என் மலர்
இஸ்லாம்
இறைவன் நம்மோடு எப்போதுமே இருக்கிறான். அவனிடமிருந்து நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கிறது.
இறைவன் நம்மோடு எப்போதுமே இருக்கிறான். அவனிடமிருந்து நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வந்து கொண்டே இருக்கிறது. யார் அவ்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் என்றும் துக்கப்படவும் மாட்டார்கள் என்று திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.
அதன்படி இறைவனின் நல்வழிகாட்டுதலுக்கிணங்க மனசாட்சிக்குப் பயந்து இறையச்சத்தோடு யூசுப் (அலை) நடந்து கொண்டாலும், அமைச்சரின் மனைவி ஸுலேக்கா அவரை விடுவதாக இல்லை. ஸுலேக்கா, யூசுப்பிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததும், அவர் அதை மறுத்தது பற்றிய விஷயங்களும் அந்த நகரத்தில் பலவாறாகப் பரவியது. வெறும் வாய்க்கு கிடைத்த அவலாகப் பலவிதமாகப் பெண்கள் பேசிச் சிரித்தனர்.
'அமைச்சரின் மனைவி கண்டிப்பாக வழி்கேட்டில் இருக்கிறாள்' என்று பேசிக் கொண்டு திரிந்த பெண்களுக்கு ஸுலேக்கா ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். தன்னுடைய இடத்தில் வேறு பெண் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்து கொண்டிருப்பார்கள் என்று நிரூபிப்பதே அவருடைய எண்ணமாக இருந்தது.
விருந்திற்கு வந்த ஒவ்வொரு பெண்ணிடமும் பழங்களையும் அதனை நறுக்கித் தின்பதற்காக ஒரு கத்தியையும் கொடுத்து விட்டு, அப்பெண்கள் எதிரே நடந்து செல்லும்படி யூசுப்பை பணித்தாள். அப்பெண்கள் யூசுப்பை பார்த்ததும் அவருடைய வசீகரிக்கும் தோற்றத்தில் மயங்கி மெய் மறந்து, பழங்களுக்குப் பதிலாகத் தமது கைகளையே வெட்டிக் கொண்டனர்.
“அல்லாஹ்வே படைப்பில் சிறந்தவன், இவர் மனிதரே இல்லை, இவர் மேன்மைக்குரிய ஒரு வானவராகத்தான் இருக்க முடியும்” என்று ஆச்சர்யத்தில் உறைந்து போயிருந்தனர். ஆனால் யூசுப் (அலை) நேர்மாறாக யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் கடந்து சென்றுவிட்டார்.
ஸுலேக்கா, மற்ற பெண்களிடம் “நீங்கள் எல்லாம் என்னை எவர் சம்பந்தமாகத் தவறாகப் பேசினீர்களோ அவர்தான் இவர். ஒருமுறை பார்த்ததற்கே கைகளை வெட்டிக் கொண்டுவிட்டீர்கள். இவரை நான் தினமும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அவர் என் விருப்பத்திற்கு இணங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் அவர் சிறையில் தள்ளப்படுவார்” என்று யூசுப் (அலை) கேட்கும்படியே சொன்னாள்.
யூசுப் (அலை) அவர்களுக்கு ஸுலேக்கா பிடியில் சிக்கித் தவறிழைப்பதை விடவும் சிறைக்குச் செல்வதே மேலாகத் தோன்றியது.
அவர் இறைவனிடம் பிரார்த்திக்க ஆரம்பித்தார் “என் இறைவா, இந்தப் பெண்கள் என்னைத் தவறான பாதையில் திருப்பப் பார்க்கிறார்கள். இத்தீயதைவிடச் சிறைக்கூடமே எனக்கு விருப்பமுடையதான இடமாக இருக்கிறது. இவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றி, இவர்கள் சதித்திட்டத்தில் இருந்து என்னை மீளச்செய்வாயாக. இல்லையெனில் இவர்களுடன் சேர்ந்து அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று அழுது பிரார்த்தித்தார்கள்.
இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அப்பெண்களுடைய சதியிலிருந்து யூசுப் (அலை) அவர்களைக் காப்பாற்றினான். யூசுப் (அலை) குற்றமற்றவர் என்று தெரிந்தும், தம் வீட்டுப் பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரைச் சிறைப்படுத்தினார்கள். இது யூசுப்பின் இறையச்சத்திற்கு அநியாயமான தீர்ப்புதான், ஆனால் அதிலும் இறைவன் அவருக்கு நன்மையை வைத்திருந்தான், அது யூசுப்பின் பிராத்தனைக்குப் பதிலாக அமைந்தது.
இறைவன் நிச்சயமாக யாவற்றையும் கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதை முழுவதுமாக நம்பினார்கள் யூசுப் (அலை). சிறைச்சாலை யூசுப் (அலை) அவர்களின் வாழ்வின் புதிய அத்தியாத்தின் தொடக்கமாகியது.
- ஜெஸிலா பானு.

அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான். ஆனால் மக்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
‘பொறுமையைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள். உள்ளச்சம் இல்லாதவருக்கு அதைக் கடைப்பிடிப்பது பாரமாக இருக்கும்’ என்ற திருக்குர்ஆனின் இறைவசனத்திற்கேற்ப, யாகூப் (அலை) தன் மகன் யூசுப் (அலை) அவர்களுக்காகப் பிரார்த்தித்தபடி இருந்தார்கள்.
எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லாத அந்தக் காலத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல அவர்கள் ஒட்டகங்களையும் குதிரைகளையுமே பயன்படுத்தி வந்தார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் கூட்டம் கூட்டமாகப் பயணிப்பது வழக்கமாக இருந்தது.
பண்டம் மாற்று முறையில் வியாபாரம் செய்து வந்த மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பல பொருட்களைச் சுமந்து வர வேண்டியிருந்தது. அந்த வியாபாரிகள் சிரியாவிலிருந்து பாலஸ்தீன் வழியாக எகிப்து சென்று கொண்டிருந்தனர். வழித்தடங்கள் சரியாக அமைய முன்னால் செல்லும் ஒட்டக ஓட்டி குரல் கொடுக்க, வரிசையாகக் குரல் சமிக்ஷை செய்தபடியே நகர்ந்து வருவது அவர்களுக்கு வழக்கமாக இருந்தது.
யூசுப் (அலை) கிடந்த பாழ்கிணற்றுக்கு அருகே இதே போன்ற வியாபாரக்கூட்டம் ஒன்று நெருங்கி வந்தது. அவர்களின் குரல் கேட்டுக் கிணற்றில் இருக்கும் யூசுப் (அலை) விழித்துக் கொண்டார்கள். அவர்கள் கிணற்றுக்கு அருகே வருவார்களா என்று எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். பாலைவனத்தின் அருகே ஒரு கிணற்றைப் பார்த்ததும், வியாபாரிகளில் ஒருவர் தண்ணீர் கிடைக்குமா என்று தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி எட்டிப்பார்க்க, அவருக்கு ஒரு சிறுவன் உள்ளிருப்பது தெரிந்தது “நற்செய்தி! உள்ளே ஒரு சிறுவன் இருக்கிறான்” என்று சொல்லியபடி கயிற்றைக் கிணற்றுக்குள் எறிந்து அதனை யூசுப்பின் இடுப்பில் கட்டிக் கொள்ளச் சொல்லி, அப்படியே அவரைத் தூக்கி வெளியேற்றினார்.
