என் மலர்
இஸ்லாம்
மனிதனின் உடல் அமைப்பும், உறுப்புகளின் வெளிப்பாடும் நன்மை-தீமை ஆகிய இரண்டையும் மனம் போன போக்கில் செய்யக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன.
எந்த நிலையிலும் ‘இறையச்சம்’ என்ற தூய எண்ணம் தான் நன்மை- தீமை என்ற விளைவுகளை தீர்மானிக்கின்றது.
இந்த உலகம் பாவங்கள் செய்யத்தூண்டும் வகையில் தான் படைக்கப்பட்டுள்ளது. அதில் மனிதனுக்கு சோதனையும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இறைவனின் துணைகொண்டு இந்த சோதனையில் வெற்றிபெற மனிதன் முயற்சி செய்யவேண்டும். அப்போது தான் அவன் நம்பிக்கை கொண்டிருக்கிற மறுமை வாழ்வு இனிமையாக அமையும்.
தூய எண்ணம்
மனிதனின் உடல் அமைப்பும், உறுப்புகளின் வெளிப்பாடும் நன்மை-தீமை ஆகிய இரண்டையும் மனம் போன போக்கில் செய்யக்கூடிய வகையில் தான் படைக்கப்பட்டிருக்கின்றன. மனம் பாழ்படும் போது தான் மனிதன் பாவத்தை நோக்கி பயணம் செய்கின்றான்.
ஒருவன் பாவத்தின் பக்கம் செல்ல எத்தனிக்கும் போது அவனை கடிவாளமிட்டு கட்டுப்படுத்துவது தூய எண்ணங்கள் மட்டுமே. அதுதான் அவர்களை பரிசுத்தமாக வைக்கும். திருக்குர்ஆனும் அதைத் தான் இவ்வாறு சொல்கிறது:
“நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்” (24:30).
அதுபோன்று, “பெண்களும் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும், பிறர் கண்ணில் படாவண்ணம் தங்களையும் தங்கள் கற்பையும் பாதுகாத்து கொள்ளட்டும். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது ‘பர்தா’ அணிந்து தங்கள் கண்ணியத்தை காத்து கொள்ளட்டும்” என்று வலியுறுத்தப் படுகிறது.
கரங்கள் செய்யும் பாவம்
இறைவன் நம்மை பல தீமையான சோதனையைக் கொண்டு சோதிப்பான். எல்லாவித சோதனைகளுக்கும் நம் கரங்கள் செய்த பாவங்கள் தான் காரணமாகின்றன.
“ஒரு தீங்கு உங்களை வந்தடைவதெல்லாம் உங்கள் கரங்கள் தேடிக்கொண்ட தீய செயலின் காரணமாகவே தான். ஆயினும் அவற்றில் அனேகமானவற்றை அல்லாஹ் மன்னித்துவிடுகிறான்” (42:30) என்கிறது திருக்குர்ஆன்.
பாவங்களில் பலவற்றை மன்னிக்கின்ற அல்லாஹ் அவை அதிகரிக்கும் போதோ, மற்றவர்களை மிகுதியாக பாதிப்புக்குள்ளாக்கும் போதோ கடலிலும், தரையிலும் சில தண்டனைகளையும் நிர்ணயித்திருக்கின்றான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
‘மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாக கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் அதிகமாகப் பரவி விட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக்கொள்வதற்காக அவர்களின் தீய செயல்களில் சிலவற்றின் தண்டனையை அவர்கள் இம்மையிலும் சுவைக்கச் செய்கின்றான்’ (30:41).
ஜோடிகள்
“ஒவ்வொரு வஸ்துக்களையும் ஆண்-பெண் கொண்ட ஜோடி ஜோடியாகவே நாம் படைத்திருக்கிறோம். இதைக் கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக?” (51:49) என்கிறது திருக்குர்ஆன்.
உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் இரட்டைத் தன்மை கொண்டவைகளாகவே படைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கொன்று முரண்பட்ட தன்மை கொண்டவைகளாக இருந்திட்ட போதிலும், அவை இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிற தன்மையில் தான் இயக்கப்படுகின்றன.
ஆண்-பெண் உயிரினங்களில் இருப்பது போன்று, வானம்-பூமி, நீர்-நிலம், மேடு-பள்ளம், சிகரம்-சமவெளி என்று எத்தனை எத்தனையோ படைப்புகள் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கின்றன.
இதுபோன்று மனித உணவுர்களும் இரண்டு மாறுபட்ட தன்மைகளை வெளியிடக்கூடியதாக உள்ளன. இன்பம்-துன்பம், கோபம்-அமைதி, சிரிப்பு-அழுகை, ஆணவம்-பணிவு என்று வாழ்வில் ஏற்படுகின்ற ஒவ்வொரு உணர்ச்சிகளும் இரட்டை தன்மைகளுடன் அமைந்துள்ளன.
வாழ்வியலில் இந்த உணர்ச்சிகளும், மனிதனின் செயலாக்கங்களும் ஒன்றாக கலந்து ஏற் படுத்துகின்ற விளைவுகள் தான் அல்லாஹ்வின் பார்வையில் பாவ புண்ணியங்களை நிர்ணயம் செய்கின்றன. அந்த செயல்கள் நன்மை தந்தால், அதற்கு வெகுமதியாக சொர்க்கமும், தீமை என்றால் தண்டனையாக நரகமும் வரையறுக்கப்பட்டுள்ளன.
இரண்டு வழிகள்
‘உங்கள் முன் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று நன்மையைப் பெற்று தரும் நேரான வழி. இன்னொன்று அதற்கு நேர்மாறானது’ என்று கூறுகிறான் இறைவன். இப்படி இரண்டு வழிகளை காண்பித்தவன், பாவங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், ஈடேற்றம் பெற்றுக் கொள்ளவும் நேர்வழி என்ற பாதையில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். கட்டளைக்கு அடிபணிந்தவன் கணக்கில்லா நன்மைகளை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக்கொள்வான். மறுத்தவன் நரகத்தை சேர்ந்தவன் ஆவான்.
ஒருமுறை சகாபாக்கள் கூடியிருந்த சபையில் நடந்த நிகழ்வு இது:
நபிகள் (ஸல்) அவர்கள் எல்லோரையும் நோக்கி, ‘பெருபான்மையான மக்கள் மிக எளிதாக சுவர்க்கம் புகச்செய்யும் நன்மையான காரியம் ஒன்றை தாங்களுக்கு அறிவிக்கவா?’ என்று வினவினார்கள்.
‘ஆம்’ என்று ஆமோதித்த சகாபாக்களிடம், ‘நீங்கள் இரு தாடைகளுக்கிடையே உள்ள நாவையும், இரு தொடைகளுக்கிடையே உள்ள அந்தரங்க உறுப்பையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள். நாவை பாதுகாப்பது என்றால் அதனைக்கொண்டு நன்மையை பேசுங்கள், இனிமையாக பேசுங்கள், பிறருக்கு இடர் ஏற்படா வண்ணம் பேசுங்கள். கருத்து வேறுபாடுகளை தவிர்த்து மனித நேயத்தோடு பேசுங்கள்.
