என் மலர்
இஸ்லாம்
காரைக்கால் ரெயில்நிலையம் அருகில் உள்ள கபூலாசாஹிபு தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் ரெயில்நிலையம் அருகில் உள்ள கபூலாசாஹிபு தர்காவில் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம்பூசும் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது மகானின் சமாதி மீது சந்தனம் பூசப்பட்டது. தொடர்ந்து துஆ ஓதப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேற்று இரவு பரிஜன்ஜி மவுலூது ஓதப்பட்டது. இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் பத்ருசஹாபாக்கள் மவுலூது ஓதப்படு கிறது. நாளை (ஞாயிறு) மகானுக்கு குர்-ஆன் ஓதி ஹதியா செய்யப்படுகிறது. 19-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகிகள் ஹாஜா செய்யது முகமது உமர், ஹம்ஜா முகையதீன் மாலிமார் மற்றும் பலர் செய்து உள்ளனர்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தமது வீட்டையும் நாட்டையும்விட்டு அகதியாக தங்கியிருந்து திரும்பி வந்து சிரமப்படும் ஸவ்தாவைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்) ஸவ்தாவைத் திருமணம் செய்ய முன் வந்தார்கள்.
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு முஸ்லிம்கள் இஸ்லாமிய எதிரிகளிடம் விவரிக்க முடியாத அளவிற்குத் துன்பங்களுக்கும் வசைமொழிகளுக்கும் ஆளானதால் இரண்டாவது முறையாக ஹபஷாவிற்கு அதாவது அபிசீனியாவிற்கு நாடு துறந்து மக்கள் ஹிஜ்ரா சென்றபோது, ஆரம்பக் காலத்திலேயே இஸ்லாமைத் தழுவிய ஸவ்தா (ரலி) மற்றும் அவரது கணவர் சக்ரான் இப்னு அம்ருவும், ஹபஷாவிற்கு (எத்தியோப்பியா) சென்றனர்.
ஹபஷாவிலேயே உடல்நிலை சரியில்லாமல் அகதியாகச் சென்ற ஸவ்தாவின் கணவர் சக்ரான் இறந்துவிட்டார். அதற்குப் பின் ஸவ்தா (ரலி) மக்காவிற்குத் திரும்பி வந்து “இத்தா” (இடைக்காலக் காத்திருப்புக் காலம்) இருந்தார். அதன் பிறகு அவருடைய வயதான தந்தை ஜம்ஆ(ரலி)வுடன் தங்கியிருந்தார். ஸவ்தாவுக்குக் குழந்தைகளுமிருந்தார்கள்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக தமது வீட்டையும் நாட்டையும்விட்டு அகதியாக தங்கியிருந்து திரும்பி வந்து சிரமப்படும் ஸவ்தாவைப் பற்றி அறிந்த நபி முஹம்மது (ஸல்) ஏற்கெனவே கதீஜா (ரலி) அவர்கள் மறைந்து விட்ட நிலையில், தன்னைவிட வயதில் மூத்தவரான ஸவ்தாவைத் திருமணம் செய்ய முன் வந்தார்கள்.
அந்தச் செய்தியை கவ்லா பின்த் ஹகீம் (ரலி) சென்று ஸவ்தா (ரலி) அவர்களிடம் சொல்ல. நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமில்ல, முழு மனித குலத்திற்கே மிக உயர்ந்த வழிகாட்டும் தலைவர், அழகிய குணங்களும், உயர்ந்த பண்புகளும், சிறந்த பழக்க வழக்கங்களும், பெருந்தன்மையும் கொண்டவர் என்று தெரிந்த ஸவ்தா முகம் மலர்ந்தவர்களாக சம்மதம் தெரிவித்து, தனது தந்தையிடம் கேட்கும்படி சொன்னார்கள்.
தந்தை ஜம்ஆவிடம் கவ்லா இவ்விஷயத்தைப் பற்றித் தெரிவிக்க மகளின் சம்மதத்தை அறிந்து இசைவு தெரிவித்தார். நபி முஹம்மது (ஸல்) அவர்களும் ஸவ்தா (ரலி) மணமுடித்தனர்.
ஸவ்தா (ரலி) உயரமான, கனத்த சரீரமுள்ளவராக இருந்தார்கள். பக்குவமான பொறுப்புள்ள மனைவியாக தனது குழந்தைகளோடு சேர்த்து நபி முஹம்மது (ஸல்) அவர்களின் குழந்தைகளையும் சிறப்பாகப் பராமரித்து வளர்த்தார்கள். நபிகளாரின் வாழ்க்கை முழுவதும் சேர்ந்திருந்து உற்ற துணைவியாக நபிகளாருக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துத் தொண்டு செய்து நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் திருப்திப்படுத்துவதில் அதிகக் கவனமும், விருப்பமும் கொண்டு செயல்பட்டார்.
ஸஹீஹ் புகாரி 2:25:680, ஸஹீஹ் முஸ்லிம் 17:2900, இப்னு கதீர்
- ஜெஸிலா பானு.

அடுத்தவர் மனதை வெல்ல வேண்டுமெனில் அவர் சொல்வதையும் கொஞ்சம் செவிமடுங்கள்.அடுத்தவருக்கு நமது செவிகளைக் கொடுத்தால்.. இதயங்களை அவர்கள் நமக்குத் தருவார்கள்.
மனிதர்களை தன்பால் இழுத்து அவர்களுடைய உள்ளங்களைக் கொள்ளை கொள்வது ஒரு கலை. சில செயல்களைச் செய்வதன் மூலம் உள்ளங்களைக் கொள்ளை கொள்வதுபோன்றே, சில செயல்களை விட்டுவிடுவதன் மூலமாகவும் கொள்ளை கொள்ளலாம்.
புன்சிரிப்பு நம்மை நோக்கி பிற மனிதர்களை இழுப்பது போன்றே, முகம் சுளிப்பதை விட்டுவிடுவதும் நம்மை நோக்கி அவர்களை இழுக்கும். நல்ல வார்த்தையும், மென்மையான நடத்தையும் மக்களை நம்மை நோக்கி இழுப்பதைப் போன்றே, அவர்களின் பேச்சை அழகிய முறையில் செவியேற்பதும் நம்மை நோக்கி அவர்களை இழுக்கும்.
ஒருசிலர் அதிகம் பேசமாட்டார்கள். சபைகளிலும், கூட்டங்களிலும் அவர்களுடைய சப்தத்தை அதிகம் கேட்கவும் முடியாது. ஆனால் சபையில் அவர்கள் அமர்ந்து இருக்கும்போது அவர்களுடைய தலையும், கண்களும் மட்டும் ஆடிக்கொண்டிருக்கும். எப்போதாவது உதடுகள் மட்டும் அசையும். ஆயினும் அது வார்த்தைகளுக்கான அசைவல்ல... புன்சிரிப்புக்கான அசைவு. அவர்களை மக்கள் நேசிப்பார்கள். தம் அருகில் அவர்கள் இருப்பதை விரும்புவார்கள்.
ஏன் தெரியுமா..? பிறரைத் தன்பால் கவர்ந்திழுக்கும் ஆற்றல் அவர்களிடம் உள்ளது. அதுதான் ‘செவியுறும் கலை’.
அடுத்தவர் பேசுவதை அக்கறையுடன் கேட்பதன் மூலமாகவும் மக்கள் மனங்களை வெல்ல முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். பிறர் பேசுவதை செவியேற்பதும் ஒரு கலையே. ஒரேயொரு நாவையும் இரண்டு செவிகளையும் ஏன் அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான் தெரியுமா...? பேசுவதைவிட அதிகம் செவியுறவேண்டும் என்பதற்குத்தான்.
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட மக்கா வாழ்வின் ஆரம்ப நாட்கள். முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. குறைஷிகளோ நபிகளாரை பொய்யர் என்றும் மந்திரவாதி என்றும் தூற்றிக்கொண்டிருந்தனர். நபிகளாருக்கு அருகில் மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதில் குறைஷிகள் கவனமாக இருந்தனர். எதை எதையோ சொல்லி மக்களைத் தடுத்துக்கொண்டிருந்தனர்.