மிக அழகான தோற்றத்தை கொண்ட யூசுப்பை கண்டு அவர்கள் வியந்தார்கள். யூசுப் அந்த வியாபாரிகளுக்கு ஒரு வியாபார பொருளாக மட்டுமே தெரிந்தார். காரணம், அந்த நாளில் செல்வந்தர்களுக்கு அடிமைகள் சேவை செய்வதற்கென இருந்தனர். போர் கைதிகளாகக் கிடைப்பவர்களையும், பெற்றோர்கள் இல்லாத சிறுவர்களையும் அடிமைகளாக வாங்கி- விற்கும் பழக்கம் அவர்களுக்கு இருந்தது. வசதி இல்லாத பெற்றோர்களும் தமது குழந்தைகளையே அடிமைகளாக விற்றுக் கொண்டிருந்த காலம் அது.
அடிமையின் உரிமையாளரே அவரை விடுவித்தால் உண்டு அல்லது தம்மை விடுவித்துக் கொள்ள அதற்கேற்ப அவர் உழைக்க வேண்டும். இப்படியாக யூசுப்பை நல்ல விலைக்கு அடிமையாக விற்றுவிடலாம் என்று வியாபாரி நினைத்தாரே தவிர அவரைக் குறித்து விசாரித்து அவரது குடும்பத்தினருடன் சேர்த்துவிட நினைக்கவில்லை. வியாபாரிகள் யூசுப்பை தம்மோடு எகிப்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
யூசுப்பின் அருமை தெரியாதவர்கள் அவரை ஏலத்தில் வெறும் சொற்பவிலை 20 திர்ஹமுக்கு விற்றனர். அந்த நாட்டின் அமைச்சர் யூசுப்பை வாங்கிக் கொண்டார். யூசுப்பை பார்த்தவுடனே அவர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர், நேர்மையான, ஒழுக்கமான, அறிவான சிறுவன் என்று அவருக்குத் தெரிந்தது. யூசுப்பை அவர் தம்மோடு வீட்டுக்கு அழைத்துச் சென்று, தமது மனைவியிடம் யூசுப்பை நல்லமுறையில் பார்த்துக் கொள்ளச் சொன்னார். “இந்தச் சிறுவன் நமக்கு நன்மையைக் கொண்டு வரலாம். குழந்தை இல்லாத நாம் யூசுப்பை நமது மகனாகத் தத்தெடுத்துக் கொள்ளலாம்” என்றும் அமைச்சர் தம் மனைவியிடம் சொன்னார்.
நாளை நடக்கப்போவது என்னவென்று தெரியாமல் பாழ்கிணற்றில் கிடந்த யூசுப் (அலை) அவர்களுக்கு இறைவன் தகுந்த வசதியளித்தான். கனவுகளின் பலன்கள் பற்றியும் இறைவன் யூசுப்புக்கு போதிய அறிவைக் கொடுத்தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சோதனைக் காலத்தில் யூசுப் (அலை) அவர்களின் பொறுமையையும் இறையச்சத்தையும் குறித்து விளக்குவதற்காகத் திருக்குர்ஆனில் யூசுப் (அலை) அவர்களின் அழகிய வரலாற்றை `வஹீ` என்ற அருள்வாக்கு மூலம் இறைவன் அருளினான்.

யூசுப் (அலை) அவர்கள் கண்ட கனவைப் பற்றித் தன் தந்தை யாகூப் (அலை) அவர்களிடம் பகிரும் போது, யாகூப் (அலை) அவர்கள் அந்தக் கனவை குறித்துத் தன்னுடைய மற்ற மகன்களிடம் சொல்ல வேண்டாம் ஏனெனில், 'மனிதர்களின் விரோதியான ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து யூசுப்புக்குத் தீங்கிழைக்கச் செய்யத் தூண்டுவான்' என்று அறிவுறுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி “இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக் கொடுத்து, இறைவனுடைய அருளை உன் மீதும், நம்முடைய சந்ததியார் மீதும் முழுமையாகத் தருவான், இதற்கு முன்னர் நம் மூதாதையராகிய இப்ராஹீம் (அலை), இஸ்ஹாக் (அலை) அவர்களுக்குத் தந்தது போல்” என்றார்கள் யூசுப்பிடம் யாகூப் (அலை).
யாகூப் (அலை) பயந்தது போலவே யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள், யூசுப் (அலை) அவர்களுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டினார்கள். “நம் தந்தை யூசுப் மற்றும் புனியாமின் மீது மிகுந்த பாசத்துடன் இருந்து நமக்குத் தவறு இழைக்கிறார்கள். நாம் யூசுப்பை கொலை செய்ய வேண்டும் அல்லது கண் காணாத தேசத்திற்கு அழைத்துச் சென்று அங்கேயே யூசுப்பை விட்டுவிட்டு வர வேண்டும். அப்போதுதான் தந்தையின் முழுமையான அன்பு நமக்கு மட்டுமே கிடைக்கும்” என்று பொறாமையின் வெளிப்பாட்டினால் தவறு இழைக்கத் துணிந்தனர்.
சகோதரர்களில் ஒருவர் குறுக்கிட்டு “யூசுப்பை கொலை செய்ய வேண்டாம், அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்றால் நாம் அவரை ஓர் ஆழமான பாழ்கிணற்றில் தள்ளிவிட்டுவிடுவோம். அந்த வழியாகச் செல்லும் பிரயாணிகளில் யாராவது அவரை எடுத்துச் சென்றுவிடட்டும்” என்று சொன்னார். அவர் சொன்ன ஆலோசனையின்படியே செய்யலாம் என்று முடிவானது. தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளத் தந்தை யாகூப்பிடம் சென்று அவர்கள் ஊருக்கு வெளியே வேட்டைக்குச் செல்வதாகவும் தங்களுடன் யூசுப்பை அனுப்பும்படியும் கேட்டனர்.
யாகூப் (அலை), யூசுப் (அலை) அவர்களை அனுப்ப மறுத்தும் “ஏன் எங்களை யூசுப் விஷயத்தில் நீங்கள் நம்பத் தயாராக இல்லை? அவர் எங்களுடைய அன்புத் தம்பி, எங்களுடன் வந்தால் அவர் மகிழ்ச்சியாக விளையாடுவார், காட்டில் உள்ள பழங்களை உண்ணுவார், இடத்தைச் சுற்றிப் பார்ப்பார். நாங்கள் பத்திரமாகத் திருப்பி அழைத்து வந்துவிடுவோம்” என்று தம்முடைய கள்ளத்தனத்தை மறைத்துக் கொண்டு கேட்டனர்.
யாகூப் (அலை) அவர்களின் மனம் ஒப்புக் கொள்ளாமல் “நீங்கள் அவரைப் பார்க்காத நேரத்தில் ஓநாய் யூசுப்பை பிடித்துத் தின்றுவிட்டால்?” என்று தன்னுடைய தயக்கத்தைச் சொல்ல, “நாங்கள் வளர்ந்த பலசாலியான அண்ணன்கள் இத்தனை பேர் இருக்கும் போது சின்னத் தம்பியை எப்படி ஓநாய்க்கு இரையாக்குவோம்? நாங்கள் கண்டிப்பாகப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வோம். எங்களை நம்பி அனுப்புங்கள்” என்று மீண்டும் வலியுறுத்தினர்.
யாகூப் (அலை) தன் பத்து மகன்களை நம்புவதைவிட இறைவனையே அதிகம் நம்பினார்கள். `இறைவா உன்னை நம்பி மட்டும் அனுப்புகிறேன்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு தன் அன்பு மகன் யூசுப்பை அனுப்ப சம்மதித்தார்கள்.
