என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கண்பார்வை மற்றும் புத்தி கூர்மை பெற ஆதித்யனுக்கு (சூரியன்) உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது ஞாயிற்று கிழமைகளில் சொல்லி வந்தால் பலன் பெறலாம்.
    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    மஹா ஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    மஹாத்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    மஹாதேஜாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் ஆதித்யாய வித்மஹே
    மார்தாண்டாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    ஓம் லீலாலாய வித்மஹே
    மஹா த்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்

    ஓம் பிரபாகராய வித்மஹே
    மஹா த்யுதிகராய தீமஹி
    தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
    குடும்ப ஒற்றுமை, பிரச்சனை தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.
    ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம்
    ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
    ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம்
    ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்

    - ராதா ரமணகிருஷ்ண ஸ்தோத்ரம்

    பொதுப்பொருள் :

    ராதையின் உள்ளம் கவர்ந்தவனே, யசோதையின் புத்திரனும் ராதையினால் சேவிக்கப்பட்ட பாத கமலங்களை உடையவனே கிருஷ்ணா, நமஸ்காரம். ராதையின் இருதயத்தில் வசிப்பவனே, ராதை செல்லுமிடமெல்லாம் செல்பவனே, ராதையின் ப்ரிய நாயகனே, நமஸ்காரம். ராதையைக் காப்பவரே, அவதாரமாகப் பல ஜன்மங்களை எடுத்தவரே, யாவற்றையும் தாங்குகிறவரே, கிருஷ்ணா, நமஸ்காரம்.

    (இத்துதியை தினசரி பாராயணம் செய்து வந்தால் குடும்ப ஒற்றுமை ஓங்கும். சந்தோஷங்கள் பெருகும்.)

    கீழ்க்கண்ட காமாட்சி அம்மன் துதியை பெண்கள் தினமும் அல்லது செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் துதித்தால் மாங்கல்ய பலம் பெறலாம்.
    சந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்
    குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்
    மாராராதே: மதனஸிகினம் மாம்ஸளம் தீபயந்தீம்
    காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லீமுபாஸே

    பொதுப் பொருள்: சந்திரனை சிரஸில் ஆபரணமாகத் தரித்தவளும், அழகிய திருமுகத்தையுடையவளும், சஞ்சலமான கடாக்ஷ லீலையையுடையவளும், குந்தபுஷ்பம்போல் அழகை உடையவளும், ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளும், முன் நெற்றி முடியினால் விரட்டப்பட்ட கருவண்டுகளை உடையவளும், மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளும், கவிகளின் கூட்டத்தின் வாக்கிற்கு கல்பவல்லியுமான காமாக்ஷி தேவியை உபாஸிக்கிறேன்.
    அனுமனுக்கு உகந்த சனிக்கிழமைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.
    அதுலித பலதாமம் ஸ்வர்ண
    சைலாபதேஹம்தநுஜவன க்ருசாநும்
    ஞானினாமக்ரகண்யம்   
    ஸகல குண நிதானம் வானராணாமதீசம்
    ரகுபதிவரதூதம் வாதஜாதம் நமாமி

    - ஹனுமத் ஸ்லோகம்

    பொதுப்பொருள்:

    நிகரில்லாத பலம் கொண்டவரே, ஸ்வர்ண பர்வதம் போன்ற ஒளி மிகுந்த தேகம் கொண்டவரே, வனம்போல் மிகுந்த ராட்சஸ குலத்தை பொசுக்கும் தீ போன்றவரே, ஞானிகளின் தலைவரே, ஸகல ஸத்குண நிலையமாக உடையவரே, குரங்கு குணத்தையே மாற்றும் புத்தி திறமை உள்ளவரே, ராமனுக்கு தூதனாக சென்றவரே, வாதத் திறமை கொண்டவரே, தங்களை வணங்குகிறேன். இத்துதியை ஹனுமத் ஜெயந்தி அன்று ஆரம்பித்து பின் தொடரும் சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அனுமன் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகும்.
    இத்துதியை தினமும் அல்லது திங்கள் கிழமைகளில் அல்லது கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் துதித்தால் ஈசனருளால் வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகும்.
    பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
    உக்ராய துர்க பவ ஸாகரதாரணாய
    ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமஸிவாய
    தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம்.