ஒருநாள் ளம்மாத் எனும் மருத்துவர் மக்காவுக்கு வருகை தந்தார். இவர் மருத்துவத்தாலும், மந்திரத்தாலும், பைத்தியக்காரர்களுக்கும், நோயுற்ற மக்களுக்கும் சிகிச்சை செய்பவர்.
மக்கத்து மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் குறித்து, ‘பைத்தியக்காரர்’ என்று கூறுவதை இவர் செவியுற்றார். மக்களிடம் கேட்டார்: ‘எங்கே அந்த மனிதர்? என் மூலம் இறைவன் அவருக்கு நிவாரணத்தை வழங்கக் கூடும்’.
மக்களும் பெருமானார் (ஸல்) அவர்களை அடையாளம் காட்டினார்கள். அண்ணலாரை சந்தித்தபோது அவர்கள் முகத்தில் இருந்த பிரகாசத்தைப் பார்த்து ஒரு கண நேரம் ளம்மாத் அசந்துபோனார். ஆயினும் வந்த வேலையை கவனிக்கத் தொடங்கினார்.
நபி (ஸல்) அவர்களிடம் ளம்மாத்: ‘முஹம்மதே! காற்றின் மூலம் மந்திரம் செய்பவன் நான். என் மூலம் பல மக்கள் நிவாரணம் அடைந்துள்ளனர். எனவே என்னருகில் வாருங்கள்’ என்று கூறியவாறு தமது மந்திர சக்தியைக் குறித்தும், தாம் இதுவரை செய்துள்ள நிவாரணங்கள் குறித்தும், தமது ஆற்றலைக் குறித்தும் பேசத்தொடங்கினார்.
அவர் தொடர்ந்து பேசப்பேச... நபிகளாரோ அமைதியுடன் அத்தனையையும் செவிமடுத்தவாறு அமர்ந்து இருந்தார்கள்.
பெருமானர் (ஸல்) அவர்கள் யாருடைய பேச்சை அமைதியாக செவிமடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் என்று கவனித்தீர்களா...? இறை நிராகரிப்பாளரான.. அதுவும் தமக்கு சிகிச்சை செய்யவந்த ஒரு மந்திரவாதியின் சொற்களை அமைதியுடன் செவிமடுக்கின்றார்கள். எவ்வளவு பெரிய மதிநுட்பம்..!
இறுதியாக ளம்மாத் தமது நீண்ட சுய தம்பட்டத்தை முடித்துக்கொண்டார். அப்போது அண்ணலார் (ஸல்) அவர்கள் மிகவும் அமைதியாகக் கூறினார்கள்: ‘அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாங்கள் புகழ்கின்றோம். அவனிடமே நாங்கள் உதவி தேடுகின்றோம். அவன் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவருக்கு எவராலும் நேர்வழி காட்டவும் இயலாது. வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்தான் என்றும், அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்’.
அவ்வளவுதான்! இதனைச் செவியுற்ற ளம்மாத் திடுக்கிட்டார். ‘நீங்கள் இப்போது கூறிய அந்த வார்த்தைகளை மீண்டும் கூறுங்கள்’ என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அந்த வார்த்தைகளைக் கூறினார்கள். அப்போது ளம்மாத் கூறினார்: ‘இறைவன் மீது ஆணை! எத்தனையோ குறி சொல்பவர்கள், மந்திரவாதிகள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் வார்த்தைகளை நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை இதுவரை நான் கேட்டதில்லை. நீட்டுங்கள் உமது கரத்தை.. இஸ்லாத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்’.
பெருமானார் (ஸல்) அவர்கள் தமது கரம் நீட்ட.. அண்ணலாரின் கரங்களை பிடித்தவாறு இறைநிராகரிப்பின் ஆடையைக் களைந்து இஸ்லாத்தின் ஆடையை அணிந்துகொண்டார்.
ளம்மாத் (ரலி) அவர்கள் அவரது சமூகத்தினரால் மதிக்கப்படும் ஒரு மனிதர் என்பதை நபி (ஸல்) அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவரிடம் பெருமானார் (ஸல்) கேட்டார்கள்: ‘உமது சமூகத்தை இஸ்லாத்தின்பால் அழைப்பீரா..?’. ‘நிச்சயமாக அழைப்பேன்’ என்று கூறியவாறு அழைப்பாளராக ளம்மாத (ரலி) அங்கிருந்து திரும்பினார்.
அடுத்தவர் மனதை வெல்ல வேண்டுமெனில் அவர் சொல்வதையும் கொஞ்சம் செவிமடுங்கள். அவரின் கூற்றுக்கு தலை அசையுங்கள். புருவத்தை உயர்த்துங்கள். புன்சிரிப்பை உதிருங்கள். உதடு குவியுங்கள். பெரியவரோ.. சிறியவரோ.. உங்களுடன் பேசும் நபர் மந்திரத்தால் கட்டுண்டவர் போல் உங்களை விரும்புவார்.
அடுத்தவருக்கு நமது செவிகளைக் கொடுத்தால்.. இதயங்களை அவர்கள் நமக்குத் தருவார்கள்.
மவுலவி நூஹ் மஹ்ளரி, குளச்சல்.

ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட சாம்ராஜ்யத்தை- ஓர் ஒழுக்கமான சமுதாயத்தை 10 ஆண்டுகளில் உருவாக்கிய சாதனைச் சரித்திரம் உலகில் நபிகளாருக்கு மட்டுமே உண்டு.
மனிதர்களில் இருந்தே ஒரு சிலரைத் தன் தூதர்களாகத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தன் வேதத்தை இறைவன் வழங்கினான். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்த இறைத்தூதர்கள் அனைவரும் தாமே நடைமுறையில் வாழ்ந்து காட்டி நமக்குக் கற்றுத் தந்தார்கள்.
அதில் இறுதித் தூதராக அனுப்பப்பட்டவர்களே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். இன்றைய சவுதி அரேபியாவில், மக்கா மாநகரில் கி.பி.571-ம் ஆண்டு, ரபியுல் அவ்வல் பிறை 12 அன்று அப்துல்லாஹ்-ஆமினா தம்பதியரின் மகனாகப் பிறந்தார்கள், நபிகளார்.
பிறக்கும் முன்பே தந்தையையும், பிறந்த ஆறு ஆண்டுகளில் தாயையும் இழந்தார்கள். பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிப் அரவணைப்பிலும், அவர் மரணித்த பிறகு பெரிய தந்தை அபூதாலிப் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.
சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதற்காக கால்நடைகளை மேய்க்கும் தொழிலைச் செய்தார்கள். இளம் வயதில் தன்னுடைய பெரிய தந்தையின் வணிகக்குழுவில் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர் களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் பிறந்த பிரதேசத்தில் இளைஞர்களின் வாழ்க்கை முறை ஒழுக்கக்கேடுகளின் உறைவிடமாக இருந்தது.
அந்த இளமைப்பருவத்தில் நபிகளார் நேர்மையுடன் நடந்து வந்ததால் ‘நம்பிக்கைக்குரியவர்’ (அல் அமீன்), ‘வாய்மையாளர்’ (அஸ்ஸாதிக்) என்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டார்கள்.
இதைக் கேள்விப்பட்டு அரேபியாவின் மிகப்பெரிய வணிகச் சீமாட்டி கதீஜா தனது வர்த்தகத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை நபிகளாரிடம் ஒப்படைத்தார். பின்னர் நபிகளார், கதீஜா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள். அப்போது நபிகளாரின் வயது 25, கதீஜாவின் வயது 40. கதீஜா, திருமணமாகி இருமுறை விதவையானவர்.
நபிகளார் தனது 40 வயதில், மக்கா நகருக்கு அருகே உள்ள ‘ஹிரா’ குகைக்கு அடிக்கடி சென்று தனித்திருந்து தியானத்திலும், இறைச் சிந்தனையிலும் ஈடுபட்டு வந்தார்கள்.
ஒருநாள் வானவர் ஜிப்ரீல் (ரலி) அவர்கள் மூலமாக “ஓதுவீராக! (நபியே!) படைத்த உமது இறைவன் திருப்பெயர் கொண்டு” என்று தொடங்கும் இறைச் செய்திகள் (‘வஹீ’) இறக்கி அருளப்பட்டன.
