் வீர லட்சுமியே போற்றி
    ஓம் வேங்கட லட்சுமியே போற்றி
    ஓம் வேணு லட்சுமியே போற்றி
    ஓம் வைடூர்ய லட்சுமியே போற்றி
    ஓம் வைரலட்சுமியே போற்றி போற்றி!

    ×