கண்ணுக்குத் தெரியாத இறைவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்தார்கள். எப்படி இறைவன் தன் மகனுக்கு உதவுவார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் ஏதாவது ஒருவகையில் உதவுவார். ஒவ்வொரு விஷயமும் இறைவன் நன்மையை நாடியே நடத்துகிறான். பொறுமையாளர்களை இறைவன் கைவிடமாட்டான் என்று முழுமையாக நம்பினார்கள் யாகூப் (அலை).

எவரையும் பிரித்து வேற்றுமை பார்க்காமல் நம்பிக்கை கொள்பவர்களே சிறந்த முஸ்லிம் என்கிறது திருக்குர்ஆன்.
அல்லாஹ்வையும், அவன் அருளிய வேதத்தையும், அவனுடைய தூதராகிய இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை) அவர்களின் சந்ததியர் மீது அருள்புரிந்தவற்றையும், அவர்களுக்குப் பின் தோன்றிய மற்ற நபிமார்களையும் அவர்கள் மூலமாக இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையெல்லாம் நம்பிக்கை கொள்வதும், அவர்களில் எவரையும் பிரித்து வேற்றுமை பார்க்காமல் நம்பிக்கை கொள்பவர்களே சிறந்த முஸ்லிம் என்கிறது திருக்குர்ஆன்.
யாகூப் (அலை) அவர்கள் ஹனான் பகுதியில் மக்களுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் வணங்கக் கூடாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும், தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பதோடு ஜகாத் என்கிற கடமையான தர்மத்தையும் சரியாகச் செய்யவேண்டுமென்று போதித்து வந்தார்கள். தன் மாமாவின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் ஆடுகளையும் மேய்த்துக் கொண்டு இருந்தார்கள்.
யாகூப் (அலை) அவர்களின் முதல் மனைவி லியாவுக்கு வரிசையாகத் தொடர்ந்து ஆண் குழந்தைகளாகப் பிறக்கிறது. தனக்குக் குழந்தையே இல்லை என்று வருத்தத்திலிருந்த தனது அன்பு மனைவி ராஹிலுக்காகப் பிள்ளை செல்வம் வேண்டி யாகூப் (அலை) அவர்களும் ராஹிலும் இறைவனிடம் உருக்கமாகப் பிரார்த்திக்கிறார்கள். இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை ஏற்று அவர்களுக்கு நன்கொடையாக உலகில் உள்ள மொத்த அழகில் பாதி அழகைத் தந்தது போல் மிகவும் அழகான ஆண் குழந்தையைத் தந்தான். அந்தக் குழந்தைக்கு யூசுஃப் என்று பெயர் வைக்கப்பட்டது.
இப்படியாக யாகூப் (அலை) அவர்கள் ஆடு மெய்த்துக் கொண்டு இருபது வருடங்கள் ஹரன் நிலப்பரப்பில் குடும்பத்துடன் இருந்தார்கள். யாகூப் (அலை) அவர்கள் தனது குடும்பத்தினரைப் பார்க்க செல்ல வேண்டும் என்பதை அறிந்து கொண்ட லபான் “நீங்கள் எனக்குப் பல வருடங்களாக உழைத்து எனது செல்வத்தைப் பெருக்கிவிட்டீர்கள், உங்களுக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்” என்றார். யாகூப் (அலை) அவர்கள் குறிப்பிட்ட சிறந்த வகை ஆடுகளைக் கேட்கிறார்கள். இறையச்சம் இல்லாத லபான் அதை யாகூப் (அலை) அவர்களுக்குக் கிடைக்கப் பெறாமல் செய்யத் திட்டம் தீட்டியும், அது முறியடிக்கப்படுகிறது. யாகூப் (அலை) மாமாவிடம் சொல்லாமலே செல்ல எத்தனிக்கும் போது லபான் மனம் மாறி அவர்களுக்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும், மாடுகளையும், கழுதைகளையும், அடிமைப் பெண்களையும் தந்து வழியனுப்பி வைக்கிறார்.
யாகூப் (அலை) தனது பதினோரு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு மனைவிகள், இரண்டு அடிமைப் பெண்கள், வேலையாட்கள், ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் என்று மிகவும் செழிப்பாக அங்கிருந்து வெளியேறி தமது சொந்த ஊருக்குச் செல்லும் முன்பு, இறைவன் அவருக்கு அருளிய அந்த இடத்தில் வைத்த கல் அடையாளத்தைப் பார்த்து அங்கு இறை வணக்கம் செலுத்த ஒரு பள்ளி வாசலை எழுப்புகிறார்கள். அதுதான் பிற்காலத்தில் ‘பைத்துல் முகத்தஸ்’ பள்ளியானது.
தமது சகோதரன் ஈசுவுக்குத் தம் மீது கோபம் தணிந்துவிட்டதா என்று பார்க்க ஆள் அனுப்புகிறார்கள். சகோதரன் ஈசு இன்னும் யாகூப் (அலை) அவர்கள் மீது கோபமாகவே உள்ளார், அங்கு சென்றால் கொலை செய்துவிடுவார் என்று அஞ்சி, இறைவனிடம் தனக்கு எல்லாக் காரியங்களையும் லேசாக்கி தரும்படியும், தன் சகோதரனின் கோபம் தணியும்படியும் பிரார்த்திக்கிறார்கள்.
பிறகு ஒருவரிடம் பல ஆடுகளையும், மாடுகளையும், கழுதைகளையும், பரிசுப் பொருட்களையும் தன் சகோதரனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். “என் சகோதரர் ஈசு உம்மை யார் என்று கேட்டால் ‘நான் உங்கள் அடிமை என்று சொல். இதையெல்லாம் யார் கொடுத்தனுப்பியது என்று கேட்டால் ‘உங்களுடைய மற்றொரு அடிமை யாகூப்’ என்று சொல்” என்றார்கள். அதன்படியே நடந்தது. ஈசு தன் தம்பி யாகூப்பை மன்னித்துவிட்டார். யாகூப் தம் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்குத் திரும்பி தன் சகோதரர் ஈசுவிடம் ஏழு முறை முழுமனதாக மன்னிப்பு கேட்கிறார்கள். ஈசுவும் மன்னித்துத் தம்பியை கட்டித் தழுவிக் கொள்கிறார்கள்.

இப்ராஹிம் (அலை) அவர்கள் செய்த நன்மைகளின் காரணமாக அவர்களின் சந்ததியரான இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை) என்று அவர்கள் பின் வரும் சந்ததிகள் அனைவரையும் இறைவன் நேர்வழிப்படுத்தி நற்கூலி வழங்கியுள்ளான் என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாகூப் (அலை) அவர்களுக்கு இறைவன் அருளிய மகிழ்ச்சியில் ஹரன் என்ற ஊருக்கு தன் மாமாவைத் தேடி வருகிறார்கள். தனக்குச் செல்வ வளம் கூடும் காலம் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மருமகன் வந்து சேரவே லபானுக்கு மிகுந்த மகிழ்ச்சியாகிவிடுகிறது.