இதனால் அச்சம் மேலிட நடுங்கியவாறு வீட்டுக்கு வந்து மனைவி கதீஜாவிடம் நடந்ததைக் கூறினார்கள். அவர் நபிகளாரை நோக்கி, “கலங்காதீர்கள். உங்களுக்கு எந்தத் தீங்கும் நேராது. நீங்கள் ஏழைகளுக்கு தாராளமாக வழங்கு கிறீர்கள். அநாதைகளையும், விதவைகளையும், ஆதரவற்றவர்களையும் ஆதரிக்கிறீர்கள். உங்களுக்கு நான் பக்கபலமாக இருப்பேன். இறைவன் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டான்” என்று ஆறுதல் கூறினார்கள்.
இதன்பின்னர் கதீஜா தமது உறவினர் வரக்கா பின் நவ்பல் என்ற அறிஞரிடம் நபிகளாரை அழைத்துச் சென்றார். நடந்த நிகழ்வுகளைக் கேட்ட வரக்கா, “முகம்மதே! உமக்கு இறைச்செய்தியை கொண்டு வந்தது வானவர் ஜிப்ரீலே. இறை அழைப்புப் பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மக்கள் உங்களைத் தூற்றுவார்கள்; துன்புறுத்து வார்கள். ஊரை விட்டே நீங்கள் வெளியேறும் நிலை வரும்” என்றார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு நபிகளார் இறைத்தூதர் என்னும் அந்தஸ்தைப் பெற்றார். இதற்கு முன்பு வந்த இறைத்தூதர் களைப் போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தொடர்ந்தும், விட்டு விட்டும் இறைச்செய்திகள் வரத் தொடங்கின.
தொடக்கத்தில் ரகசியமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் நபிகளார் இறை அழைப்புப் பணியை மேற்கொண்டார்கள். இதைக் குரைஷிகள் ஏற்க மறுத்து, அவர்களைக் கல்லாலும் கடும் சொல்லாலும் தாக்கினார்கள். பொறுமையுடன் இறைப்பணியை மேற்கொண்டபோதிலும் குரைஷிகளின் தொல்லை எல்லை மீறிப்போனது.
இதனால் தோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் மதீனா சென்றார்கள். அந்த நகர மக்கள் நபிகளாரை வரவேற்று இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவர்களைத் தங்களது ஆன்மிக, அரசியல் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களைப் போற்றிக் கொண்டாடினார்கள். மதீனா நகர மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகளாரைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டங்கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள்.
நபிகளாரின் வளர்ச்சியைப் பொறுக்காத மக்கா நகர குரைஷிகள், மதீனா மீது பலமுறை போர் தொடுத்து தோல்வியைத் தழுவினார்கள். சமாதான உடன்படிக்கையை மக்கா வாசிகள் மீறினார்கள். இதனால் நபிகளார் ஹிஜ்ரி 8-ம் ஆண்டு ரமலான் மாதம் 10-ந்தேதி பத்தாயிரம் தோழர்களுடன் சென்று மக்காவை வெற்றி கொண்டார்கள். ‘எவர் மீது பழிவாங்கல் இல்லை’ என்று உறுதி அளித்த நபிகளார் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.
தோழர்கள் முன்னும் பின்னும் புடை சூழ இறை இல்லமான கஅபாவுக்குச் சென்றார்கள் நபிகளார். இறை இல்லத்தை வலம் வந்தார்கள்.
“சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” (திருக்குர்ஆன்-17:81) என்ற வசனத்தை ஓதியவர்களாக அங்கிருந்த 360 சிலைகளையும் அகற்றினார்கள். அங்கிருந்த உருவப்படங்களும் அழிக்கப்பட்டன.
‘அல்லாஹ் அக்பர்’ (இறைவன் பெரியவன்) என்ற தக்பீர் முழக்கம் எங்கும் எதிரொலித்தது. இறை இல்லத்தை அவர்கள் வலம் வந்தார்கள். ‘மகாமே இப்ராகீம்’ (இப்ராகீம் நபி தொழுத இடம்) என்ற இடத்தில் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
23 ஆண்டுகளில் அவரது கொள்கைகளை அரேபிய தீபகற்பம் முழுமையாக ஏற்றுக்கொண்டது. தமது வாழ்வின் இறுதி ஆண்டான கி.பி.632-ம் ஆண்டில் தோழர்களுடன் மக்கா சென்று புனித ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றினார்கள். அதே ஆண்டில் தமது 63-ம் வயதில் மரணம் அடைந்தார்கள்.

ஒவ்வொருவரும் இஸ்லாத்தை ஏற்கும்போது பல துன்பத்திற்கும் ஆளானார்கள். அந்தத் துன்பத்திலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதால் இன்பம் கண்டவர்களாகவே இருந்தனர்.
கிஃபார் என்ற குலத்தைச் சேர்ந்தவர் அபூதர் (ரலி) என்பவருக்கு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிற்கு அழைப்பு விடுப்பது பற்றிய தகவல் வந்தது. அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள அவருடைய சகோதரர் அனீஸை அனுப்பினார்கள். அனீஸ் மக்காவிற்கு வந்து நபிகளாரை பற்றித் தெரிந்து கொண்டு அவருடைய ஊருக்குத் திரும்பி அபூதரிடம் “நான் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அவர் தீமைகளிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் இருக்கிறார். நன்மைகளைச் செய்யும்படியும் கட்டளையிடுகிறார்” என்று சொன்னார். அபூதருக்கு அந்தத் தகவல் போதுமானதாக இல்லாததால், அவரே நேரடியாக நபிகளாரைப் பற்றித் தெரிந்து கொள்ள மக்காவிற்குச் சென்றார்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களைத் தேடி வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ளாமல், யாரிடமும் நேரடியாக விசாரிக்காமல் நபிகளாரைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் ‘ஸம் ஸம்’ தண்ணீரைக் குடித்துக் கொண்டு கஅபாவில் தங்கினார்.
அந்த இடத்தில் அபூதரைச் சந்தித்த அலீ (ரலி), ஊருக்குப் புதியவர் அபூதர் என்பதை இனம் கண்டு கொண்டு, தமது வீட்டிற்கு அபூதரை விருந்தினராக அழைத்தார். அபூதரும் அந்த இரவு அலீ (ரலி) அவர்களுடன் தங்கிவிட்டு, மறுநாள் காலை மறுபடியும் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி மறைமுகமாக விசாரிக்க இறையில்லத்திற்குச் சென்றார். யாரும் எதுவும் நபிகளாரைப் பற்றி அங்கு பேசவில்லை.
மறுபடியும் அலீ (ரலி), அபூதரை அங்கே பார்த்தார். அபூதரிடம் சென்று நேரடியாக “இந்த ஊருக்கு நீங்கள் வந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார். நேரடியாகக் கேட்டவுடன் மறைக்க முடியாமல் அபூதர் “நான் இங்கே தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருப்பவரை பற்றித் தெரிந்து கொள்ள வந்தேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்” என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு அலீ (ரலி) “நீங்கள் சரியான பாதையைத்தான் அடைந்துள்ளீர்கள். இது நான் அவரிடம் செல்லும் நேரம்தான். நீங்கள் விரும்பினால் என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள். நான் நுழையும் வீட்டில் நீங்களும் நுழையுங்கள். வழியில் நமக்கு ஆபத்து விளைவிக்கும் யாரையும் நான் கண்டால், என் செருப்பைச் சரி செய்பவனைப் போல் நான் குனிந்து சுவரோரமாக நிற்பேன். நீங்கள் நடந்து கொண்டே இருங்கள்” என்று விளக்கிய பிறகு இருவரும் நடந்தனர்.
அவர்கள் ஒருவழியாக நபி முஹம்மது (ஸல்) அவர்களை அடைந்தனர். நபிகளாரிடம் தனக்கு இஸ்லாத்தை எடுத்துரைக்கும்படி அபூதர் கேட்டுக் கொண்டார். நபிகளார் விவரிக்க, அதே இடத்தில், அதே நிமிடத்தில் அபூதர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
நபிகள் நாயகம் (ஸல்) அபூதரிடம் “அபூதரே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட விஷயத்தை மறைத்து விடுங்கள். இங்கு நிலைமை மோசமாக உள்ளது. அதனால் நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லுங்கள். இஸ்லாம் மேலோங்கிவிட்ட செய்தி உங்களை எட்டும்போது எங்களிடம் வாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூதர் “உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் இந்த ஏகத்துவக் கொள்கையை அவர்களுக்கிடையே உரக்கச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறி, நேராக இறையில்லத்திற்கு வந்தார்.