    பொதுப்பொருள்:

    தன் மீது பக்தி கொண்டோரை அரவணைக்கும் பரமேஸ்வரனே நமஸ்காரம். பிறப்பு - இறப்பு என்ற நோயால் ஏற்படும் பயத்தை விலக்குபவனே நமஸ்காரம். துஷ்டர்களை தண்டிப்பவனே, துயரங்கள் நிறைந்த சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்க வைப்பவனே நமஸ்காரம். ஜோதி வடிவானவனே, பக்தர்களின் நாம கீர்த்தனத்தால் ஆனந்தம் கொண்டு நர்த்தனமாடும் சீலனே நமஸ்காரம். வறுமைப் பிணியைப் போக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் ஈசனே நமஸ்காரம்.

    பங்குனி உத்திரமான நாளை முருகன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம். நாளை முருகனுக்கு விரதமிருந்து பாட வேண்டிய பாடலை கீழே பார்க்கலாம்.
    பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத் தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு ‘பழனி’ என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசனம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம்.

    படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
    முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
    மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
    நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!
    என்று பங்குனி உத்திர நாளில் பாடி, முருகனின் அருள் பெறலாம்.

    இத்துதியை ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் அல்லது செவ்வாய் கிழமை அல்லது பங்குனி உத்திரம் அன்று பாராயணம் செய்து வந்தால் கடன்கள் நிவர்த்தியாகும்.
    பாகாராதி ஸுதாமுகாப்ஜமதுபம் பாலேந்து மெளலீஸ்வரம்
    லோகாநுக்ரஹ காரணம் ஸிவஸுதம் லோகேஸ தத்வப்ரதம்
    ராகாசந்த்ர ஸமானசாருவதனம் ரம்போருவல்லீஸ்வரம்
    ஹ்ரீங்கார ப்ரணவர ஸ்வரூபலஹரீம் ஸ்ரீகார்த்திகேயம் பஜே.
    ஸுப்ரமண்ய பஞ்சகம்.

    பொதுப்பொருள்:

    பாகன் என்ற அசுரனை வதைத்து உலகத்திற்கு நன்மையருளிய சுப்ரமண்யரே, நமஸ்காரம். இந்திரனின் மகளான தேவசேனையின் முகமாகிய தாமரைக்கு வண்டு போன்று விளங்குபவரே, பாலசந்திரனை தலையில் ஆபரணமாய்த் தரித்தவரே, நமஸ்காரம். உலகமனைத்தையும் பாதுகாப்பவரே, பரமசிவனின் புதல்வரே, சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மதேவனுக்கு பிரணவப்பொருளை உபதேசித்தவரே, நமஸ்காரம். பவுர்ணமி நிலவைப் போன்ற பிரகாசமான அழகிய திருமுகத்தையுடையவரே, வள்ளிமணாளரே, ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ வடிவாக விளங்குபவரே, கார்த்திகேயா, நமஸ்காரம்.

    (இத்துதியை ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும். கடன்கள் நிவர்த்தியாகும். மனக்கவலைகள் ஓடிப்போகும்.)
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குரு பகவானுக்கு உகந்த இந்த ஸ்தோத்திரப் பாடலை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் குரு தோஷங்கள் நீங்கும். குருபகவான் திருவருள் கிட்டும்.
    குரு ஸ்தோத்திரப் பாடல் :

    மறைமிகு கலைநூல் வல்லோன்
    வானவர்க்கு அரசன் மந்திரி
    நறைசொரி கற்பகப் பொன்
    நாட்டினுக்கு அதிப னாகி
    நிறைதனம் சிவிகை மண்ணில்
    நீடு போகத்தை நல்கும்
    இறையவன் குரு வியாழன்
    இருமலர்ப் பாதம் போற்றி!
    குணமிகு வியாழ குருபகவானே
    மணம் உள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்!
    ப்ரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா
    க்ரஹதோஷமின்றி கடாக்ஷித்தருள்வாய்.
    குரு காயத்ரி மந்திரம்
    ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
    க்ருணி ஹஸ்தாய தீமஹி
    தந்நோ குரு: ப்ரசோதயாத்.
    அதிதேவதா ப்ரத்யதிதேவதா ஸஹித ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ.