மாமாவுக்கு இரண்டு மகள்கள் இருந்தனர். மூத்தவர் லியா, இளையவர் ராஹில். யாகூப் (அலை) அவர்களுக்கு ராஹிலைப் பிடித்துவிடுவதால் மாமாவிடம் நேரடியாக அவளை மணம் முடிக்கக் கோருகிறார்கள். மாமா தன் மருமகனை வைத்து தன் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் எண்ணத்தில் தன் காட்டில் ஏழு வருடங்கள் வேலை செய்து தனது ஆடுகளை மேய்த்து பராமரிக்க வேண்டுமென்ற நிபந்தனையை முன் வைக்கிறார். அதனை ஒப்புக்கொண்டு பூர்த்தி செய்து மகளையும் கரம்பிடிக்கிறார் யாகூப் (அலை). நல்ல முறையில் திருமணம் முடிகிறது. ஆனால் மறுநாள் காலையில்தான் தெரிகிறது அவர் மணம் முடித்தது லியாவை என்று.
மாமாவிடம் வந்து தன்னை ஏமாற்றியதாகச் சொல்கிறார்கள் யாகூப் (அலை). மூத்தவள் இருக்கும் போது இளையவளை மணம் முடித்துத் தருவது தமது பண்பாடில்லை என்ற லபான், இளைய மகள் ராஹிலையும் திருமணம் செய்து தருகிறேன் ஆனால் மேலும் ஏழு ஆண்டுக் காலம் தனது ஆடுகளைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றும் கேட்கிறார். அதற்கும் ஒப்புக் கொண்டு நிபந்தனையை நிறைவேற்றி தன் மனதுக்குப் பிடித்த ராஹிலையும் திருமணம் செய்து கொள்கிறார்கள் யாகூப் (அலை). அந்தக் காலகட்டத்தில் சகோதரிகளைத் திருமணம் செய்து கொள்வது அனுமதிக்கப்பட்டதாக இருந்திருக்கிறது
லபான் தன் இரு மகள்களுக்கும் ஆளுக்கொரு அடிமைப் பெண்களை வேலைக்காகத் தருகிறார். லியாவுக்குத் தரப்படும் அடிமைப் பெண் ஸில்ஃபா. ராஹிலுக்குத் தரும் அடிமைப் பெண்ணின் பெயர் பில்ஹா. அந்தக் காலகட்டத்தில் அடிமைப் பெண்களும் உடமைகள் போல் கருதப்பட்டனர்.
யாகூப் (அலை) அவர்களின் உழைப்பினாலும், இறைவனின் கருணையினாலும் அவர்கள் வாழ்வு செழிப்பாக மிளிர்கிறது. இதன் காரணமாகவே மாமாவும் மருமகனை அங்கிருந்து கிளம்பவிடாமல் ஏதேனும் காரணம் சொல்லி அவர்களை அங்கேயே தங்க வைக்கிறார்கள். யாகூப் (அலை) அவர்களும் ஏக இறைவன் கொள்கையை அந்த இடத்தில் பரப்பி வந்தாலும் மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று காத்திருக்கிறார்கள்.

நபி யாகூப் (அலை) அவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபி யாகூப் (அலை) அவர்களைப் பற்றித் திருக்குர்ஆனில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்ராஹிம் (அலை) அவர்கள் இறைவனை உறுதியாக நம்பிக்கையோடு பிரார்த்தித்துக் கொண்டே இருந்ததால் அவர்களுக்கு இஸ்ஹாக் (அலை) அவர்களை மகனாகவும், யாகூப் (அலை) அவர்களைப் பேரனாகவும் இறைவன் நன்கொடையாக அளித்துள்ளான் என்றும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இறைவனின் நன்கொடையான யாகூப் (அலை) தன் தாயின் சகோதரன் லபான் வீட்டிற்குப் போகும் வழியில் தூக்கம் வந்ததும், ஒரு கல்லை தன் தலைக்கு வைத்தபடி படுத்து உறங்குகிறார்கள்.
உறக்கத்தில் அவர் காணும் கனவில் பூமியிலிருந்து ஓர் ஏணி சொர்க்கத்திற்கு நீண்டிருப்பதைப் பார்க்கிறார்கள். வானவர்கள் மேலும் கீழும் இறங்குவதைக் காண்கிறார்கள். அப்போது அல்லாஹ் அவருக்கு நற்செய்தியைத் தருகிறான், “உனக்கும் உன் சந்ததியினருக்கும் அருள்கிறேன். வெகுவிரைவில் உனக்கு ஒரு பொக்கிஷத்தை அருளவிருக்கிறேன்” என்று.
மிக மகிழ்ச்சியாக உறக்கத்திலிருந்து எழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக, இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரையும் எதனையும் வணங்கக் கூடாது, ஏழைகளுக்குத் தானம் செய்ய வேண்டும், நன்மைகள் புரிய வேண்டுமென்று உறுதியளித்துக் கொள்கிறார். இந்த இடத்தில் இறைவனுக்கு ஒரு வணக்க தலத்தை கட்டுவேன், ‘அல்லாஹ்வின் வீடு’ என்பதை இங்கு எழுப்புவேன் என்று அடையாளத்திற்காக ஒரு கல்லை அந்த இடத்தில் வைத்து சென்றதாகவும், அந்த இடத்தில்தான் பிற்காலத்தில் ‘பைத்துல் முகத்தஸ்’ நிறுவப்பட்டதாகவும் ஒரு குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
யாகூப் (அலை) தன் தாயைப் பிரிந்து, நாளை என்னாகுமென்பது தெரியாமல் தனது மாமா வீட்டிற்கு எந்தத் திட்டமிடலும் இல்லாமல் செல்ல நினைத்தபோது இறைவனின் அருள்வாக்கு சந்தோஷத்தையும் மனநிறைவையும் அளித்தது.

நபி இஸ்ஹாக் (அலை) மற்றும் ரிப்கா அம்மையாருக்கு இரட்டை ஆண் பிள்ளைகளை அல்லாஹ் அருளினான்
நபி இஸ்ஹாக் (அலை) மற்றும் ரிப்கா அம்மையாருக்கு இரட்டை ஆண் பிள்ளைகளை அல்லாஹ் அருளினான். மூத்தவர் ஈசு, இளையவர் யாகூப். இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு மூத்த மகன் மீது பிரியம் அதிகம்.
நபி இஸ்ஹாக் (அலை) அவர்களுக்கு நாளடைவில் கண் பார்வை மங்கி விடுகிறது. ஒருநாள் இஸ்ஹாக் நபி தனது மூத்த மகன் ஈசுவை அழைத்து, தனக்குப் பிரியப்பட்ட உணவை கொண்டு வரும்படி கேட்கிறார்கள். ஈசுவும் அந்த உணவைக் கொண்டு வர வெளியில் சென்று விடுகிறார்கள்.
இஸ்ஹாக் (அலை) அவர்களின் மனைவி இளைய மகன் யாகூப்பிடமும் இஸ்ஹாக் பிரியம் காட்ட வேண்டும், இளைய மகனுக்காகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்காக அண்ணன் ஈசுவுடைய சட்டையை யாகூப்புக்கு அணிவித்து இஸ்ஹாக் (அலை) அவர்களுக்குப் பிடித்த உணவை இளையவர் யாகூப்பிடம் கொடுத்து அனுப்புகிறார்கள். உணவை கொண்டுவந்தது யார் என்று அறிந்து கொள்ள இஸ்ஹாக் (அலை), “நீ யார்” என்று கேட்க, “நான் உங்கள் மகன்” என்று பதிலளிக்கிறார் யாகூப் (அலை). உணவருந்திய பிறகு அந்த மகனுக்காக முழுமனதாக மிகவும் உருக்கமாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் இஸ்ஹாக் (அலை).