அந்த இடத்தில் குறைஷிகள் அங்கே நிறைந்து இருந்தனர். அபூதர், “குறைஷி குலத்தாரே! அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னார். உடனே, குறைஷியர் “மதம் மாறிய துரோகியை அடித்துக் கொல்லுங்கள்” என்று கூறினர்.
சிலர் எழுந்து வந்து அபூதரை கடுமையாகத் தாக்கினர். அப்போது அப்பாஸ் (ரலி) அபூதரை அடையாளம் கண்டு கொண்டு, அபூதருக்கு அடிபடாமல் அவர் மீது கவிழ்ந்து அடிப்பவர்களைத் தடுத்தவராக, குறைஷிகளை நோக்கி, 'உங்களுக்கு என்னவாயிற்று? கிஃபார் குலத்தைச் சேர்ந்த மனிதரையா நீங்கள் கொல்கிறீர்கள்? நீங்கள் வியாபாரம் செய்யுமிடமும் நீங்கள் வாணிபத்திற்காகக் கடந்து செல்ல வேண்டிய பாதையும் கிஃபார் குலத்தவர் வசிக்குமிடத்தையொட்டித் தானே உள்ளது? அவர்கள் பழிவாங்க வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். உடனே, குறைஷியர் அபூதரை விட்டு விலகிவிட்டனர்.
மறுநாள் காலை மறுபடியும் அபூதர் இறையில்லத்திற்குத் திரும்பிச் சென்று முன்தினம் சொன்னதைப் போன்றே சொன்னார். குறைஷியர் மறுபடியும் தாக்க, அப்பாஸ் (ரலி) மறுபடியும் குறைஷியருக்கு விளக்கி அவர்களைத் தடுத்தார். இப்படி ஒவ்வொருவரும் இஸ்லாத்தை ஏற்கும்போது பல துன்பத்திற்கும் ஆளானார்கள். அந்தத் துன்பத்திலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்க் கொண்டதால் இன்பம் கண்டவர்களாகவே இருந்தனர்.
ஸஹீஹ் புகாரி 4:61:3522

திருப்பூரில் ‘மிலாது நபி’ திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் நேற்று ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான ‘மிலாது நபி’ திருநாளை நேற்று முஸ்லிம்கள் கொண்டாடினார்கள். இந்த திருநாளை முன்னிட்டு திருப்பூர் பெரியகடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் திருப்பூர் மிலாது கமிட்டி சார்பில் ‘மாநபியின் புகழ்பாடும் ஊர்வலம்’ நேற்று காலை நடந்தது.
ஊர்வலத்துக்கு திருப்பூர் மிலாது கமிட்டி தலைவர் சையத் மன்சூர் உசேன் தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் செய்யதுஅகமது தொடக்க உரையாற்றினார். திருப்பூர் மாநகர தெற்கு உட்கோட்ட உதவி போலீஸ் கமிஷனர் மணி பேரணியை தொடங்கிவைத்தார். திருப்பூர் டூம்லைட் பள்ளிவாசல் தலைவர் அப்துல்சுபகான் அமைதிபுறாக்களை பறக்கவிட்டார்.
இந்த ஊர்வலத்தில் ஜமாஅத்துல் உலமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.எஸ்.எப். அமைப்பு, தாவதே இஸ்லாமி மற்றும் தர்காக்கள் பேரவை ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மதரஸா பள்ளி மாணவ-மாணவிகள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் அனைவரும் நபிகள் நாயகத்தின் புகழை பாடி சென்றனர்.
திருப்பூர் பெரிய பள்ளி வாசலில் தொடங்கிய ஊர்வலம், காங்கேயம் ரோடு, டூம்லைட் மைதானம், கே.என்.பி.காலனி, பெரியதோட்டம், வெங்கடேஸ்வரா நகர், காயிதேமில்லத் நகர், ராஜீவ்நகர் வழியாக திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சந்திப்பை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
இந்த ஊர்வலத்தில் திருப்பூர் வட்டார ஜமா அத்துல் உலமாவின் தலைவர் ஜபருல்லா பாகவி, செயலாளர் நசீர்அகமது, மிலாது கமிட்டி செயலாளர் ஜூனைத் அத்தாரி, எஸ்.எஸ்.எப். மாநில துணைத்தலைவர் ஷாஜஹான், செயலாளர் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வடக்கு மாவட்ட தலைவர் சையதுமுஸ்தபா, பொருளாளர் யாசின் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நபி முஹம்மது (ஸல்) மக்காவிற்குத் திரும்பச் சென்று இஸ்லாமைப் புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் பரவச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் புறப்பட்டார்கள்.
திருக்குர்ஆனில் ‘ஜின்’ எனும் அத்தியாயத்தில், “நிச்சயமாக, ஜின்களில் சிலர் இவ்வேதத்தைச் செவியுற்றுத் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி “நிச்சயமாக, நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம் அது நேரான வழியை அறிவிக்கின்றது. ஆகவே, அதனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம்.
இனி நாங்கள் எங்கள் இறைவனுக்கு ஒருவனையும் இணையாக்க மாட்டோம்...” என்றும் “நிச்சயமாக நாம் பூமியில் அல்லாஹ்வைத் தோற்கடிகவோ இயலாமலாக்கவோ முடியாது என்பதையும், பூமியிலிருந்து ஓடி ஒளிந்து அவனை விட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது என்பதையும் உறுதியாக அறிந்துகொண்டோம்” என்று ஜின்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து குர்ஆனை கேட்டுச் சென்றதை பற்றி, இந்த வசனங்கள் மூலம் அல்லாஹ், பெருமானார் நபிகளுக்கு அறிவித்த பிறகு, தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாம் அழைப்பை மறுத்தது குறித்ததான வேதனை நபி முஹம்மது (ஸல்) அவர்களை விட்டும் அகன்றது.
அல்லாஹ்வின் இந்தத் திருவசனத்தில் சொல்லப்பட்ட நற்செய்தியைக் கேட்டு நபிகளார் மகிழ்ந்தார்கள். நபி முஹம்மது (ஸல்) மக்காவிற்குத் திரும்பச் சென்று இஸ்லாமைப் புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும், துணிவுடனும், வீரத்துடனும் பரவச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் புறப்பட்டார்கள்.
நபிகளாரைக் குறைஷிகள் எதிர்த்தவேளையில் எப்படி மீண்டும் மக்காவிற்குள் செல்வது என்று ஸைத் யோசித்ததை நபி முஹம்மது (ஸல்) அவர்களிடமே கேட்டார். அதற்கு நபிகளார் “ஸைதே! நாம் அவதிப்படும் இத்துன்பங்கள் அனைத்திற்கும் விரைவில் முடிவு வரும். அல்லாஹ் நமக்கு மகிழ்ச்சியைத் தருவான். மாற்றங்கள் எல்லோரின் மனதிலும் ஏற்படும். அல்லாஹ் அதற்கான உதவியை நிச்சயம் செய்வான் என்று நம்புகிறேன்” என்றார்கள்.
நபி முஹம்மது (ஸல்), மக்காவில் அடைக்கலம் வேண்டியபோது பலர் மறுத்துவிட்டனர். முத்இம் என்பவர் மட்டும் மிகத் தைரியமாக நபிகளாருக்கு அடைக்கலம் தருகிறேன் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பாதுகாப்புடன் கஅபாவிற்கு அழைத்துச் சென்றார். முத்இம் இஸ்லாமிற்கு மாறவில்லை ஆனால் அடைக்கலம் வேண்டியவருக்குப் பாதுகாப்பு அளித்து, அதனை அறிவிக்கவும் செய்தார். முத்இமின் அடைக்கலத்தில் நபிகளார் கஅபாவிற்குச் சென்று தொழுதார்கள். ஹஜ்ருல் அஸ்வத் கல்லை (சொர்க்கத்து கல்லை) முத்தமிட்டார்கள்.
நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ஹஜ்ஜுடைய காலம் நெருங்கியபோது பல திசைகளிலிருந்து ஹஜ்ஜு கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவிற்கு மக்கள் அனைவரும் வந்தனர். அந்த சந்தர்ப்பத்தை நபிகளார் பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு ஆண்டையும் போலவே அம்மக்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி விவரித்து இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அந்த ஆண்டு அம்மக்களிடம் தனக்கு, தமது எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்றும் உதவி வேண்டுமென்றும் கோரிக்கைகளைச் சேர்த்தே முன் வைத்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பல குலத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் குழுக்களுக்கும் அறிமுகப்படுத்தியது போலவே தனி நபர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அதில் சிலர் “அதிகாரம் கிடைக்குமா? செல்வம் கிடைக்குமா?” என்று கேட்டனர். அதற்கு நபிகளார் “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. அவன் விரும்பியதைக் கொடுப்பான்” என்று அவர்கள் அளித்த பதிலை ஏற்காமல், லாபம் தராத இந்த மார்க்கத்தை ஏற்கத் தயாரில்லை என்று நிராகரித்தனர்.
மிகச் சிலர் ‘லாஇலாஹஇல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வழிபாட்டிற்குரியவன் வேறு எவருமில்லை), ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்), ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லி நல்ல பதில்களையும் தந்து இஸ்லாத்தை ஏற்றனர்.
(ஆதாரம்: இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம், திருக்குர்ஆன் 72:1-15)
-ஜெஸிலா பானு.

திருக்குர்ஆன் இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேதமாகவும், மனித குலத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்குகிறது.

“இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். (நபியே!) இதனை நாம் உம் மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங் களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதில் இருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக” (திருக்குர்ஆன்-38:29) என்றும்,
“இது உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை” (திருக்குர்ஆன்-68:52) என்றும் இறைவன் திருமறையில் கூறுகின்றான்.
குர்ஆன் எல்லாச் செய்திகளையும் எளிமையாக எடுத்துச் சொல்கிறது. பல்வேறு காலங்களில் இந்த உலகில் அவதரித்த இறைத்தூதர்கள் பற்றிப் பேசுகிறது. மனிதன் படைக்கப்பட்ட விதத்தை அது பறைசாற்றுகிறது. இயற்கையின் ஆற்றல்களை அது எடுத்துரைக்கிறது. கடந்த கால சமுதாயங்களின் வரலாறுகளை அது விவரிக்கிறது. அழிந்துபோன சமுதாயங்களின் நிலைமைகளைப் பார்க்கும்படி கூறி அச்சமூட்டி எச்சரிக்கிறது.
அன்றைய அரேபியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்கள் அறிந்திராத பல அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் துல்லிய மாகக் கூறுகிறது. இன்றைய விஞ்ஞான உலகம் குர்ஆனின் குரல் உண்மை என்பதை உரக்க உரைக்கிறது.
உலகத்தில் உள்ள எல்லா மதங்களில் உள்ள வேத நூல்களும் அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களால் ஓதப்படுகின்றன. சில சிறப்பான வேளை மற்றும் பண்டிகையின்போது ஓதுகின்ற வேதங்களாக அவை உள்ளன. ஆனால் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ஓதக்கூடிய ஒரே திருமறை, திருக்குர்ஆன்தான். ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை நடைபெறும்போது பள்ளிவாசல்களில் திருக்குர்ஆனின் வசனங்கள் ஓதப்படுகின்றன. நாட்டுக்கு நாடு நேரம் வேறுபடுவதைக் கணக்கிட்டுப் பார்த்தால் 24 மணி நேரமும் ஓதப்படுகிற திருமறையாகத் திருக்குர்ஆன் திகழ்வதைக் காணலாம்.
பிற மதங்களுக்குரிய வேதங்கள் பல நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் அந்தந்த மொழிகளிலேயே ஓதப்படுகிறது. ஆனால் மூல மொழியான அரபி மொழியிலேயே ஓதப்படுகிற ஒரே மறை, திருக்குர்ஆன்தான். திருக்குர்ஆன் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டாலும் அது ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் அரபி மொழியும் இடம் பெற்றிருக்கும். அரபி மொழி இல்லாத தொகுப்புகளைப் பார்ப்பது அரிது.
இந்த உலகத்தில் அருளப்பட்ட எந்த வேத நூலுக்கும் இல்லாத சிறப்பு திருக்குர்ஆனுக்கு உண்டு. 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆன் அருளப்பட்டு, அது எந்த வரிசைப்படி தொகுக்கப்பட்டதோ, அதே வரிசைப்படி ஒரு புள்ளிகூட மாறாமல்- மாற்றப்படாமல் இன்று வரை இருக்கிறது.
இதற்குக் காரணம், அதைப் பாதுகாத்துக் கொள்கிற பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டு விட்டான். “நிச்சயமாக நாம்தான் (உம்மீது) இவ்வேதத்தை இறக்கி வைத்தோம். ஆகவே (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம்.” (திருக்குர்ஆன்-15:9) என்று இறைவன் கூறுகின்றான்.
நடையழகு கொண்டு இறைவனால் மொழியப்பட்ட நூல், திருக்குர்ஆன். அது கவிதையும் அல்ல; வசனமும் அல்ல. இவ்விரண்டுக்கும் உயர்ந்த நிலையில் இருப்பது. திருமறை வசனங்கள், ஓதுகிறவர்களை மட்டுமல்ல; அதைக் கேட்பவர்களையும் கட்டிப் போடும் சக்தி கொண்டது.
“குர்ஆனின் மாபெரும் வலிமை அதன் கொள்கைகளில் மட்டுமல்ல; அதன் விந்தை மிகு ஓசை நயத்திலும் உள்ளது.” என்றார், ஒரு மேலை நாட்டு அறிஞர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்வேன் என்று சூளுரைத்து, உருவிய வாளுடன் உமர் (ரலி) சென்றார். வழியில் அவருடைய தங்கை பாத்திமாவும், அவருடைய கணவரும் இஸ்லாத்தைத் தழுவிய செய்தி கிடைத்ததும் கோபத்துடன் தங்கையின் வீட்டுக்குப் போனார். அப்போது தங்கை ஓதிய குர்ஆன் வசனத்தைக் கேட்டு மனம் மாறி உமர் இஸ்லாத்தைத் தழுவினார்.
குரைஷிகளின் கொடுமையைத் தாங்க முடியாமல் முஸ்லிம்கள் அபிசீனியா நாட்டுக்குச் சென்றனர். அவர்களுக்கு எதிராக மன்னர் நஜ்ஜாஜியிடம் குற்றம் சாட்டினர், குரைஷிகளின் தூதர்கள். மன்னரோ கிறிஸ்தவர். ஈசா நபி பற்றிய கொள்கையில் முஸ்லிம்கள் முரண்படுவதாகச் சொல்லி ஒரு தர்ம சங்கடமான நிலையை உருவாக்கினார்கள். அப்போது முஸ்லிம் குழுவின் தலைவர் ஜஅபர் இப்னு அபூதாலிப் திருக்குர்ஆனில் அந்தப் பகுதியை ஓதிக் காட்டினார். அப்போது குர்ஆன் வசனங்கள் மன்னரை வசப்படுத்தியது. மன்னர், “இதில் தவறேதும் இல்லை. முஸ்லிம்கள் விரும்பும் வரை என் நாட்டில் இருக்கலாம்” என்றார். பின்னர் சில நாட்களில் அவரே இஸ்லாத்தைத் தழுவினார் என்பது வரலாறு.
“இது (இறைவனால்தான் அருளப்பட்ட) தெளிவான வசனங்களாக இருக்கின்றன. ஆகவே மெய்யான ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் இது பதிந்து விடும்.” (திருக்குர்ஆன்-29:49) என்ற இறைமொழிக்கு ஏற்ப ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களின் இதயங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுகிற ஒரு வேதமாக திருக்குர்ஆன் திகழ்கிறது. நபிகளார் காலத்திலேயே அதைப் பலரும் மனப்பாடம் செய்தனர். அப்போது திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நூற்றுக்கணக்கான நபித்தோழர்கள் இருந்தனர். அதன் பின்னரும் இந்த நிலை தொடர்ந்தது. திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்பவர் களுக்கு ‘ஹாபிழ்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இப்போது உலகம் முழுக்க குர்ஆனை மனனம் செய்தவர் களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.