அந்தரங்கம் புனிதமானது. அதிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வது இறையச்சத்தின் உச்சம். தூய எண்ணத்தின் அடிப்படையில் ஒருவன் நன்மையான வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘மனிதர்கள் தங்கள் தீய நடத்தையை விட்டு தங்களை மாற்றி கொள்ளாதவரை நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை’ (13:11).
தூய எண்ணங்களுடன் நன்மைகள் செய்து வந்தால் மட்டுமே நாம் வெற்றியாளர்கள் ஆக முடியும். எனவே நல்வழியை தேர்ந்தெடுப்போம், நலமுடன் வாழ்வோம்.
எம்.முஹம்மது யூசுப், உடன்குடி.

அல்லாஹ் “நபியே! புனிதமான விலக்கப்பட்ட மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் இறைநிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.
நபி முஹம்மது (ஸல்), நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதனை இரண்டு நாட்களுக்குப் பிறகு திறந்து படிக்கச் சொன்னார்கள். அதில் அவர்கள் “நக்லா என்ற இடத்தில், குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் வரும், வந்தவுடன் எனக்குச் செய்தி அனுப்புங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்கடிதத்தை திறந்து படித்த அப்துல்லாஹ், ஒரு சிறு தோழர் படையைத் திரட்டி “உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை. யாருக்கு வீர மரணம் விருப்பமானதோ என்னோடு வாருங்கள் மற்றவர்கள் திரும்பிவிடலாம்” என்றார்கள்.
நபிகளார் சொன்னபடியே ‘நக்லா’ என்ற இடத்தை வந்தடைந்ததும் அங்குக் குறைஷிகளின் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் இருப்பதைப் பார்த்தார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டபடி, நபிகளாருக்கு செய்தி அனுப்பாமல் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தமது தோழர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். அரபியர்கள் சில மாதங்களைச் சங்கைமிக்கப் புனித மாதமாகக் கருதுவார்கள்.
அம்மாதங்களில் போர் புரிவதும், சண்டையிடுவதும் தடுக்கப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் மற்றும் தோழர் படையினர் நக்லாவை அடையும்போது அது புனிதமான ரஜப் மாதத்தின் கடைசி நாளாக இருந்தது. இம்மாதத்தில் சண்டயிட்டால் அதன் கண்ணியத்தைக் குலைத்து விடுவோமென்று அஞ்சினர். ஆனால் போர் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் இங்கிருந்து சென்றுவிடுவார்கள் என்றும் பேசிக் கொண்டனர். முடிவில் சண்டையிடலாம் என்று முடிவு செய்து போரை அதிரடியாகத் தொடங்கினர். குறைஷிகளில் சிலர் சிதறியோட, ஒருவரை அம்பெய்துக் கொன்றனர் மற்றும் இருவரை கைது செய்து வியாபாரப் பொருட்களையும் கைப்பற்றி மதீனாவிற்குத் திரும்பினர்.
சண்டையில் கிடைத்த பொருட்களை ‘கனீமா’ என்பர். இப்போரில் கிடைத்த கனீமத்துப் பொருட்களை ஐந்தில் ஒரு பங்கை இறைவனுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கினார்கள். இதுதான் வரலாற்றில் இஸ்லாமில் முதல் கனீமா பங்கு. ஆனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையை வெறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) “புனிதமான மாதத்தில் போர் செய்ய உங்களுக்கு யார் கட்டளையிட்டது?” என்று கோபமாகக் கேட்டார்கள்.
அநியாயமாகக் கொலை செய்துவிட்டீர்கள், புனிதமான மாதத்தில் எங்களுக்கு மாறு செய்துவிட்டீர்கள் என்று இதுதான் சந்தர்ப்பமென்று முஸ்லிம்கள் மீது நிராகரிப்பாளர்கள் அவதூறுகளை வீசினார்கள். அப்போது அல்லாஹ் “நபியே! புனிதமான விலக்கப்பட்ட மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் இறைநிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.
அதற்கு நீங்கள் கூறுங்கள், ‘அம்மாதங்களில் போர் புரிவது பெருங்குற்றம்தான், ஆனால், மனிதர்கள் அல்லாஹ்வுடைய பாதையைவிட்டுத் தடுப்பதும், அல்லாஹ்வை நிராகரிப்பதும், ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவிற்கு வருபவர்களை மஸ்ஜிதுல் ஹராமுக்குள் வரவிடாது தடுப்பதும், குழப்பங்கள் புரிவதும், மக்காவில் வசிப்போரை நம்பிக்கை கொண்டோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அதை விட மிகப் பெரும் பாவங்கள். அது நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்துவரும் விஷமம் கொலையை விட மிகக் கொடியது” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கியதோடு, இரண்டு கைதிகளையும் விடுவித்தார்கள்.
திருக்குர்ஆன் 2:217, அர்ரஹீக் அல்மக்தூம்
- ஜெஸிலா பானு.

பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான்.
விண்வெளியில் நவ கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்தக் கோள்களில் மனிதர்கள் வாழ முடியுமா என்று பல நாடுகள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இறைவன், ‘‘இந்த பூமியை மட்டுமே மனிதர்கள் வசிக்கும் இடமாக அமைத்திருப்பதாக’’ கூறுகின்றான்.
ஆதி நபி ஆதம் (அலை) அவருடைய மனைவி ஹவ்வா (அலை) ஆகியோர் ஷைத்தானால் வழி கெடுக்கப்பட்டு தவறிழைத்தபோது, ‘‘(இச்சோலையில் இருந்து) நீங்கள் இறங்கி விடுங்கள். உங்களுக்குப் பூமியில்தான் வசிக்க இடமுண்டு. அதில் சில காலம் வரையில் சுகமும் அனுபவிக்கலாம் என்று நாம் கூறினோம்’’ (திருக்குர்ஆன்2:34) என்று இறைவன் கூறுகின்றான்.
மேலும், ‘‘(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம். அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்’’ (திருக்குர்ஆன்7:10) என்பது இறை வாக்கு.
இதன் மூலம் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ முடியும் என்ற கருத்து இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் அதன் துணைக் கோளான சந்திரன் உள்ளது. பூமியைத் தவிர வேறு எந்தக் கோளிலும், துணைக் கோளான சந்திரனிலும் மனிதர்கள் வசிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எங்கே பூமியில் இருப்பது போன்ற தட்ப வெப்ப நிலை, பிராண வாயு எனப்படும் உயிர்க்காற்று, நீர் ஆகியவை இருக்கிறதோ அங்கேதான் உயிர்கள் வாழமுடியும் என்பது விஞ்ஞானிகளின் முடிவாகும்.
புதன் கோளில் காற்று மண்டலம் இல்லை. மற்ற கோளங்களை விட இங்கு வெப்பம் அதிகம். இந்தக் கோளின் அதிக பட்ச வெப்பம் 480 டிகிரி சென்டிகிரேட் ஆகும். பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசைதான் இங்கு உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இந்தக் கிரகத்தில் மனிதன் வாழ முடியாது.