இது முடிந்த பிறகு மூத்த மகன் ஈசுவும் தந்தைக்கு உணவு எடுத்து வருகிறார். அதற்கு இஸ்ஹாக் (அலை), “நீ ஏற்கெனவே வந்து உணவு தந்தாயே நானும் உனக்குப் பிரார்த்தித்தேனே” என்று நினைவுபடுத்துகிறார்கள். விஷயத்தை விளங்கிக் கொண்ட ஈசுவுக்குத் தம்பி யாகூப் (அலை) மீது மிகுந்த கோபம்.
அந்தக் கோபம் நாளடைவில் வெறுப்பாக மாறி கொலை மிரட்டல் வரை சென்றுவிட்டதால் தாய் ரிப்காவின் வேண்டுகோளுக்கிணங்க யாகூப் (அலை) அவர்கள் ரிப்கா அம்மையாரின் சகோதரர் இருக்கும் இடத்திற்கு இரவோடு இரவாகச் சென்றுவிட சொல்கிறார்கள். ஈசுவின் கோபம் தணியும் வரை தனது சகோதரர் லபானுடனே இருக்கும்படி தாய் ரிப்கா மகன் யாகூப்பை கேட்டுக் கொண்டார்கள்.
யாகூப் (அலை) அவர்களை ‘இஸ்ராயில்’ என்ற பெயர் கொண்டும் திருமறையில் குறிப்பிட்டுள்ளது. யூதர்கள் என்ற இனமே நபி யாகூப் (அலை) அவர்களை வைத்துத்தான் தொடங்கியது என்பதும் இதன் காரணம்.
- ஜெஸிலா பானு

இவ்வுலகத்தில் நல்லவராக வாழ்ந்து இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெறுவோம்.
இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்று மறுமை வாழ்க்கை. அதாவது உலக வாழ்வு என்பது ஒரு தற்காலிக வாழ்க்கை, அந்த வாழ்வின் முடிவில் ஏற்படும் மரணம் என்பது நிரந்தர மறுமை வாழ்வின் தொடக்கம் என்பதாகும். இம்மையில் அதாவது இந்த உலகத்தில் செய்யும் நன்மைகளுக்கு நற்கூலி மறுமையில் வழங்கப்படும் என்பதும் நம்பிக்கை.
உலக முடிவு நாளுக்குப் பிறகு எல்லா மனிதர்களும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். நாம் செய்யும் நன்மை தீமைகளுக்கு கேள்வி கணக்கு உண்டு, அவர்கள் பாவங்களை அவர்களே சுமப்பார்கள். நன்மைகள் செய்த நல்லவர்களுக்கு நன்மைகளும் இன்பங்களும் நிலைத்திருக்கும். தீமைகள் மட்டுமே செய்த கெட்டவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனைகளும் தண்டனைகளும் வழங்கப்படும். இறுதிநாள் எப்போது வரும், உயிர்ப்பிக்கும் நாள் எப்போது ஏற்படும் என்று இறைவனைத் தவிர யாருமே அறியமாட்டார்கள் என்பதெல்லாம் அந்த நம்பிக்கையில் அடங்கும்.
ஓரிறைக் கொள்கையைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த நபிகள் இப்ராஹிம் (அலை), இறைவனிடம் இம்மை மறுமை குறித்து கேட்கிறார்கள். அவர்களுக்கு இறைநம்பிக்கை இருந்தாலும் இறந்தவர்களுக்கு இறைவன் எப்படி மீண்டும் உயிர் தந்து எழுப்புகிறான் என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலில் இறைவனிடம் கெஞ்சுகிறார்கள். "இறைவா, உன்னை உண்மையாக நம்புகிறேன். ஆனால் என் இதயம் அமைதிபெற வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன், இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்கு தயவு செய்து காட்டு" எனக் கோருகிறார்கள்.
இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களை நான்கு பறவைகளைப் பிடித்து, அதனை மீண்டும் அவர்களிடமே திரும்பி வரும்படி பழக்கிக் கொள்ளுமாறும் அதன் பிறகு, அவற்றை அறுத்து அதனுடைய ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டு, அவற்றை அவரிடமே வரச் சொல்லி அல்லாஹ்வின் திருப்பெயரால் அழைத்துப் பார் என்றான். அவ்வாறே செய்த இப்ராஹிம் (அலை), அறுத்து வெவ்வேறு மலைகளில் இருந்த பாகங்கள் ஒன்று சேர்ந்து பறவைகளாக உயிர்பெற்று அவரிடமே வேகமாகப் பறந்து வருவதை சாட்சியாக கண்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன். பேரறிவாளன் என்பதை அறிந்துக் கொண்டார்கள்.
திருக்குர்ஆனில் இறைவன் சொல்கிறான் "யுக முடிவு நாளின் மீது சத்தியம் செய்கின்றேன். குறைகூறிக் கொண்டிருக்கும் உள்ளத்தின் மீதும் சத்தியம் செய்கின்றேன். இறந்து உக்கிப்போன மனிதனின் எலும்புகளை ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அவ்வாறில்லை, அவனுடைய நுனி விரல்களையும் முன்னிருந்தவாறே சீராக்க நாம் ஆற்றலுடையோம்" என்று.
ஒரு மனிதனின் அங்கம் போல் வேறு ஒரு மனிதனின் அங்கம் அமைந்திருந்தாலும், மனித விரல்களின் ரேகைகள் முழுமையாக வேறுபடுவதை உள்ளடக்கியே இவ்வசனத்தில் இறைவன் குறிப்பாக விரல்களையும் முன்பு இருந்ததைப் போலவே சீராக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகச் சொல்கிறான்.

இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) சேர்ந்து இறை இல்லம் புதுப்பித்த பிறகு, இப்ராஹிம் (அலை) கன்னான் பகுதியில் சாராவுடன் இருந்த போது அவர்களிடம் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராபீல் என்ற மூன்று வானவர்களை அனுப்பி வைத்தான் இறைவன்.
இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) சேர்ந்து இறை இல்லம் புதுப்பித்த பிறகு, இப்ராஹிம் (அலை) கன்னான் பகுதியில் சாராவுடன் இருந்த போது அவர்களிடம் ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்ராபீல் என்ற மூன்று வானவர்களை அனுப்பி வைத்தான் இறைவன். அவர்களை வானவர்கள் என்று அறியாமல் விருந்தாளிகள் என்று எண்ணி இப்ராஹிம் (அலை) அவர்களுக்குப் பலமான விருந்தை ஏற்பாடு செய்து சாப்பிடச் சொன்னார்கள்.
வந்தவர்கள் சாப்பிடாமல் இருப்பதைக் கண்டு அவர்கள் மனிதர்கள் இல்லை என்பதை உணர்ந்து பயந்தார்கள் இப்ராஹிம் (அலை). வந்திருந்த வானவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களைப் பயப்பட வேண்டாமென்றும், அவர்கள் இறைவனிடம் இருந்து நற்செய்தி கொண்டு வந்திருப்பதாகச் சொல்லி, இப்ராஹிம் (அலை) அவர்களுக்கும் சாரா அம்மையாருக்கும் ஓர் அழகான குழந்தை பிறக்க இருப்பதைப் பற்றி அறிவிக்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு இஸ்ஹாக் என்று பெயரிடுமாறும், அவர் மூலம் பல நபிமார்கள் இவர்களது சந்ததியில் வரப்போவதையும் அறிவிக்கிறார்கள் வானவர்கள்.