இன்றைய தினம் உலகில் ஒரு திருக்குர்ஆன் பிரதிகள்கூட இல்லை என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். மறுகணமே சில மணி நேரத்தில் ஒரு எழுத்துக்கூட மாறாமல் திருக்குர்ஆன் உருவாகி விடும். அழிக்க முடியாத ஒரு வேதமாக- லட்சக்கணக்கான மக்கள் உள்ளத்தில் உள்ள ஒரு வேதமாக இருக்கும் பெருமை இவ்வுலகில் திருக்குர்ஆனுக்கு மட்டுமே உண்டு.

‘நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன்: 33:21)
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன்: 33:21)
அண்ணலாரைக் குறித்து அல்லாஹ் அறிமுகம் செய்கிறபோது, ‘தூதரிடம் முன்மாதிரி இருக்கிறது’ என்று மட்டும் அறிமுகம் செய்யவில்லை. ‘அத்தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’ என்று கூறி நபிகளாரின் ‘அழகியல் ஆளுமை’யை நமக்கு அறிமுகம் செய்கிறான்.
அல்லாஹ்வின் அறிமுகத்திற்கேற்ப அண்ணலாரின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் ஓர் அழகியல் நேர்த்தியும், ஒழுங்கியல் செம்மையும் பின்னிப்பிணைந்திருப்பதை நாம் காணலாம்.
நபிகளாரின் சொல், செயல், இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அவர்கள் பெற வேண்டிய உரிமைகள் என அனைத்து செயல்பாடுகளிலும் நபிகளார் அழகான ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தார்கள்.
இதனால் தான் நபிகளாரின் நற்குணம் தனியொரு இறை வசனத்தின் மூலம் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்படுகிறது:
‘மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த, மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்’. (68:4)
அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘நபிகளாரின் குணம் எப்படியிருந்தது?’ என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘நபிகளாரின் குணம் திருக்குர்ஆனாக இருந்தது’ என்று கூறினார்கள் என்பது நபிமொழியாகும்.
திருக்குர்ஆன் தெளிவானது, அழகானது, அறிவுப்பூர்வமானது, ஆதாரப்பூர்வமானது. அதன்படியே அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அழகானது, ஆதாரப்பூர்வமானது. இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமேயில்லை.
இதனால்தான் ஒரு இறைபக்தனைப் பற்றி பேசும்போது நபிகளார் இவ்வாறு கூறினார்கள்:
‘நற்குணத்தில் பரிபூரணமானவர்தான் ஈமான் எனும் இறைவாசத்தில் பரிபூரணமானவர் ஆவார்’.
இதை மெய்ப்பிக்கும் திருக்குர்ஆன் வசனம் இது:
‘(முமீன்களே) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள்நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முமீன்கள் மீது மிக்க கருணையும் மிகுந்த கிருபையும் உடையவராக இருக்கின்றார்’. (திருக்குர்ஆன் 9:128)
இன்றைக்கு இந்த பண்புகள் நம்மிடம் இருக்கின்றதா? நம்மை ஒட்டி வாழும் நம் சகோதரர் களுக்கு நாம் நன்மையை நாடுகிறோமா, இல்லை தீமையையா?. அவர்களுக்காக நாம் எதைவிட்டுக் கொடுத்தோம்? இக்கட்டான நேரங்களில் தானே நம் நற்குணம் வெளிப்பபட வேண்டும். அதுதானே நம்முடைய மனிதாபிமானத்திற்கு நல்லழகு.
‘வெட்டிய உறவுகளோடு ஒட்டி வாழ், அநீதியிழைத்தவனை மன்னித்திடு. தீங்கு செய்தவனுக்கும் நன்மைசெய்’ என்ற நபிகளாரின் நன்மொழியை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியுமா? நபிகளாரின் சொல்லோவியங்கள் யாவுமே வெற்றுச்சொற்களல்ல. அவையாவுமே அனுபவப்பூர்வமான, செயலாக்கம் பெற்ற வெற்றிச் செயல்கள்.
எனவே நமது வாழ்நாட்களில் இம்மூன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டால் கூட நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நற்குணத்துடன் நாம் வாழ வேண்டுமே தவிர, நயவஞ்சகத்தனத்துடன் அல்ல. இதுகுறித்து இறைத்தூதர் இப்படிச்சொன்னார்கள்:
‘நயவஞ்சகன் (முநாபிக்) என்பவன் பேசினால் பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறுசெய்வான்; நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்; ஒப்பந்தம் செய்தால் முறித்து விடுவான்’ என்று இந்நான்கு நல் அடையாளங்களை நமக்கு விளக்கிக் கூறினார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் தமது தோழர்களுடன் எப்படி நற்குணத்துடன் நடந்துகொண்டார்கள் என்பதை எடுத்துக்காட்டும் திருக்குர்ஆன் வசனம் இது:
‘அல்லாஹ்வுடைய ரஹ்மத்(எனும்கிருபை)தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்த முடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர் களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (3:159)
இவ்வசனத்தை மீண்டும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள். அடுக்கடுக்காக பல்வேறு உண்மைகள் உங்களுக்கு புலப் படக்கூடும். இப்படியெல்லாம் நபிகளார் பணிவுடனும், கனிவுடனும் நடந்து கொண்டதனால் தான் ‘அகிலத்தார்களின் அருட்கொடை’ என நபியவர்கள் அல்லாஹ்வால் அடையாளப்படுத்தப்பட்டார்கள். அதைக்கூறும் இறைவசம் இதோ:
‘(நபியே) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக, ஓர் அருட்கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)
எனவே, நபிகளாரின் நற்குணங்களை செயல்படுத்தும் போது, நிச்சயம் ‘ரஹ்மத்’ எனும் இறையருள் நமக்கு கிடைக்கும். நபிகளாரின் நற்குணங்கள் அனைத்தையும் கடைப்பிடிக்க நாம் முன்வர வேண்டும்.
வாருங்கள், நற்குணங்களை போற்றுவோம், துர்க்குணங் களை மாற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வேதனையிலும் தன்னுடைய பலவீனத்தை மட்டும் மனம்விட்டு முறையிட்டார்களே தவிர அல்லாஹ்விடம் புகாராகச் சொல்லவில்லை.
தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாமை ஏற்காமல் நபி முஹம்மது (ஸல்) அவர்களைச் சிறு கற்களால் அடித்துத் தாக்கி, பழித்துப் பேசி நகரத்தைவிட்டு வெளியே அனுப்பினர். நபிகள் நாயகம் (ஸல்) தாயிஃப் நகரத்திலிருந்து சில மைல் தொலைவில் இருக்கும் ரபிஆவின் மகன்கள் ஷைபா- உத்பாவிற்குச் சொந்தமான திராட்சை தோட்டத்தின் நிழலில் உட்கார்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் காயம்பட்ட நிலையைப் பார்த்த ரபிஆவின் மகன்கள் தங்களின் வேலையாளான அத்தாஸ் என்பவரிடம் நபி (ஸல்) அவர்களுக்குத் திராட்சை குலையை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார்கள். இறைவனிடம் பிரார்த்தித்து முடித்த வேளையில் அவனுடைய கருணையாகக் கிடைத்த பழத்தை நபி முஹம்மது (ஸல்) ‘பிஸ்மில்லாஹ்’ என்று சொல்லி சாப்பிட்டார்கள்.
இதைக் கேட்ட அத்தாஸ் அதனை வியந்தவர்களாக, “இது இந்த ஊர் மக்கள் சொல்வழக்காகத் தெரியவில்லையே! மிகவும் வேறுபட்டதாக உள்ளதே!? நீங்கள் யார்?” என்று கேட்டார்.
