search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவ வழிபாட்டிற்கு உகந்த ஆனி மாத பவுர்ணமி விரதம்
    X

    சிவ வழிபாட்டிற்கு உகந்த ஆனி மாத பவுர்ணமி விரதம்

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணிய யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
    ஆனி மாத பவுர்ணமி அன்று விரதம் மேற்கொண்டால் இன்பமான வாழ்வு அமையும். விரதமிருப்பவர்கள் ஆனி மாத பவுர்ணமி அன்றும் விரதமிருந்து மாலை சந்திர உதயத்தில் நிலவையும் அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்பவர்கள் தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எல்லாக் காரியங்களிலும் வெற்றி பெறுவார்கள்.

    ஆனி பவுர்ணமி தினத்தன்று தேவர்கள் அன்னையின் நாமத்தை ஜெபித்தபடியே தியானமும் தவமும் செய்து அன்னையின் அருளைப் பெறுவார்கள். பவுர்ணமி இரவின் நடுநிசியில் தியானம், ஜெபம், பூஜை, பிராணாயாமம், தவம் செய்தால் இறைசக்தி உடனே கிடைக்கும்.

    இந்த நாளில் விரதம் இருந்து சிவன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் ஈடேரும்.

    இந்நாளில் விரதம் இருப்பவர்கள் இரவில் குறைவான எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய ஆகாரத்தை உண்ண வேண்டும். இவ்வாறு உண்டால் நள்ளிரவில் தியானம் செய்வதற்கும், பிராணாயமம் செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.  

    பொதுவான பவுர்ணமி நாட்களில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வது மேன்மை அளிக்கும்.
    Next Story
    ×