இப்ராஹிம் (அலை) மற்றும் சாரா (அலை) இருவருக்குமே வயதாகிவிட்டதால், “இது எப்படிச் சாத்தியம்? முதுமையாகிவிட்ட இந்த நிலையில் குழந்தையை எப்படிப் பெறுவேன்” என்று ஆச்சர்யமாகச் சாரா (அலை) கேட்டார்கள். அதற்கு வானவர்கள் “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி என்ன ஆச்சர்யம்? இறைவன் நினைத்தால் எதுவுமே சாத்தியமாகிவிடும். அவனுடைய அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகும். அல்லாஹ் புகழுக்குரியவன், மகிமை வாய்ந்தவன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
இறைவனின் கட்டளைப்படி இஸ்ஹாக் (அலை) பிறக்கிறார். அவரும் தந்தை இப்ராஹிம் (அலை) அவர்களைப் போலவே ஆற்றல் பெற்றவர்களாக மார்க்க நுணுக்கங்களைத் தெரிந்தவர்களாகவும் ஓரிறை கொள்கையைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்பவர்களாகவும் திகழ்ந்தார்கள்.
பின்னாட்களில் இஸ்ஹாக் (அலை) தன் சொந்தத்திலிருந்தே ரிப்காவை மனம் முடிக்கிறார்கள். இஸ்ஹாக் (அலை) ரிப்கா இருவருக்கும் மிகவும் வயதாகியும் பிள்ளைச் செல்வம் இல்லை என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்த போது ரிப்கா கருவுற்றார், இறைவன் இரட்டை ஆண் குழந்தையை அருளினான். அவர்களுக்கு ஈசு என்றும், யாகூப் என்றும் பெயரிட்டனர்.
-ஜெஸிலா பானு.

வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை. வெட்கம் என்ற பண்பு இருந்தால்தான் ஒரு மனிதர் தவறான காரியங்களைச் செய்யப்பயப்படுவார்.
வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு கிளை. வெட்கம் என்ற பண்பு இருந்தால்தான் ஒரு மனிதர் தவறான காரியங்களைச் செய்யப்பயப்படுவார். அத்தகைய வெட்கம் சிறிதும் இல்லாதவர்களாகத் திகழ்ந்தார்கள் சோதோம் நகர மக்கள். சாக்கடலின் மேற்கு கரையில் இருந்ததாம் அந்நகரம்.
சோதோம் மக்கள் ஒழுக்கங் கெட்டவர்களாக, தீய குணம் நிறைந்தவர்களாக, வழிப்பறிக் கொள்ளையர்களாக, பயணிகளிடம் திருடிவிட்டு அவர்களைக் கொலை செய்யக் கூடிய கொலைகாரர்களாக, முன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத இயற்கைக்கு மாறாக ஆணோடு ஆண் உறவு கொள்ளும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களாக, அதுவும் பொது இடங்களில் எல்லாரும் பார்க்கும் வகையில் வெட்கமில்லாமல் புணர்ந்து கொண்டு திரிபவர்களாகவும் எந்த நற்குணங்களும் இல்லாத கொடியவர்களாகவும் இருந்தனர்.
இப்ராஹிம் (அலை) அவர்களின் சகோதரனின் மகன்தான் நபி லூத் (அலை). ஓரிறைக் கொள்கையைப் பற்றிப் பிரச்சாரம் செய்ய இப்ராஹிம் (அலை) அவர்கள் நாடு துறந்த போது, அவர்களின் கொள்கையை ஏற்று அவர்களுடன் வெளியேறிவர்தான் நபி லூத் (அலை). லூத்தை இறைவனின் கட்டளைப்படி சோதோம் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள் இப்ராஹிம் (அலை). அந்நகரத்திற்கு நபியாக வந்த லூத் (அலை) அந்நகர மக்களின் செய்கைகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள்.
மக்களிடம் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அவர்கள் உலகில் எவருமே செய்யாத மானக்கேடான செயலைச் செய்கிறார்கள் என்பதை விளக்கினார்கள். பிறர் பொருளை அபகரிப்பது பாவம், ஆண்கள் ஆண்களிடமே மோகம் கொள்வது தவறு என்று எடுத்துரைத்தார்கள். தான் ஓர் இறைத்தூதனாக வந்திருப்பதைச் சொன்னார்கள்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்து, அவனுக்குப் பயந்து நடந்து கொள்ளவும் வற்புறுத்தினார்கள். லூத்தை அவர் குடும்பத்தார் மட்டுமே ஆதரித்தார்கள் தவிர லூத்தின் மனைவி அவரை ஓர் இறைத்தூதர் என்று நம்பாமல், இழிசெயலில் ஈடுபடுபவர்களுக்குத் துணையாக இருந்தாள். லூத் நபி சொல்வதையெல்லாம் மக்கள் கேட்பதாக இல்லை.
லூத் பிரச்சாரத்தை நிறுத்தாமல் போனாலோ, மக்களின் வழியில் தலையிட்டாலோ அந்த இடத்தைவிட்டு லூத் வெளியேற்றப்படுவார் என்று பயமுறுத்தினார்கள் அந்நகரத்து மக்கள். லூத் (அலை) தமது ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தொடர்ந்தார். அவருக்கு வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் எதிர்ப்புகள் தொடர்ந்தது. வருடங்கள் பல சென்றும் மக்கள் மனம் மாறுவதாக இல்லை. "நீர் உண்மையானவர் என்றால் உம் இறைவனின் தண்டனையை எங்களிடம் கொண்டு வா பார்ப்போம்" என்று ஏளனம் செய்தார்கள் தீய மக்கள்.
“என் இறைவனே! தவறு செய்யும் இந்தச் சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற தீய செயலில் இருந்து காப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள் லூத் (அலை).
லூத் (அலை) அவர்களின் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு தமது வானவர்களை அனுப்பி வைத்தான். அந்த வானவர்கள் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் நற்செய்தி சொல்லிவிட்டு, சோதோம் நகருக்கு வந்தனர். அவர்கள் முதலில் அங்கு லூத்தின் மகளை ஆற்றங்கரையில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டு அவளிடம் அந்நகரத்தில் தங்க ஏதேனும் இடம் உள்ளதா என்று விசாரித்தார்கள்.
அந்த வானவர்களின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்த மகள், இந்த ஆண் மகன்களுக்கு இந்நகரத்து மக்களால் ஆபத்து வரக்கூடுமென்று அஞ்சி, தான் தன் தந்தையிடம் அவர்களைக் குறித்துக் கூறி இங்கே கூட்டிக் கொண்டு வரும் வரை அந்த இடத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டு விரைந்து சென்றாள்.
தன் தந்தை லூத்திடம் தான் இது வரை பார்த்திராத அழகிய இளைஞர்களைக் கண்ட விவரத்தைக் கூறினாள். அந்த மூன்று இளைஞர்கள் வடிவில் வந்த வானவர்களிடம் லூத் (அலை) விரைந்து சென்று அவர்களைக் குறித்து விசாரிக்கிறார்கள். அவர்கள் அதற்கான பதிலை சரியாகத் தராமல், அவர்கள் 'லூத்தின் விருந்தினர்களாக வரலாமா' என்று நேரடியாகக் கேட்க, லூத் (அலை) அவர்களுக்குத் தர்ம சங்கடமாகிவிடுகிறது.
தனது ஊர் மக்களைப் பற்றி வந்த விருந்தினர்களிடம் சொல்ல முடியாது. விருந்தினர்களை உபசரிக்கவும் செய்ய வேண்டும் அதே சமயம், இவர்களை ஆண் மோகம் கொண்ட அந்த ஊர் மக்களிடமிருந்து காக்கவும் வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், அவர்களை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் வீட்டில் இவருக்கே எதிராளியான மனைவி தீயவர்களிடம் விருந்தினர்கள் குறித்துத் தெரிவித்துவிடுகிறாள். மக்கள் லூத் (அலை) அவர்களின் வீட்டை முற்றுகையிடுகிறார்கள்.