நபி முஹம்மது (ஸல்) முகம் மலர்ந்தவராக “உங்களுக்கு எந்த ஊர்? உங்களின் மார்க்கம் என்ன?” என்று அத்தாஸிடம் கேட்டபோது, அவர் “நான் நீனவாவைச் சேர்ந்த கிறிஸ்துவன்” என்றார். அதற்கு நபி (ஸல்) “யூனுஸ் இப்னு மத்தாவின் ஊரைச் சேர்ந்தவர்தானே? அவர் எனது சகோதரர். அவரும் என்னைப் போலவே ஓர் இறைத்தூதர்” என்று சொன்னவுடன் அத்தாஸ் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றி முத்தமிட்டார்கள். இதைத் தொலைவிலிருந்து கவனித்த ரபிஆவின் மகன்கள் “அத்தாஸை அவர் குழப்பிவிட்டார்” என்று பேசிக் கொண்டார்கள்.
அத்தாஸ் திரும்பி வந்து “முதலாளிமார்களே, இப்பூமியில் இவரைவிடச் சிறந்தவர் இல்லை. இவர் எனக்குச் சொன்ன விஷயத்தை ஓர் இறைத்தூதரைத் தவிர வேறு யாருமே சொல்ல முடியாது” என்று விளக்க முற்பட்டதை ரபிஆவின் குமாரர்கள் பொருட்படுத்தவில்லை.
நபி முஹம்மது (ஸல்) அந்தத் தோட்டத்திலிருந்து வெளியேறி மிகவும் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தார்கள். சுய உணர்வற்று ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடம் வரை அடைந்து தனது தலையை உயர்த்தியபோது அங்கே வானத்தில் ஒரு மேகத்தில் வானவர் ஜிப்ரீல் (அலை) நிழலிட்டுக் கொண்டதுபோல் இருந்தார்கள்.
வேதனை சூழ்ந்த நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாடிய முகத்தைப் பார்த்து “உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும், அதற்கு அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் அறிவான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிக்க மலைகளின் வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று வானவர் ஜிப்ரீல் (அலை) கூறினார்கள்.
மலைகளை நிர்வகிக்கும் வானவர் “அஸ்ஸலாமு அலைக்கும் நபியே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடுங்கள். அந்நகரின் அருகிலுள்ள இரண்டு மலைகளையும் அம்மக்களின் மீது புரட்டிப் போட்டுவிடவா, அல்லது அவர்களை இரு மலைகளுக்கிடையில் நசுக்கிவிடவா? உங்களிடன் கட்டளையின்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.
கருணையின் உருவான நபி முஹம்மது (ஸல்), “வேண்டாம், அவர்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள். தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாமை ஏற்காவிட்டாலும் அவர்களின் சந்ததிகள் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல், அவனை மட்டுமே வணங்குபவர்களாக அல்லாஹ் நிச்சயம் உருவாக்குவான் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே அவர்களைத் தண்டிக்க வேண்டாம்” என்று உறுதியாகச் சொன்னார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வேதனையிலும் தன்னுடைய பலவீனத்தை மட்டும் மனம்விட்டு முறையிட்டார்களே தவிர அல்லாஹ்விடம் புகாராகச் சொல்லவில்லை. கோபத்திலும் அம்மக்களுக்குத் தீங்கிழைக்க வேண்டுமென்று எண்ணவில்லை .
(ஸஹீஹ் புகாரி 3:59:3231, சீறா இப்னு ஹிஷாம், அர்ரஹீக் அல்மக்தூம்)

நபி முஹம்மது (ஸல்) அவர்களை, தாயிஃப் நகரத்துத் தலைவர்கள் அவமதித்தாலும் அந்நகரத்து மக்கள் இஸ்லாமை ஆதரிப்பார்கள் என்று நம்பினார்கள் நபிகளார்.

தாயிஃப் நகரத்து மக்களிடமும் மற்ற தலைவர்களிடமும் ஏகத்துவத்தை எடுத்துரைத்தார்கள் நபிகளார். ஆனால் யாருமே செவிமடுக்கவில்லை. இஸ்லாமை யாரும் ஏற்கவில்லை. இஸ்லாமை ஏற்காதவர்கள் நபிகள் நாயகத்தை உடனே அந்நகரத்தைவிட்டு வெளியேறச் சொன்னதோடு, கடுமையான வார்த்தைகளால் பழித்துப் பேசி, நபிகளாரின் மீது சிறு கற்களை வீசினர்.
நபிகளாரின் மென்மையான மேனியிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்டு ஆனந்தமடைந்தவர்களாகத் தொடர்ந்து சரமாரியாகக் கற்களை எறிந்து பெரிய காயங்களை ஏற்படுத்தினர். இரத்தம் சொட்டி நபிகளாரின் காலணி நனைந்து அவர்களால் நடக்கவும் முடியாமல் தடுமாறினார்கள். நபிகளாருடன் சென்ற ஸைத் இப்னு ஹரித்தா தாக்குதலைத் தடுக்க முயன்றார். நபிகள் நாயகத்தைக் காக்க தன்னையே கேடயமாக்கிக் கொண்டார். அதனால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும் அடித்து ஊருக்கு வெளியே துரத்தினர்.
அங்கிருந்து வெளியேறியவர்களாகத் தாயிஃபிலிருந்து சில மைல்கள் தொலைவிலுள்ள ஒரு திராட்சை தோட்டத்து நிழலில் அமர்ந்தனர். மன வேதனையோடும், உடல் காயங்களோடும் நபி முஹம்மது (ஸல்), “யா அல்லாஹ்! கருணையாளர்களிலெல்லாம் மிகப் பெரிய கருணையாளனே! எளியோர்களைக் காப்பவனே! என்னுடைய பலவீனத்தை நான் உன்னிடமே முறையிடுகிறேன்.
உனக்கு என் மீது கோபம் இல்லையென்றால், இது வெறும் சோதனையென்றால் நான்படும் எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொள்வேன். என் வலிகளைப் பொருட்படுத்தவே மாட்டேன். ஆனால் நீ என் மீது கொண்ட கோபத்தின் வெளிப்பாடே நான்படும் துன்பமென்றால் அத்தகைய கோபம் என்மீது இறங்குவதிலிருந்தும் அல்லது உனது அதிருப்தி என்மீது ஏற்படுவதிலிருந்தும் நான் பாதுகாவல் தேடுகிறேன். எல்லாப் பகைவர்களிடமிருந்தும் என்னைக் காத்தருள்வாயாக.
என்னைக் கண்டு முகம் கடுகடுக்கும் அந்நியனிடம் என்னை ஒப்படைத்துவிடாதே. நீயே பொருத்தத்திற்குரியவன். நீ பொருந்திக் கொள்ளும்வரை உன் கோபத்திலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். நீ வழங்கும் நற்சுகத்தை எதிர்பார்க்கிறேன், அதுவே விசாலமானது. உனது ஒளியினால் இருள்கள் அனைத்தும் பிரகாசம் அடைந்து இம்மை மறுமை சீர்பெற்றன. அப்படியான உனது ஒளியின் பொருட்டால் உனது கோபத்திலிருந்து முழுமையான பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்து தப்பிப்பதும், நன்மை செய்ய ஆற்றல் பெறுவதும் உனது அருளால் மட்டுமே முடியும். என் பாவங்களை மன்னிப்பாயாக” என்று கண்ணீர் மல்க அல்லாஹ்விடம் மன்றாடி பிரார்த்தித்தார்கள்.
தாயிஃப் நகரத்து மக்கள் இஸ்லாத்தை ஏற்காததோடு நபிகளாருக்கு தந்த இந்த வேதனையே நபிகளாரின் வாழ்வில் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது என்று நபி முஹம்மது (ஸல்) அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

அனைவரிடமும் அன்பு காட்டுவதும், குற்றங்களை பொறுத்து மன்னிப்பதும், பகைவர்கள் இடர்படும்போது உதவுவதும், அண்ணலாரின் இயற்பண்புகளாகவே என்றும் மிளர்ந்தது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மக்காவின் நிராகரிப்பாளர்கள் ஏராளமான துன்பங்களை கொடுத்தனர். இந்த கொடுமைகளை எல்லாம் சகித்துக் கொண்ட நபிகளார், தன் உயிருக்கே ஆபத்து என்ற நிலை வந்த போதுதான் அல்லாஹ்வின் ஆணைப்படி மக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள்.
அதன் பின்னர் மக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அதனால் அம்மக்கள் பெரிதும் துன்புற்றனர். இதைக் கேள்விப்பட்ட நபிகளார், உணவுப்பொருட்களை சேகரித்து அபூசுப்யானுக்கு அனுப்பி வைத்து அந்தமக்களின் துயர் துடைத்தார்கள்.