வெள்ளி கோளில் 457 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் நிலவுகிறது. இது பூமியின் வெப்பத்தைப் போல 11 மடங்கு அதிகம் ஆகும். மேலும் இங்கு உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு எனப்படும் ஆக்சிஜனும் கிடையாது. எனவே இதிலும் மனிதன் வாழ முடியாது.
சூரியனில் இருந்து 23 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, செவ்வாய் கிரகம். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இந்தக் கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் ‘செவ்வாய்’ என்ற பெயர் ஏற்பட்டது.
பூமியில் உள்ள காற்றில் நூறில் ஒரு பங்கு காற்றுதான் இந்தக் கிரகத்தில் உள்ளது. அந்தக் காற்றில்கூட ஒரு சதவீத அளவே ஆக்சிஜன் இருக்கிறது. எனவே இதிலும் மனிதன் வசிக்க முடியாது.
வியாழன் கோளிலும் மனிதன் வாழ்வதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லை. காரணம் இது புதன், வெள்ளி, செவ்வாய் மற்றும் பூமியைப் போன்று பாறைக் கோளாக இல்லாமல் வாயு கோளாக இருக்கிறது. இங்கு பூமியின் புவி ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகமாக உள்ளது. இங்கு சென்றால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகரிக்கும். நமது எடையை நாமே தாங்க முடியாத நிலை ஏற்படும்.
சனி கிரகத்தில் எப்போதும் உறைந்து போகும் அளவுக்கு மைனஸ் 143 டிகிரி சென்டிகிரேட் குளிர் உள்ளது. இங்கே வாழ்வதை மனிதன் கற்பனை செய்துகூட பார்க்க இயலாது.
யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்களிலும் கடுங்குளிரே நிலவுகிறது.
பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர், காற்று, புவி ஈர்ப்பு விசை எதுவும் கிடையாது. எனவே இங்கு மனிதன் குடியேற முடியாது.
‘‘அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து மேகத்தில் இருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனி வர்க்கங்களையும், உங்களுக்கு வெளியாக்குகின்றான். ஆகவே (இவற்றை யெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்’’ (திருக்குர்ஆன்–2:22) என்று இறைவன் கூறுகின்றான்.
பூமி வசிக்கும் இடமாக இருப்பது பற்றிய பல வியப்பான தகவல்களை அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால், உடல் தாங்கிக் கொள்கிற அளவுக்கு வெப்பம் இருப்பது அவசியமாகும். சூரிய ஒளிக் கற்றையில் அபாயகரமான மின் காந்தக் கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் ஆகியவை அடங்கி உள்ளன. சூரியனிடம் இருந்து பெறப்படுகிற வெப்பம் நேரடியாக மனிதர்களின் உடலில் பட்டால் அவற்றில் இருந்து வெளிப்படுகிற புற ஊதாக் கதிர்களால் மனிதன் பாதிக்கப்படுவான். பிற உயிரினங்களும் பாதிக்கப்படும்.
இந்தக் கதிர்களை வடிகட்டுவதற்காகவே ‘ஓசோன்’ என்னும் படலம் பூமியைச் சுற்றி வளையம் போல அமைந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், சூரியனின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தி தக்க வைத்துக் கொள்ளக்கூடிய வளி மண்டலமும் பூமியின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டு பூமியே உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற இடம் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் பூமி மட்டும்தான் சூரியனைச் சுற்றும்போது 23.4 டிகிரி சாய்வாகச் சுற்றுகிறது. இப்படிச் சுற்றுவதால்தான் கோடை காலம், குளிர் காலம், வசந்த காலம், இலையுதிர் காலம் என்று பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. ஆண்டு முழுவதும் ஒரே சீரான வெப்பமோ அல்லது குளிரோ இருந்தாலும் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது.
மொத்தத்தில் மனிதன் வாழ்வதற்குச் சாதகமான, வசதியான வாழ்விடம், இறைவன் கூறுவது போல ‘பூமி’ மட்டுமே!
- பாத்திமா மைந்தன்

சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று அக்கிரமத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.
“இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் பொருட்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாகக் கடுமையாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டோரிடமிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் பல நிபந்தனைகளைக் கேட்பீர்கள். அச்சமயத்திலெல்லாம் நீங்கள் பொறுமைகாத்து, தவறான வழியிலிருந்து விலகி இறைவனிடம் பயபக்தியோடு இருந்தீர்களேயானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் உங்களுக்கு நன்மையைத் தேடித் தரும்” என்ற திருக்குர்ஆனின் வசனத்திற்கேற்ப முஸ்லிம்களுக்குப் பல சோதனைகள் வந்தன. கடுமையான பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
யூதர்களுடன் உடன்படிக்கை செய்தும் அவர்கள் அதனை முறித்து அதற்கு எதிராக இணை வைப்பாளர்களுடன் இணைந்து கொண்டு மோசடி செய்தனர். யூதர்களாலும் குறைஷிகளாலும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் உயிருக்கு மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களுக்கும் ஆபத்து இருந்தது. மதீனாவிலும் முஸ்லிம்களை இறைமறுப்பாளர்கள் நிம்மதியாக இருக்க விடவில்லை, குறைஷிகள் தொடர்ந்து முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். போர் புரிய அழைத்தனர். முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? ‘இறைவன் ஒருவன்தான்’ என்றமையால் நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
இதனால் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இறை நிராகரிப்பவர்கள் சண்டையிட்டால், அவர்களை எதிர்த்து போர் புரிய மட்டும் அனுமதி அளித்தான். “நிராகரிப்பவர்களால் அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. நிச்சயமாக அல்லாஹ் இவர்களுக்கு உதவி செய்யப் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்” என்ற இறைவசனம் வந்த பிறகு முஸ்லிம்கள் சாந்தியடைந்தாலும் அதிலும் அல்லாஹ் நிபந்தனையை வைத்தான்.
அதில் “இவர்களுக்கு நாம் பூமியில் ஆட்சியைக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; தர்மம் அதாவது ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையைத் தடுப்பார்கள். மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது” என்று அக்கிரமத்தை அழித்து அல்லாஹ்வின் கட்டளைகளை நிலை நிறுத்துவதற்காக மட்டுமே போர் செய்வது அனுமதிக்கப்பட்டது.
அல்லாஹ்விடமிருந்து அனுமதி வந்ததால், உடனே போரை தொடங்கிவிடாமல் நபிகளார் அதற்காக முதலில் ஆயத்தமானார்கள். குறைஷிகளின் வியாபார வழித்தடமான மக்காவிலிருந்து ஷாம்(சிரியா) செல்லும் முக்கிய வழியைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்று நபி (ஸல்) விருப்பப்பட்டார்கள். மதீனாவைச் சுற்றியுள்ள வழிகளைப் படைப் பிரிவினர் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளச் செய்தார்கள்.
மதீனா மட்டுமல்லாது மக்காவில் சுற்றியிருக்கும் பகுதி, ஷாமிற்குச் செல்லுமிடத்திலென்று முஸ்லிம்களுடன் நட்பில் இருப்பவர்களிடமும் மற்றும் பகைமை காட்டாதவர்களிடமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். இதன் மூலம் முஸ்லிம்கள் இப்போது பலமடைந்து விட்டார்கள், தங்களுடைய பயத்திலிருந்து வெளியே வந்துவிட்டார்கள் என்று மதீனாவில் உள்ள இணை வைப்பவர்களுக்கும், யூதர்களுக்கும் அதைச் சுற்றியுள்ள கிராம அரபிகளுக்கும் உணர்த்தினார்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்கள்.