    - இத்துதியை ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் பாராயணம் செய்து வந்தால் குரு தோஷங்கள் நீங்கும். குருபகவான் திருவருள் கிட்டும்.
    ராம நவமியான இன்று இந்த ராமர் காயத்திரி மந்திரத்தை சொல்லி வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மேலும் திருமண தடை இருப்பவர்கள் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம்.
    தத்துவார்த்த ஞானம் பெற

    ஓம் தஸரதாய வித்மஹே
    சீதாவல்லபாய தீமஹி
    தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்

    ஓம் தஸரதாய வித்மஹே
    சீதாநாதாய தீமஹி
    தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்

    ஓம் பீதாம்பராய வித்மஹே
    ஜகன்நாதாய தீமஹி
    தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்

    ஓம் தர்மரூபாய வித்மஹே
    சத்யவிரதாய தீமஹி
    தன்னோ ராமஹ் ப்ரசோதயாத்
    தொலைதூரப் பயணம் செல்லும் போது இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது.
    தொலைதூரப் பயணம் செல்கையில் வழியில் எந்த விதமான ஆபத்தும் ஏற்படாமல் இருக்கவும், தனிமையில் பயணம் செய்யும் போது பயம், ஆபத்து நீங்கவும், அடிக்கடி வாகன விபத்துகளைச் சந்திப்பவர்களும் ஆஞ்சநேயருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை 3 தடவை ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கிய பின் வெளியில் கிளம்ப  ஆபத்துகள், விபத்துக்கள் ஏற்படாது .

    அபராஜித நமஸ்தேஸ்து நமஸ்தே ராமபூஜித
    பிரஸ்தானந்த கரிஷ்யாமி சித்திர்ப்பவது மே ஸதா
    இத்துதியை தினமும் அல்லது திங்கள் கிழமைகளில் அல்லது பிரதோஷ தினங்களில் துதித்து வந்தால் ஈசனருளால் வறுமை நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகும்.
    பக்திப்ரியாய பவரோக பயாபஹாய
    உக்ராய துர்க பவ ஸாகரதாரணாய
    ஜ்யோதிர்மயாய குணநாமஸுந்ருத்யகாய
    தாரித்ரிய துக்க தஹனாய நமஸிவாய

    - தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்:

    தன் மீது பக்தி கொண்டோரை அரவணைக்கும் பரமேஸ்வரனே நமஸ்காரம். பிறப்பு - இறப்பு என்ற நோயால் ஏற்படும் பயத்தை விலக்குபவனே நமஸ்காரம். துஷ்டர்களை தண்டிப்பவனே, துயரங்கள் நிறைந்த சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்க வைப்பவனே நமஸ்காரம். ஜோதி வடிவானவனே, பக்தர்களின் நாம கீர்த்தனத்தால் ஆனந்தம் கொண்டு நர்த்தனமாடும் சீலனே நமஸ்காரம். வறுமைப் பிணியைப் போக்கி, சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கும் ஈசனே நமஸ்காரம்.

    கீழே கொடுக்கப்பட்டுள்ள இத்துதியால் சனிக்கிழமைகளில் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
    ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
    ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே

    - ஸ்ரீ ஸ்ரீநிவாச மங்கள ஸ்லோகம்.

    பொதுப் பொருள்:

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீயப்பதியான ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    சனிக்கிழமைகளில் இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.)
    ×