search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    தேவசயன ஏகாதசி: இன்று விரதம் அனுஷ்டித்தால் பலன்கள் அதிகம்...
    X

    தேவசயன ஏகாதசி: இன்று விரதம் அனுஷ்டித்தால் பலன்கள் அதிகம்...

    • மகாவிஷ்ணு படம் வைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.
    • ஏகாதசிகளில் உபவாசம் இருந்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.

    மாதம் இரண்டுமுறை வீதம் ஒரு வருடத்தில் சுமார் 24 ஏகாதசிகள் வந்தாலும் கூட அவைகளில் ஸ்ரீ விஷ்ணு படுத்துக் கொள்ளும் சயன (ஆஷாட) ஏகாதசி ஒன்று. மற்றொன்று ஸ்ரீ மகாவிஷ்ணு திரும்பிப்படுக்கும் பரிவர்த்தன ஏகாதசி. மூன்றாவது ஸ்ரீ மகாவிஷ்ணு எழுந்து கொள்ளும் உத்தான ஏகாதசி என்னும் மூன்று ஏகாதசிகளும் மிக முக்கியமானவை.

    கடவுள் விஷ்ணு, திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் மீது படுத்திருப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது. எனவே இந்த நாள் "தேவசயன ஏகாதசி" ("கடவுள்-உறங்கும் பதினொன்றாவது நாள்") அல்லது ஹரி-சயன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணு, சயன ஏகாதசியில் தூங்கி, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்தெழுகிறார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த காலம் சாதுர்மாதம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், மழைக்காலத்துடன் ஒத்துப்போகிறது. சயன ஏகாதசி என்பது சாதுர்மாதத்தின் ஆரம்பமாகும். இந்த நாளில் விஷ்ணுவைப் பிரியப்படுத்த பக்தர்கள் சாதுர்மாத விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள்.

    சயன ஏகாதசி அன்று உண்ணாவிரதம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தானியங்கள், பீன்ஸ், வெங்காயம், சில மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட சில காய்கறிகளை அன்று உண்ணாமல் விலகி இருக்க வேண்டும்.

    இந்த மூன்று ஏகாதசிகளிலும் உபவாசம் இருந்து ஸ்ரீ மகாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும். இதனால் அனைத்து பாவங்களும் விலகும். ஆனி அமாவாசைக்குப்பிறகு வரும் சயன ஏகாதசியான இன்று பகல் முழுவதும் விரதம் இருந்து மாலையில், பஞ்சுமெத்தையில் ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடிய ஸ்ரீ மகாவிஷ்ணு படம் வைத்து பூஜை செய்து வணங்க வேண்டும்.

    Next Story
    ×