திருக்குர்ஆன் 3:186, 5:65:4566, 22:39-41, அர்ரஹீக் அல்மக்தூம்

மனிதர்களின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
ஸஅத் இப்னு முஆத்(ரலி) வியாபாரத்திற்காக ஷாம் நாட்டிற்குச் செல்லும்போதெல்லாம் வழியில் மக்காவில் அவருடைய நண்பர் உமய்யா இப்னு கலஃப் வீட்டில் தங்குவார்கள்.
ஒரு முறை உம்ரா செய்யும் நோக்கத்தில் ஸஅத்(ரலி) மக்காவிற்குச் சென்று ஆள் நடமாட்டமில்லாத அமைதியான நண்பகல் வேளையில் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்தார்கள் அதாவது தவாஃப் செய்தார்கள். அப்போது அந்த வழியாகச் சென்ற அபூ ஜஹ்ல் இதைப் பார்த்துவிட்டு, உரத்த குரலில் “உமய்யா, உன்னோடு இருக்கும் அந்த நபர் யார்?” என்று கேட்டான்.
அதற்கு உமய்யா மறைக்காமல் “இவர்தான் ஸஅத்” என்றார். கஅபாவை நெருங்கி அபூ ஜஹ்ல் ஸஅத்(ரலி) அவர்களிடம் “மதம் மாறிச் சென்றவர்களுக்கு மதீனாவில் தஞ்சமளித்து அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிபவர்கள் அஞ்சாமல் மக்காவிற்குள் வந்து கஅபாவை சுற்றி வர எவ்வளவு தைரியமிருக்கும்? நீ மட்டும் உமய்யாவுடன் இல்லாவிட்டால் நீ உன் வீட்டாரிடம் சுகமாகப் போய் சேர மாட்டாய்” என்று மிரட்டினான்.
பதிலுக்கு ஸஅத்(ரலி) அபூ ஜஹ்லைவிடக் குரலை உயர்த்தி, தைரியமாக “அல்லாஹ்வின் மீதாணையாக, கஅபாவைச் சுற்ற விடாமல் மட்டும் என்னை நீ தடுத்திருந்தால், நீ வாணிபக் குழுவுடன் கடந்து செல்லும் மதீனாவின் தடத்தை நான் இடைமறிப்பேன். இதைவிட அது உனக்கு மிகவும் கடினமானதாயிருக்கும்” என்று எச்சரித்தார்.
உடனே ஸஅத்(ரலி) அவர்களின் நண்பர் உமய்யா, “ஸஅத்! மக்காப் பள்ளத்தாக்கில் வசிப்பவர்களின் தலைவரான மரியாதைக்குரிய அபூ ஜஹ்ல் எதிரில் சப்தமிட்டுப் பேசாதே!” என்று கூறினார்.
கோபமாக ஸஅத்(ரலி) அவர்கள், “உமய்யாவே! அபூ ஜஹ்லுக்கா வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்கள் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள், ஏனெனில், நபித்தோழர்கள் உன்னைக் கொலை செய்வார்கள் என்று இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூற கேட்டேன்” என்று சொன்னார்கள்.
அச்சமடைந்தவராக “மக்காவிலா நான் கொல்லப்படுவேன்?” என்று உமய்யா கேட்டதற்கு, “எனக்குத் தெரியாது” என்று ஸஅத்(ரலி) பதிலளித்தார்கள்.
இதனால் உமய்யா மிகவும் பீதியடைந்தார். அதைப் பற்றித் தன் மனைவியிடமும் உமய்யா பகிர்ந்தார். உடனே அவர் மனைவி, “அது உண்மையாகத்தானிருக்கும், ஏனெனில் முஹம்மது பொய் சொல்வதில்லை” என்று சொன்னாள். (அதன் பிறகு உமய்யா மக்காவைவிட்டு வெளியில் எங்கும் செல்லாமலே இருந்தார். ஆனால் காலம் கடந்து 'பத்ரு' போர்க்களத்தில் உமய்யாவை வலிமையும் உயர்வும் மிகுந்த அல்லாஹ் முஸ்லிம் படையால் கொலை செய்யும்படி அவரது விதி முடிந்தது.)
குறைஷிகள் தொடர்ந்து முஸ்லிம்களையும் குறிப்பாக நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தீவிரமாக ஆலோசித்தனர். ஒவ்வொரு இரவும் நபி தோழர்களில் ஒருவர் நபிகளாரின் பாதுகாப்பிற்காக வந்து அமர்ந்துவிடுவார்கள். அப்போது “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை எந்தக் குறைவுமின்றி மக்களுக்கு அறிவித்து விடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யா விட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராக மாட்டீர்கள். இதில் எவருக்கும் அஞ்சாதீர்கள்! மனிதர்களின் தீங்குகளில் இருந்து அல்லாஹ் உங்களைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்” என்ற இறைவசனம் அருளப்பட்டது.
ஸஹீஹ் புகாரி 4:64:3950, 4:61:3632, திருக்குர்ஆன் 5:67

“அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான். அவனே பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்” (திருக்குர்ஆன்-39:5).
திருக்குர்ஆன் இறைவனால் வழங்கப்பட்ட இறுதி வேதம்; அது அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம். ஆன்மிகப் பெட்டகமான திருக்குர்ஆன், இன்று அறிவியல் ஆய்வுக் களஞ்சியமாகத் திகழ்வது கண்டு அறிவுலகம் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்ந்துள்ளது.
1,400 ஆண்டுகளுக்கு முன்னர் மனித அறிவுக்கு எட்டாத பல கருத்துகள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.
‘பெரு வெடிப்பு கோட்பாடு’ என்பது இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றி விளக்க முயலும் ஒரு கோட்பாடு ஆகும்.
தொடக்க நிலையில் இந்த உலகம் ஒரு பெரும் பருப்பொருளாக இருந்தது. அது திடீரென்று வெடித்துச் சிதறியது. அவ்வாறு வெடித்துச் சிதறிய துண்டுகள் மணிக்கு 72 மில்லியன் கிலோ மீட்டர் வேகத்தில் பிரபஞ்ச வெளியில் விலகி ஓடின. அப்போது பிரபஞ்சம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
மகா வெடிப்புக்குப் பிறகே நட்சத்திரக் கூட்டங்கள் உருவாயின. மேலும் இவை சூரியனாகவும், பூமியாகவும், சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கோள்களாகவும் உருவாயின.
பிரபஞ்சம் தோன்றிய இந்த நிகழ்ச்சியை,
“கோளங்களும், பூமியும் (ஆரம்பத்தில்) ஒரே துண்டாக (ஒன்றாக)த்தான் இருந்தன. பிற்பாடு நாம் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தோம்” (திருக்குர்ஆன்-21:30) என்று இறைவன் கூறுகின்றான்.