வெட்கமில்லாமல் இப்படிக் கதவைத் தட்டி ஆண்களை அடைய நினைக்கும் ஆண்களைக் குறித்து நபி லூத் (அலை) மிகவும் வெட்கமும் வேதனையும்பட்டார்கள். மக்களிடம் தமது விருந்தினர்களைக் கெட்ட நோக்கத்தோடு நெருங்க வேண்டாம் என்றும் தம்மை அவர்கள் முன்பு கேவலப்படுத்த வேண்டாமென்றும் கேட்டதோடு, இறைவனைப் பயந்து கொள்ளுமாறும், இதற்கு முன் அழிந்தவர்களை நினைவுகூறவும் வலியுறுத்தினார்கள்.
ஆனால் அம்மக்களோ “உலக மக்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டாமென்று நாங்கள் ஏற்கெனவே உங்களைத் தடுத்திருக்கிறோமே?" என்று ஆவேசமடைந்தவர்களாக வீட்டின் உள்ளே நுழைந்தார்கள்.
"நீங்கள் ஏதேனும் செய்தே தீர வேண்டுமென்று தீர்மானித்தால், இதோ என் மகள்களைத் திருமணம் செய்து கொள்ளலாமே" என்றார்கள் பொறுமையாக லூத் (அலை). அதைக் கோபமாக மறுத்து "எங்களுடைய விருப்பம் என்னவென்று உங்களுக்குத் தெரியாதா" என்று ஆவேசமாகக் கேட்ட மக்கள், அந்த விருந்தாளிகள் எங்கே என்பதாக நோட்டமிட்டார்கள்.
செய்வதறியாது நின்ற லூத் (அலை) அவர்களைப் பார்த்து வானவர்கள், தாங்கள் இறைவனிடமிருந்து வந்த வானவர்கள் என்றும் இந்த மக்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னதோடு லூத் (அலை) அவர்களை அந்த இரவே இறையச்சமுடைய தன் குடும்பத்தினருடன் அவ்வூரை விட்டு வெளியேறிவிடும்படியும், திரும்பியும் பார்த்திட வேண்டாமென்று கூறினார்கள்.
அதன்படியே அவர்களும் தம் குடும்பத்தினருடன் வெளியேறினார்கள், தன் மனைவியைத் தவிர. விடியற்காலையில் அந்நகரத்தை இறைவன் பூகம்பத்தால் புரட்டிப் போட்டதோடு கற்கள் மழையாகப் பொழிந்து அந்நகரத்து மக்கள் இருந்த சுவடில்லாமல் போனது. அதில் லூத் (அலை) அவர்களின் மனைவியும் அழிந்தாள். அந்நகரத்தின் அத்தியாயம் முடிந்து உலக வரைப்படத்தில் அந்த ஊரின் பெயர் இல்லாமல் போனது. இழிவானவர்களின் முடிவு இதுதான் என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்.
லூத் (அலை) அவர்கள் மீண்டும் இப்ராஹிம் (அலை) அவர்களிடம் வந்தார்கள். இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு நடந்ததைக் கூறும் முன்பாகவே அவர்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பது குறித்து ஆச்சர்யப்பட்டார்கள் லூத் (அலை). இப்ராஹிம் (அலை) அவர்களைப் போல லூத் (அலை) அவர்களும் தன்னுடைய இறுதிக்காலம் வரை ஏக இறைவனின் பக்கம் மக்களை அழைத்த வண்ணம் இருந்தார்கள்.
திருக்குர்ஆன் 26:160-171, 66:10, 29:31-35, 15:51-77, 11:77-83, 7:81-83, 27:56

இஸ்லாமியர்கள் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் தொழுகைக்கு அவர்கள் முன்னோக்குவது மக்காவிலுள்ள கஅபாவை. அதனை ‘கிப்லா’ என்கிறோம்.

அப்படியான கஅபா என்கிற இறையில்லத்தைக் கட்ட இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களுக்குக் கட்டளையிடுகிறான். இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த இறைவன், இந்த உலகத்தையே தன் கையில் வைத்திருப்பவனுக்கு இந்த உலகத்தில் ஓர் இல்லம் வேண்டுமென்று அதை இப்ராஹிம் (அலை) அவர்கள்தான் புதுப்பித்துக் கட்டவேண்டும் என்பதற்காகவே இறைவன் இப்ராஹிம் (அலை) அவர்களைத் தம் மனைவி ஹாஜராவையும் மகன் இஸ்மாயீலையும் தற்போது கஅபா இருக்கும் இடத்தின் அருகே கொண்டு விடச் சொல்கிறார்.
ஏன் விட வேண்டும், அந்தப் பாலைவனத்தில் பச்சிளங்குழந்தையுடன் எப்படி ஜீவிப்பாள் என்று கேள்வி கேட்காத இப்ராஹிம், மகனைப் பலியிட வேண்டுமென்று கனவில் வந்த கட்டளைக்குக் காரணம் கேட்காத இப்ராஹிம், இறையில்லம் கட்ட வேண்டும் என்று கட்டளை வந்ததும் எந்தக் காரணமும் கேட்காமல், இறைவன் சொல்லிவிட்டால் அதில் அர்த்தமிருக்கும் என்ற நம்பிக்கையாளராக மகன் இஸ்மாயில் (அலை) அவர்களிடம் இச்செய்தியை சொல்கிறார்.
மக்காவிற்கு வந்த தந்தையைக் கண்டதும் பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்ற இஸ்மாயீல் (அலை), இறைவனின் உத்தரவை தந்தையார் சொன்னவுடன் ஏன் எதற்கு என்று கேள்விகள் இல்லாமல் இறைவன் கட்டளையிட்டதை நிறைவேற்ற தானும் உதவுவதாக உறுதியளித்தார்கள்.
வேலையைத் தொடங்க ஆயத்தமானார்கள். சுற்றியிருந்த இடங்களை விட உயரமாக இருந்த ஒரு மேட்டை காற்று அடையாளம் காட்டியதைக் கண்டு அந்த இடத்தில் தோண்டி அதில் அடிக்கல்லை நட்டு கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்ட ஆரம்பித்தார்கள். இஸ்மாயீல் (அலை) கற்களைக் கொண்டு வந்து கொடுக்கக் கொடுக்க, இப்ராஹிம் (அலை) கட்டத் துவங்கினார்கள்.
கட்டடம் உயர உயர இப்ராஹிம் (அலை) அவர்களுக்கு எட்டவில்லையென்பதைக் கண்டு, அவர்கள் ஏறி நின்று கற்களை அடுக்க இஸ்மாயீல் (அலை) ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து வைத்தார்கள். அதன் மீது ஏறி நின்று இப்ராஹிம் (அலை) பணியைத் தொடர்ந்தார்கள். அப்போது இப்ராஹிம் (அலை) அவர்களின் கால்தடம் அந்தக் கல்லில் பதிந்தது. அந்தக் கல்தான் இன்னும் நம்மிடையே உள்ள கஅபாவின் அருகே வைக்கப்பட்டுள்ள ‘மகாமு இப்ராஹீம்’.