‘தன்னை கொடுமைப்படுத்தியவர்கள் பஞ்சத்தின் கொடுமையை அனுபவிக்கட்டுமே’ என்று நபிகளார் நினைக்கவில்லை. அடுத்தவரின் துன்பம் கண்டு இரக்கம் கொண்டு அவர்களுக்கு உதவி புரியும் நல் இயல்புடையவராகவே நபிகளார் விளங்கினார்கள்.
அதுபோன்றே உணவு தேவைக்கு மக்காவாசிகள் யமாமா நாட்டையே பெரிதும் நம்பி இருந்தார்கள், அங்கிருந்து தான் உணவு தானியங்கள் மக்காவுக்கு வந்து கொண்டிருந்தது. சுமாமது இப்னு ஆதால் என்பவர் யமாமா மக்களின் தலைவராக இருந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
‘நபிகளாரையும் அவர்தம் தோழர்களையும் துன்புறுத்திக் கொண்டிருந்த மக்காவாசிகளுக்கு ஒரு மணி தானியம் கூட அனுப்பக் கூடாது’ என்று தம் பகுதி மக்களுக்கு கட்டளையிட்டார். மக்காவாசிகள் சுமாமாதுவின் முடிவை மாற்றிட எவ்வளவோ முயன்றும் வெற்றி பெறமுடியவில்லை,
அண்ணலார் சொன்னால்தவிர வேறு யாருடைய பேச்சையும் சுமாமது கேட்கமாட்டார் என்பதை புரிந்து கொண்ட மக்காவாசிகள் நபிகளாருக்கு கடிதம் எழுதினார்கள்.
‘எங்களுக்கு உணவு தானியம் அனுப்பக்கூடாது என்று யமாமா மக்களுக்கு சுமாமாது பிறப்பித்த உத்தவை திரும்ப பெறச் சொல்லுங்கள். இந்த இக்கட்டிலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதத்தை பார்த்த நபி (ஸல்) அவர்கள் சுமாமாதுவுக்கு உடனே கடிதம் எழுதினார்கள். அதில் ‘தன்னை நிராகரிப்பவர்களுக்கும், தனக்கு இணை வைப்பவர்களுக்கும் கூட இறைவன் கருணை காட்டுகிறான். நாமும் அதைத்தான் பின்பற்ற வேண்டும், ஆகவே மக்காவுக்கு அனுப்பப்படும் உணவு தானியங்களை நிறுத்தாதீர்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
பொதுத்தேவைக்கும், பொது நியதிக்கும் மதிப்பளிக்கும் மாண்பாளராகவே நபிகளார் எப்போதும் விளங்கினார்கள்.
கஅப் இப்னு சுஹைர் இவர் ஒரு பரம்பரை கவிஞர். நபிகளார் மீது இட்டு கட்டி கவிதை புனைந்து அவதூறு பரப்பிக் கொண்டிருந்தவர். இவரது சகோதரர் புஜைர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவராய் இருந்தார்.
எனவே கஅபிற்கு, புஜைர் சகோதர வாஞ்சையுடன் ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘கஅபே, துர் கவிதைகளாலும், அதனை பரப்புவதாலும் உன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தன்னிடம் மன்னிப்புக்கேட்கும் எவரையும் நபிகளார் தண்டிப்பது இல்லை. எனவே, தூய இதயத்தோடு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நபிகளாரை கண்டு மன்னிப்புக்கேள். நீ மன்னிக்கப்படுவாய்’ என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கடிதம் கண்டவுடன் பதறிப்போன கஅப் மதீனா விரைந்தார். ஒரு தொழுகைக்கு பின் நபிகளாரை சந்தித்தார். அப்போது அவர் தன்னை கஅப் என்று நபிகளாரிடம் காட்டிக் கொள்ளவில்லை.
அவர் ஒரு மூன்றாம் மனிதர் போல பேச்சை தொடங்கினார். ‘அல்லாஹ்வின் தூதரே, கஅப் மனம் வருந்தியவராக உங்களிடம் வந்து ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறார். அவரை நான் உங்களிடம் அழைத்து வந்தால் நீங்கள் கஅபை ஏற்றுக் கொள்வீர்களா?’ என்றார்.
அண்ணலார் ‘ஆம்’ என்று சொன்னது தான் தாமதம், ‘அல்லாஹ்வின் தூதரே, நான் தான் அந்த கஅப்’ என்று நபிகளாரின் கரம் பற்றிக் கொண்டு கூறினார்.
அருகிலிருந்த நபித்தோழர்கள் கஅபை தண்டிக்க விரைந்தனர். அதனை தடுத்த நபிகளார், ‘கஅபை விட்டு விடுங்கள், அவரை நான் மன்னித்து விட்டேன். அவர் முன்பு இருந்த கஅப் அல்ல இப்போது’ என்றார்கள்.
மன்னிப்பின் மகத்துவத்தையும் அதன் உயர்வையும் உணர்ந்து கொண்ட கஅப் மகிழ்ச்சி பொங்க, மன்னிப்பின் மாண்பை மையமாக கொண்டு கவிதை பாடினார். அதற்கு பரிசாக ஏமன் தேசத்து போர்வையை அண்ணலார் கஅபின் தோளில் போர்த்தினார்கள்.
மக்கா வெற்றியின் போது நபிகளார் பிரகடனப்படுத்திய மன்னிப்பு என்பது உலக வரலாற்றில் என்றுமே நிலையான இடத்தைப் பெற்றுவிட்டது. பழிக்கு பழி என்பது மாற்றப்பட்டு பகைவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்ட நாள் அது.
மன்னிப்பின் மேன்மை குறித்து அருள்மறை திருக்குர்ஆனும் (41:34,35) இவ்வாறு பேசுகின்றது:
‘நன்மையும், தீமையும் சமமாக மாட்டா, (நபியே) மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு தீமையை தடுப்பீராக. அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கள் கூட (உமது) உற்ற நண்பராக மாறிவிடுவதை காண்பீர்’.
‘பொறுமையை கைக்கொள்வோரை தவிர வேறு எவருக்கும் இந்த குணம் வாய்க்கப் பெறுவதில்லை. மகத்தான பாக்கியமுடையவர்களை தவிர வேறு எவருக்கும் இந்த உயர்பேறு கிட்டுவதில்லை’.
அண்ணலாரை எதிர்த்து நின்ற பகைவர்களில் அபூஜஹ்லை போன்ற சிலருக்கு தான் இஸ்லாத்தில் இணையும் பாக்கியம் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், அபூசுப்யான், காலித் இப்னு வலீத், அபூஜஹ்லின் மகன் இக்ரிமா போன்ற பெரும் பகைக்கொண்ட தலைவர்கள் பிற்காலங்களில் இஸ்லாத்தில் இணைந்து நபிகளாரின் உற்ற உயிர் தோழர்களாக மாறினார்கள். உலகில் இந்த நற்பேறு வேறு எவருக்கும் கிடைக்கவில்லை.
அனைவரிடமும் அன்பு காட்டுவதும், குற்றங்களை பொறுத்து மன்னிப்பதும், பகைவர்கள் இடர்படும்போது உதவுவதும், அண்ணலாரின் இயற்பண்புகளாகவே என்றும் மிளர்ந்தது. இறைவன் அருளால் அதுவே அவர்களின் அழியாத புகழுக்கு அச்சாரமாகவும் அமைந்தது.
நம் வாழ்வில் ஏற்படும் சின்னச்சின்ன பிரச்சினைகளைக் கூட நம்மால் மன்னிக்க முடியாதபோது, அதுவே பெரும் பகையாகி பின்னர் வாழ்நாளின் நெடும் பகையாகவே மாறிவிடுகிறது. எனவே அத்தகைய மனப்போக்கு மாறி, நபிகளாரின் வழிநின்று தாராளமாக மன்னிக்கப் பழகும் போது தான் மகிழ்ச்சியை உணர்ந்து நிம்மதியை பெற முடியும். அதற்கு எல்லாம் வல்ல இறைவன் பேரருள் புரிவானாக, ஆமீன்.
மு. முகம்மது சலாகுதீன். ஏர்வாடி, திருநெல்வேலி மாவட்டம்.