இன்றைய விஞ்ஞான உலகில் கூறப்படும் பெரு வெடிப்பு கோட்பாட்டை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வசனத்தின் மூலம் எடுத்தியம்புகின்றது.
இந்தப் பேரண்டம் நட்சத்திரக் கூட்டங்கள் உருவாவதற்கு முன்பு புகை மண்டலமாக இருந்தது என்ற அறிவியல் உண்மை மகா வெடிப்பு கொள்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தையே,
“பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்” (திருக்குர்ஆன்-41:11) என்ற வசனம் பிரதிபலிக்கிறது.
விரிந்து கொண்டே செல்லும் பரந்த தன்மை கொண்டதாக இந்தப் பிரபஞ்சத்தை இறைவன் படைத்திருப்பதை, “மேலும் நாம் வானத்தை (எவருடைய உதவியுமின்றி நம்) சக்தியைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையவராவோம்” (திருக்குர்ஆன்-51:47) என்ற வசனம் உறுதிப்படுத்துகிறது.
நாம் வாழுகின்ற இந்தப் பிரபஞ்சம், விரிவடைந்து கொண்டிருக்கிறது என்ற பேருண்மையை வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் வெளிப்படுத்தினார்.
இது குறித்து அமெரிக்காவின் மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், “நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் விரிந்து கொண்டே போகின்றது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பானது, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் அறிவுப் புரட்சிகளில் ஒன்றாகவே திகழ்கிறது” என்று கூறியுள்ளார்.
பண்டைய காலத்தில் பூமி தட்டையானது என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியது. பின்னர் பல்வேறு காலகட்டங்களில் விஞ்ஞானிகள், இந்த பூமி உருண்டை வடிவிலானது என்ற உண்மையை உறுதிப்படுத்தினார்கள்.
இரவு-பகல் மாற்றம் குறித்து திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்பதை உணர முடிகிறது.
“நீ தான் இரவைப் பகலில் புகுத்துகிறாய். நீ தான் பகலை இரவிலும் புகுத்துகிறாய்” (திருக்குர்ஆன்-3:27) என்றும்,
“நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்து கிறான். பகலை இரவில் புகுத்துகிறான்” (31:29) என்றும் திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
‘புகுத்துதல்’ என்றால் ஒரு நிலை இருக்கும்போது, அது திடீரென்று மற்றொரு நிலைக்கு மாறி விடாமல், சிறிது சிறிதாக மாறி மற்றொரு நிலையை அடைவதே ஆகும்.
திடீரென்று இரவும், திடீரென்று பகலும் மாறி மாறி வந்து விடுவதில்லை. பூமியின் பாதிப்பகுதியில் சூரிய வெளிச்சம் விழுவதால் அது பகல் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புறம் உள்ள பகுதி சூரிய வெளிச்சத்திற்கு அப்பாற்பட்டுள்ளதால் அது இரவு என்று அழைக்கப்படுகிறது.
சூரிய வெளிச்சம் படும் பகுதியில், ஒரு பகுதி இரவில் இருந்து விடுபட்டு பகலை நோக்கி வருகிறது. மற்றொரு பகுதி பகலில் இருந்து விடுபட்டு இரவை நோக்கி நகருகிறது. பூமி, உருண்டை வடிவில் இருப்பதால் சூரியனுடைய வெளிச்சம் ஒரே சீராக எல்லாப் பகுதிகளிலும் இருப்பதில்லை. உதிக்கும் பகுதியிலும், மறையும் பகுதியிலும் மிகக்குறைவான வெளிச்சமும், பூமத்திய ரேகை பகுதிகளில் அதிகமான வெளிச்சமும் காணப்படுகிறது. இதைப்போலவே இரவும் வருகிறது.
இப்படி இரவும் பகலும் பல நிலைகளைக் கடந்து மெல்ல மெல்ல புகுத்தப்படுவதால், திருக்குர்ஆனில் ‘புகுத்துதல்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பூமியானது உருண்ட வடிவில் இருப்பதாலும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதால் மட்டுமே இரவும் பகலும் மாறி வருவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு.
கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம், பூமி உருண்டை வடிவானது என்பதை மறைமுகமாகச் சுட்டிக் காட்டு கிறது:
“அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கின்றான். அவனே பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான்” (திருக்குர்ஆன்-39:5).
இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள ‘சுருட்டுதல்’ என்பதற்கு ஒன்றின் மீது ஒன்றைச் சுருட்டுதல் என்று கருதலாம். இது தலையில் சுற்றப்படும் தலைப்பாகைக்கு ஒப்பான செயலாகும். தலைப்பாகையும் ஒன்றின் மீது ஒன்றாகச் சுற்றப்படுகிறது. இது பகலின் மீது இரவும், இரவின் மீது பகலும் சுற்றப்படுகிறது என்பதைச் சுட்டுகிறது.
பூமி உருண்டையாக இருக்கும்போதுதான் இரவும் பகலும் சுற்றி வரும் செயல் நிகழ முடியும்.

இன்றைய நவீன காலத்தில் தகவல் பரப்பும் சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது. வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும்.
“முமின் களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக்கொள்ளுங்கள். ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேச வேண்டாம்” (49:12) என்பது திருக்குர்ஆன் வசனமாகும்.
இறைவன் இங்கே மூன்று விதமான அம்சங்களை பட்டியல் போடுகிறான். 1) ஊகம், 2) துருவித்துருவி ஆராய்வது, 3) புறம்.
இம்மூன்று அம்சங்களிலும் நன்மையைவிட பாவமே மிகைத்து நிற்கும். இம்மூன்றுமே ஒன்று மற்றொன்றுடன் தொடர்புடையவையாகும்.
ஊகம் என்பது உறுதிப்படுத்தாத வதந்தியாகும். வதந்தியை துருவித்துருவி ஆராயும்போது பிறர் மீது புறம் பேசக்கூடிய நிலைக்கு தள்ளிவிடும். வதந்தியால் பரவக்கூடிய செய்தியால் நன்மையை விட தீங்குகளே அதிகம்.
எனவே, வதந்தியை பாவங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டு அதிலிருந்து முஸ்லிம்கள் முற்றாக விலகி நிற்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவு பிறப்பிக்கிறது.
“முமின்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்” (திருக்குர்ஆன் 49:6).
மேற்கூறப்பட்ட இறைவசனம் இறங்கியதன் பின்னணியை அறிந்துகொள்வோம்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஜகாத் நிதியை வசூலிப்பதற்கு ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்களை பனீமுஸ்தலிக் எனும் கோத்திரத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள்.
இவருக்கும் அந்த கோத்திரத்தாருக்கும் இஸ்லாத்திற்கு வரும் முன் ஒரு கொலை சம்பந்தமான பகை உணர்வு இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு வந்தபின் அந்த பகை மறைந்து போனது.
ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் வருகை புரியும் செய்தியறிந்து, அந்த கோத்திரத்தார் அவரை வரவேற்பதற்காக பெரும் படையை திரட்டி புடைசூழ ஊரின் எல்லையில் குழுமியிருந்தார்கள்.