இருவரும் சேர்ந்து அடித்தளங்களையும் தூண்களையும் எழுப்பிக் கொண்டிருந்த போது இப்ராஹிம் (அலை) ஓர் அழகான கல்லை வேண்டினார்கள். இஸ்மாயீல் (அலை) தேடிச் சென்று வந்த போது, இப்ராஹிம் (அலை) ஏற்கெனவே ஓர் அழகான கல்லை வைத்து நிறுவியுள்ளதைப் பார்த்து “இது எப்படிக் கிடைத்தது?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். “வானவர் ஜிப்ரீல் (அலை) தந்த சொர்க்கத்தின் கல்” என்று பதிலளித்தார்கள் இப்ராஹிம் (அலை). இன்றும் அந்தச் சொர்கத்து கல் ‘ஹஜ்ருல் அஸ்வத்’ கஅபத்துல்லாவில் மக்கள் தொட்டு முத்தமிடத் துடிக்கும் கல். அந்தக் கல்லுக்கு எந்த ஆற்றலும் இல்லாவிட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அதனை முத்தமிடுமாறு வழிகாட்டியுள்ளார்கள். காரணம் இவ்வுலகில் காணக் கிடைக்கும் சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் மட்டுமே.
இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) இறைவனின் கட்டளையின் பேரில் கட்டிய கஅபா ஆலயம் தான் முதல் இறையாலயம். அதனைக் கட்டி முடித்ததும் இருவரும் இணைந்து “இறைவா! எங்களிடமிருந்து இந்தப் புனிதப் பணியை ஏற்றுக்கொள்” என்று கஅபாவை சுற்றி வட்டமிட்டு நடந்தபடியே பிரார்த்தித்தார்கள். அதுமட்டுமின்றி அந்த இடத்தைப் பாதுகாப்பான இடமாகவும், அதில் வசிக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களைக் கொண்டு உணவளிக்கவும் பிரார்த்தித்தார்கள். அதன்படியே இந்தக் கஅபா புனிதத்தளம் இறுதிநாள் வரை பாதுகாக்கப்படுமென்று திருக்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் வந்துள்ளது.
இந்தப் புனிதத்தளம் உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாக அமைந்துள்ள பிரம்மாண்டமான அத்தாட்சி.
திருக்குர்ஆன் 2:125-127, 22:26, 28:57, 29:67, 3:96 ஸஹிஹ் புகாரி 60:3364

இஸ்லாமியர்கள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடுவார்கள். ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள்.
இஸ்லாமியர்கள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடுவார்கள். ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள். ரமதான் மாதத்தில் நோன்பு நோற்று பெருநாள் தினத்தில் தர்மம் செய்துவிட்டு கொண்டாடுவது ஈகைத்திருநாள். ஹஜ் செல்பவர்கள் அதற்கான கிரியைகளை முடித்த பிறகு பெருநாள் தினத்தில் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் என்று தமது வசதிக்கேற்ப இறைவனுக்காகப் பலியிடுவது தியாகத் திருநாளில்.
பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளானது இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதாக அமைகிறது. இறைவனின் கட்டளையின்படி தன் மனைவியையும் பச்சிளங்குழந்தையையும் பாலைவனத்தில் விட்டுச் சென்றுவிட்டு, சில காலம் கழித்து வந்து இப்ராஹிம் (அலை) பார்க்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற வறண்ட பூமி ஒரு சிறு நகரமாகி இருந்தது. தன் குடும்பம் நல்ல சூழலில் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார்கள். மெக்காவிற்கு வந்து போன வண்ணம் இருந்தார்கள். தன் மகன் மீது அளவுகடந்த பாசம் உடையவர்களாக இருந்தார்கள்.
ஒருமுறை இப்ராஹிம் (அலை) தன் மகனைப் பார்க்க வரும் போது, இஸ்மாயீல் ஸம்ஸம் கிணற்றுக்கு அருகில் தனது அம்பை சீவிக் கொண்டிருந்தார்கள். மகனைக் கண்ட மகிழ்ச்சியில் அவர்களை ஆறத் தழுவி முத்தமிட்டார்கள். இப்ராஹிம் (அலை) அன்று இரவு தூங்கும் போது இறைவனின் கட்டளை ஒரு கனவாக வந்தது. மறுநாள் தம் கனவை குறித்து மகனிடம் சொன்னார்கள் இப்ராஹிம் (அலை). "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவது போலக் கனவு கண்டேன். இது குறித்து நீ என்ன நினைக்கிறாய்?" என்று தயக்கத்துடன் கேட்டார்கள். தந்தையைப் போலவே மிகுந்த இறைநம்பிக்கை கொண்ட இஸ்மாயீல் (அலை) சிறிதும் தயங்காமல் "இறைவனின் ஆணைப்படியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்" என்றார்.
இப்ராஹிம் தவமிருந்து பிரார்த்தித்து வரம் பெற்று தனது எண்பத்தி ஆறாவது வயதில் கிடைத்த பிள்ளைச் செல்வத்தை இறைவன் பலியிடச் சொல்லிவிட்டான் என்பதற்காக, அந்த இறைக் கட்டளைக்காக, மகன் இஸ்மாயீலை பலியிடத் துணிந்து ஓர் இடத்திற்குக் கூட்டி வருகிறார். அந்த வழியில் சைத்தான் இப்ராஹிமின் எண்ணத்தைக் கலைக்க முயற்சி செய்கிறான்.
"நல்லுள்ளம் கொண்ட இப்ராஹிம் பலியிடுவதா?" என்று கேள்விகளும் பிற தீய எண்ணங்களும் பிறக்கச் செய்த ஷைத்தானை கல்லாலடித்து விரட்டுகிறார்கள் இப்ராஹிம் (அலை). வழி கெடுக்க முனைந்த சைத்தான் மீது இப்ராஹிம் (அலை) கல்லெறிந்து விரட்டிய நிகழ்வின் நினைவாகத்தான் ஹஜ் கிரியைகளில் ஒன்றாகச் 'ஷைத்தான் என்று நினைத்து கல் எறியும்' கிரியை இன்றும் நிகழ்ந்து வருகிறது.
இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள். தன் மகன் கண்களைப் பார்த்து தனது மனம் மாறிவிடக் கூடாது என்று மகன் இஸ்மாயீலை குப்புறப்படுக்க வைத்து, கூர்மையான கத்தியை கழுத்தில் வைத்து அறுக்க முயல்கிறார்கள். எந்த இப்ராஹிமுக்காக இறைவன் நெருப்பின் தன்மையை அந்த நொடியில் நீக்கி அதனைக் குளிர்ச்சியாகவும் சுகமளிக்கக் கூடியதாகவும் மாற்றினானோ, அவனே கத்தியின் தன்மையையும் மாற்றினான், அதனை வெட்டவிடாமல் செய்தான்.
வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களை அனுப்பிப் பலியிடுவதைத் தடுத்தான் இறைவன். இப்ராஹிம் கண்ட கனவை நிறைவேற்றிவிட்டதாகவும், அவருக்காக ஏற்படுத்திய அனைத்து சோதனையிலும் அவர் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் அவருக்கு அறிவிக்கப்பட்டு, மகன் இஸ்மாயீலை பலியிடுவதற்குப் பதிலாக ஓர் ஆட்டை அல்லாஹ் பலியிடக் கட்டளையிட்டான்.
இப்ராஹீம் நபியவர்களின் இந்தத் தியாக உணர்வையும் இறை நம்பிக்கையையும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் பொறுமையையும் நினைவு கூர்வதற்காகவும், அவர்களைப் போல் பொறுமைமிக்கவராகவும் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்று உறுதி எடுப்பதற்காகவும், வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது குர்பானி (பலி) கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளது.
இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாவதாக!
திருக்குர்ஆன் 37:99-111