search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் - 15.5.2018 முதல் 21.5.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் - 15.5.2018 முதல் 21.5.2018 வரை

    மே மாதம் 15-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி மே மாதம் வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை பற்றி இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
    15-ந்தேதி (செவ்வாய்) :

    அமாவாசை
    கார்த்திகை விரதம்.
    திருநெல்வேலி கயிலாசபுரம் கயிலாசநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
    காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் ரத உற்சவம்.
    வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் திருவிழா.
    திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு.
    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
    சமயபுரம் மாரியம்மன் இரவு வெள்ளி விமானத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள்.

    16-ந்தேதி (புதன்) :

    சிவகாசி விசுவநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம், புஷ்பப் பல்லக்கில் பவனி.
    வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.
    காரைக்குடி கொப்புடையம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.
    சமயபுரம் மாரியம்மன் தங்க சிம்மாசனத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (வியாழன்) :

    ரமலான் நோன்பு ஆரம்பம்.
    சமயபுரம் மாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.
    காரைக்குடி கொப்புடையம்மன் தெப்ப உற்சவம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
    சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா.
    திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
    திருப்பரங்குன்றம் ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    மேல்நோக்கு நாள்.

    18-ந்தேதி (வெள்ளி) :

    சதுர்த்தி விரதம்.
    கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
    மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் விடையாற்று உற்சவம்.
    சமயபுரம் மாரியம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா.
    சமநோக்கு நாள்.



    19-ந்தேதி (சனி) :

    ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
    திருச்செந்தூர், மதுரை, திருப்பாப்புலியூர் வைகாசி விசாகம் உற்சவம் ஆரம்பம்.
    மாயவரம், நயினார்கோவில், காளையார்கோவில், உத்தமர்கோவில், திருப்புகழுர், திருப்பத்தூர், திருவாடானை ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
    சிவகாசி விசுவநாதர் காலை புஷ்பப் பல்லக்கிலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
    பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    சமநோக்கு நாள்.

    20-ந்தேதி (ஞாயிறு) :

    சஷ்டி விரதம்.
    முகூர்த்த நாள்.
    திருநெல்வேலி புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
    திருமோகூர் காளமேகப் பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புஷ்ப விமானம்.
    மேல்நோக்கு நாள்.

    21-ந்தேதி (திங்கள்) :

    மதுரை கூடலழகர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுப்படூர் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் உற்சவம் ஆரம்பம்.
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் தொடக்கம்.
    ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் தங்கப் புன்னை மர வாகனத்தில் திருவீதி உலா.
    திருமோகூர் காளமேகப் பெருமாள் காலை ராஜாங்க அலங்காரம், இரவு சிம்ம வாகனத்தில் பவனி.
    கீழ்நோக்கு நாள். 
    Next Story
    ×