இதை கண்ட ஹசரத் வலீத் பின் உக்பா (ரலி) அவர்கள் உண்மை என்னவென்று உறுதிப்படுத்தாமல் பழைய பகை உணர்வை மனதில் வைத்து நம்மை தீர்த்து கட்ட இவர்கள் ஒன்று குழுமியிருக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டு, வந்த வழியை நோக்கி நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிவிட்டார்கள்.
மேலும் அந்த கோத்திரத்தார் குறித்து தம் எண்ண அடிப்படையில் பின்வரும் சில வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். 1) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விட்டார்கள், 2) ஜகாத் நிதியை தர மறுக்கிறார்கள், 3) என்னை கொலை செய்யவும் தயாராகி விட்டார்கள்.
இந்த வதந்திகளை நபி (ஸல்) அவர்கள் கேட்டதும் நம்பவில்லை. நடந்தது உண்மையா? அல்லது வதந்தியா? என்பதை ஆய்வு செய்வதற்காக ஹசரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு சிறிய படையை அனுப்பி வைத்து, அவர்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் அந்த ஊருக்குள் நுழையும்படி ஆலோசனை வழங்கினார்கள்.
அந்த ஊரின் எல்லை அருகே படை வந்ததும், ஹசரத் காலித் (ரலி) அவர்கள் சில ஒற்றர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்தார்கள். அந்த நேரம் மக்ரிப் தொழுகை நேரமாகும். ஒற்றர்கள் சென்றபோது அந்த கோத்திரத்தார் தொழுகையில் ஆர்வமாக ஈடுபட்டதை கண்டார்கள்.
இந்த செய்தியை அறிந்து கொண்ட காலித் (ரலி) அடுத்த நாள் காலையில் அவர்களிடம் சென்று ஜகாத் நிதியை வசூலித்துக் கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று நடந்த உண்மை நிலவரத்தை எடுத்துச் சொன்னார்கள். அப்போது தான் மேற்கூறப்பட்ட (49:6) இறைவசனம் இறங்கியது.
உடனே நபி (ஸல்) அவர்கள் “நிதானம் இறைவனின் செயல். அவசரம் ஷைத்தானின் செயல்” என்று கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் அவசரப்படாமல் நிதானமாக சமயோசிதமாக நடந்து கொண்டதினால் ஒரு பெரும் போர் தவிர்க்கப்பட்டது. அந்த நபித் தோழரின் வதந்தியை நம்பி, நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டால் அநியாயமாக ஒரு சமூகத்தாருக்கு அநீதி இழைத்தவர்களாக ஆகியிருப்பார்கள்.
கண்டதை எல்லாம் பேசுவது வதந்தியின் ஆரம்ப நிலையாக அமைந்து விடுகிறது. நாம் பேசக்கூடிய ஒவ்வொன்றுக்கும் நாமே பொறுப்பு. வதந்தியால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான அசம்பாவிதங்களுக்கும் அதனை பரப்பியவர் மீதே சாரும்.
“எதைப் பற்றி உமக்கு (த்தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடர வேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவையாவுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்” (திருக்குர்ஆன் 17:36)
“தான் கேட்பதையெல்லாம் ஒருவன் பரப்புரை செய்வது அவன் பொய்யன் என்பதற்கு இதுவே போதுமானது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : ஹசரத் ஹப்இபின் ஆஸிம் (ரலி) அவர்கள், (நூல்:முஸ்லிம்).
“தான் கேட்பதையெல்லாம் பரப்புரை செய்பவன் பரிபூரண முஸ்லிமாக முடியாது; மேலும் அவன் ஒரு போதும் தலைமைத்துவத்திற்கு தகுதியும் பெற முடியாது” (பைஹகீ)
ஹசரத் உமர் (ரலி) அவர்கள் கூறும்போது “உங்களையும், குழப்பத்தையும் நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில், வாளால் ஏற்படும் அதே பாதிப்பு நாவினாலும் ஏற்படும்” என்றார்கள்.
வதந்தியால் பலரின் வாழ்க்கை பாழாகி போயிருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் தகவல் பரப்பும் சாதனங்களால் உண்மையை விட உண்மைக்கு புறம்பான வதந்திகள்தான் அதிகம் பரப்புரை செய்யப்படுகிறது. பகிரவும் செய்யப்படுகிறது. இதனால் கலவரம் கூட ஏற்படுகிறது. வதந்திகளை நம்பாமலும் பரப்பாமலும் வாழ்வதே அண்ணலாரின் அறிவுரையாகும்.
மவுலவி அ. சைய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, நெல்லை டவுன்.

நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மதீனா உடன்படிக்கையே முதல் இஸ்லாமிய அரசியல் சட்டமாக அமைந்தது.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய மதீனா உடன்படிக்கையே முதல் இஸ்லாமிய அரசியல் சட்டமாக அமைந்தது. இச்சட்டம் மதீனாவில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்தது. மதீனாவின் சாசனம் புனித குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி தன்னலமில்லாத, பாகுபாடில்லாத, எங்குமே காணமுடியாத பெருந்தன்மையுடன் மன்னிக்கும் பண்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டமாக அமைந்தது.
குறைஷி இனத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளர்கள், மதீனாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்கள், இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் போடப்பட்ட ஒப்பந்தம் சகோதரத்துவத்தை மேம்படுத்தியது. இஸ்லாமியர்களுக்கான சட்டம் தவிர, யூதர்களுடன் நன்மையான நல்ல உடன்படிக்கையையும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். அந்த யூதர்களை அதிகாரம் கொண்டு மதீனாவை விட்டு விரட்டவில்லை. மக்காவை விட்டு வந்தவர்களின் சொத்துகளைக் குறைஷிகள் அபகரித்தனர், ஆனால் மதீனாவில் இருந்த யூதர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நபிகளார் நாடவில்லை. மாறாக, அவர்களுக்கு அவர்களது செல்வத்திலும், மதத்திலும் முழுச் சுதந்திரத்தை அளித்தார்கள்.
மக்காவிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் குறைஷிகளிடமிருந்து தப்பித்து மதீனாவில் நிம்மதியான, பாதுகாப்பான இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்களெனக் கோபத்திலிருந்தார்கள் குறைஷிகள். மதீனாவிலிருக்கும் தங்களுக்குச் சாதகமானவர்களைக் கூட்டுச் சேர்க்க நினைத்து அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூலுக்குக் கடிதம் எழுதினார்கள். நபி (ஸல்) மதீனா வருவதற்கு முன் மதீனாவாசிகள் அவனையே தங்களது அரசனாக ஏற்றுக் கொள்ள இருந்தனர். இதனால் அவனுக்கு நபி (ஸல்) அவர்கள் மீதுள்ள கோபத்தை அறிந்த மக்காவாசிகள், அப்துல்லாஹ் இப்னு உபைக்கும் அவனுடன் இருந்த இணை வைப்போருக்கும் கடிதம் எழுதினர். மக்காவைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுக்காமல் வெளியேற்ற வேண்டுமென்று கேட்டனர்.
அந்தச் சமயத்தில், ஓர் அவையில் முஸ்லிம்கள், சிலை வணங்கும் இணை வைப்பாளர்கள், யூதர்கள், இறைநம்பிக்கையாளரென்று எல்லோரும் இருந்தனர். அங்கே அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலும் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், அவையோருக்கு சலாம் (முகமன்) கூறினார்கள். பிறகு தம் வாகனத்தை நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைய அவர்களை அழைத்தார்கள்.
அவர்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், நபி(ஸல்) அவர்களிடம் “மனிதரே! நீர் கூறுகிற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. ஆனால், அதை எங்களுடைய அவையில் வந்து சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் அதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று முகத்தில் அறைந்தாற்போல் சொன்னார்.
அங்குச் சலசலப்பு ஏற்பட்டது, அங்கிருந்தவர்கள் ஒருவரையொருவர் சாடிக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், மக்களை அமைதிப்படுத்தினார்கள். அதன்பின் ஸஅத் இப்னு உபாதா(ரலி) நபிகளாரிடம் “மதீனாவாசிகள் அப்துல்லாஹ்வுக்குக் கீரிடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்திய மார்க்கத்தின் மூலம் அந்த முடிவுகளை நிராகரித்ததால் அவர் ஆத்திரமடைந்துள்ளார். இதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்து கொண்டதற்குக் காரணம்” என்று விளக்கிக் கூறினார். அவர் கோபத்திலிருந்த நியாயத்தைப் புரிந்து கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்தார்கள்.
குர்ஆனில் அல்லாஹ் கூறினான்: “இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கு முன்வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் ஏராளமான நிபந்தனைகளை நிச்சயம் கேட்பீர்கள். அப்போதெல்லாம், நீங்கள் பொறுமை காத்துத் தீமையிலிருந்து விலகி நடந்தால், அதுதான் உறுதிமிக்கச் செயல்களில் ஒன்றாகும்”.
ஸஹீஹ் புகாரி 5:65:4566, திருக்குர்ஆன் 03:186

இஸ்லாமிய வரலாற்றில் ஹுதைபிய்யா உடன்படிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதை அனைவரும் அறிந்து கொள்வது அவசியம்.
மக்காவில் உள்ள இறை இல்லமான கஅபாவுக்குச் சென்று இறை வணக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் சுமார் 6 ஆண்டு காலமாக இணை வைப்பவர் களால் தடுக்கப்பட்டு வந்த காலகட்டம் அது.
ஹிஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதத்தின் தொடக்கத்தில் தோழர்களுடன் மதீனாவில் இருந்து மக்கா சென்று ‘உம்ரா’ செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள். ‘உம்ரா’ என்பது ஹஜ் அல்லாத காலங்களில் ‘கஅபா’ சென்று இறைவனை வழிபடுவதாகும்.
சிலை வணக்கத்தில் ஈடுபடும் குரைஷிகள், இறை இல்லத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியாது என்பதையும், புனித யாத்திரை செல்லும் உரிமை முஸ்லிம்களுக்கும் உள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதே நபிகளாரின் நோக்கம். 1,400 முஸ்லிம்களுடன் நபிகளார் புறப்பட்டார்கள்.
‘இறை இல்லமான கஅபாவை தரிசிப்பதற்காகவே செல்கிறோம்; போர் புரிவதோ தாக்குதல் நடத்துவதோ எங்கள் எண்ணம் அல்ல’ என்பதைப் பிரதான அம்சமாகப் பிரகடனப்படுத்தினார்கள்.
இருப்பினும் குரைஷிகளின் நிலையை அறிந்து கொள்ள ஒற்றன் ஒருவரை அனுப்பி வைத்தார்கள்.
‘எல்லா குலத்தவரையும் குரைஷிகள் ஒன்று திரட்டி இருக்கிறார்கள். உங்களை மக்கா நகருக்குள் நுழைய விடக்கூடாது என்பதுதான் அவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவான முடிவு’ என்று அந்த ஒற்றன் தெரிவித்தார்.
இருந்தபோதிலும் நபிகளார் எதைப் பற்றியும் கவலைப்படாமல் முன்னேறிச் சென்றார்கள்.
அவர்கள் ஹுதைபிய்யா என்ற இடத்தில் முகாமிட்டார்கள். இது மக்காவில் இருந்து ஜித்தாவுக்குச் செல்லும் வழியில் ஐந்து கல் தொலைவில் இருக்கிறது. இங்கு ‘ஹுதைபிய்யா’ என்ற பெயரில் கிணறு ஒன்று இருந்தது. அந்தக் கிணற்றின் அருகே இருந்த ஊருக்கும் இந்தப் பெயரே வழங்கப்படலாயிற்று.
அங்கு நபிகளார் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது குஜாஆ கிளையைச் சேர்ந்த சிலருடன் புதைல் இப்னு வர்கா என்பவரை சந்தித்துப் பேசினார்.
அவரிடம் நபிகளார், ‘நாங்கள் யாரிடமும் சண்டை செய்வதற்காக இங்கு வரவில்லை ‘உம்ரா’ செய்வதற்காகவே வந்துள்ளோம். நிச்சயமாக குரைஷிகளுக்குப் போரின் காரணமாக கடுமையான சேதமும் நஷ்டமும் ஏற்பட்டிருக் கிறது. அவர்கள் விரும்பினால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை நான் அவர்களுடன் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொள்ள தயாராக இருக்கிறேன். அவர்கள் எனக்கும் மற்ற மக்களுக்கும் இடையில் குறுக்கிடக் கூடாது. (அதாவது நான் மக்களுக்கு இஸ்லாமை எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் தடையாக இருக்கக் கூடாது.) விரும்பினால் மற்ற மக்களைப் போல இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையெனில் சிறிது காலம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். இவற்றை ஏற்றுக் கொள்ளாமல் ‘போர்தான் புரிவோம்’ என்று பிடிவாதம் பிடித்தால், இந்த மார்க்கத்திற்காக என் கழுத்து துண்டாகும் வரை அல்லது அல்லாஹ் இந்த மார்க்கத்தை நிலை நிறுத்தும் வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்’ என்று கூறினார்கள்.
இந்தக் கருத்தைக் குரைஷிகளிடம் புதைல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து குரைஷிகள் சார்பில் நபிகளாரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே போர் வெறி பிடித்த குரைஷி இளைஞர்கள் தங்களின் தலைவர்கள் சமாதான உடன்படிக்கையில் ஆர்வமாக இருப்பதை விரும்பவில்லை. உடனே அதைத் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர்.
அதன்படி அவர்கள் இரவில் முஸ்லிம்களின் கூடாரத்திற்குள் புகுந்து, போரைத் தூண்டும் சதிச்செயல்களில் ஈடுபட முடிவு எடுத்தனர். இதை நிறைவேற்ற எழுபதுக்கும் மேற்பட்டோர் முஸ்லிம்களின் கூடாரத்தை நோக்கி முன்னேறினார்கள்.
நபிகளார் நியமித்த பாதுகாப்பு படையின் தளபதியான முகம்மது இப்னு மஸ்லமா, எதிரிகள் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தார். இருந்தபோதிலும் சமாதானத்தில் கொண்ட ஆர்வம் காரணமாக அனைவரையும் மன்னித்து நபிகளார் விடுதலை செய்து விட்டார்கள்.
இந்த நிலையில், குரைஷிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த உஸ்மான் (ரலி) அவர்களை மக்கா மாநகருக்கு அனுப்ப நபிகளார் முடிவு செய்தார்கள். அங்கு சென்ற உஸ்மான், குரைஷிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கஅபாவை முஸ்லிம்கள் தரிசிக்க அவர்கள் எந்தவிதத்திலும் இசைவைத் தெரிவிக்கவில்லை. மேலும் உஸ்மான் (ரலி) அவர்களைத் திரும்பிச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டனர்.
இந்த நேரத்தில் ‘உஸ்மான் கொல்லப்பட்டு விட்டார்’ என்ற வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது முஸ்லிம்களை தவிப்புக்குள்ளாக்கியது. முஸ்லிம்கள் அனைவரையும் ஒரு கருவேல மரத்தின் கீழ் நபிகளார் ஒன்று திரட்டி, உஸ்மான் (ரலி) அவர்களது கொலைக்கு பழி வாங்கும் வகையில் இறுதி வரை போராடுவது என்று கையோடு கை இணைத்து உறுதிமொழி வாங்கினார்கள். இந்த உறுதிமொழி முஸ்லிம்களிடையே வியக்கத்தக்க ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. இந்த உடன்படிக்கையே ‘பைஅத்துர் ரிள்வான்’ (அங்கீகரிக்கப்பட்ட இறைப் பொருத்தத்திற்குரிய உடன்படிக்கை) என்று இஸ்லாமிய வரலாற்றில் பெருமையாகப் பேசப்படுகிறது.
இது குறித்து இறை வசனமும் இறங்கியது:
“அந்த மரத்தினடியில் உங்களிடம் கை கொடுத்து உடன்படிக்கை செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தி அடைந்தான். அவர்களின் உள்ளங்களில் இருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும் ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியாக ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்” (திருக்குர்ஆன்-48:18)
இதற்கிடையே முஸ்லிம்கள் தங்கள் மீது பயங்கரமான முறையில் போர் தொடுக்க ஆயத்தமாகி விட்டனர் என்ற தகவல் குரைஷிகளுக்குக் கிடைத்தது. இனியும் உஸ்மானை தடுத்து வைத்திருப்பது தவறு; அவரைத் தாமதிக்காமல் அனுப்பிட வேண்டும் என்று தீர்மானித்தனர். இதன்படி உஸ்மான் பத்திரமாக முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தார்.

நபி முஹம்மது (ஸல்), ‘முஸ்லிம்களின் அடிப்படையே சகோதரத்துவம்தான்’ என்று வலியுறுத்தியதோடு அவர்களுக்கு நற்பண்புகள் போதித்து நல்வழியில் நடத்தினார்கள்.
நபி முஹம்மது (ஸல்), ‘முஸ்லிம்களின் அடிப்படையே சகோதரத்துவம்தான்’ என்று வலியுறுத்தியதோடு அவர்களுக்கு நற்பண்புகள் போதித்து நல்வழியில் நடத்தினார்கள். மக்கள் நபிகளாரிடம் “இஸ்லாத்தில் சிறந்தது எது” என்று கேட்ட போது, “பசித்தோருக்கு உணவளிப்பதும், அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்” என்றார்கள் நபிகள் நாயகம்.
மற்றொரு தருணத்தில் இறைத்தூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் மக்கள் கேட்டனர் “ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டுமென்று.” நபிகள் நாயகம் (ஸல்) தந்த பதில் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இறைத்தூதர்(ஸல்) சொன்ன பதில் “தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!” என்று.
உறவினர்களிடம் மட்டுமல்ல, நபிகள் நாயகம் (ஸல்) மக்களிடம் அண்டை வீட்டாருடன் இணக்கமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்கள். “எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன் இறைநம்பிக்கையாளனே அல்ல” என்று உறுதியாகச் சொன்னார்கள் நபி முஹம்மது (ஸல்).
நபிகளார் சொன்ன அறிவுரைகளும் பொன்மொழிகளும் அல்லாஹ்விடமிருந்து வந்தவை. அண்டை வீட்டார் குறித்து நபி முஹம்மது (ஸல்) அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் (அலை) அறிவுறுத்திக் கொண்டேயிருந்தது எந்த அளவிற்கென்றால், ‘அண்டை வீட்டாரை வாரிசாக்கி விடுவாரோ’ என்று நபிகளாரே நினைக்கும் அளவிற்கு அறிவுறுத்தினாராம் வானவர் ஜிப்ரீல் (அலை).
இறைத்தூதர் (ஸல்) சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழ்ந்து கவனித்து மக்கள் செயல்படத் தொடங்கியதால் மக்களிடையே இனவெறி ஒழிந்தது. நிறம், குலம், கோத்திரம், ஏழை பணக்காரர் வேற்றுமைகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டது.
இஸ்லாமை அடிப்படையாக வைத்து நட்பை ஏற்படுத்தியதோடு “முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தவர். பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார். அல்லாஹ்வால் தடுக்கப்பட்டவற்றைவிட்டு ஒதுங்கியவரே முஹாஜிர் எனும் துறந்தவராவார்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை முழுமையான இறைநம்பிக்கையாளராக மாட்டார்” என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு அதன்படி நடந்தமையால் அங்கு பாகுபாடு கடந்து இணக்கம் மலர்ந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வழிநடத்திய விஷயங்கள் அத்தனையும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல விஷயங்களாக இருந்ததால் மக்களிடையே மாற்றங்கள் நிகழ அது முக்கியக் காரணமாக இருந்தது.
“இறை நம்பிக்கையாளர்கள் ஒரே மனிதனைப் போன்றவர்கள். அவனது கண்ணுக்கு வலி ஏற்பட்டால் உடல் முழுவதும் வேதனைப்படுகின்றன, அவனுக்குத் தலைவலி வந்தால் உடல் உறுப்புகள் மொத்தமும் ஸ்தம்பித்துவிடுகின்றன உறங்காமல் விழித்திருக்கின்றன. அப்படியான இறைநம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் துணை நிற்கும் விஷயத்தில் ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் தம் கைவிரல்களை ஒன்றோடொன்றுக் கோர்த்துக் காண்பித்து விளக்கினார்கள்.
மக்களும் நபிகளாரின் வாக்குகிணங்க பின்னிப் பிணைந்திருந்தனர்.
ஸஹீஹ் புகாரி 1:2:12, 28, 6:79:6236, 2:34:2067, 6:78:6014, 6015, 6016, 1:2:10,13, 2:46:2446, 6:78:6026, ஸஹீஹ் முஸ்லிம் 45:5045

‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
வாழ்க்கைக்கு கணவன்-மனைவி உறவு முக்கியமானது. குடும்பத்திற்கு அடிநாதமாக இருந்து தாங்குபவர்கள் கணவன்-மனைவி தான் என்று கூறலாம். ‘கணவன்-மனைவிக்கு ஆடையாகவும், மனைவி கணவனுக்கு ஆடையாகவும் இருக்கின்றனர்’ என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஆடைகள் மனிதனின் வெட்கத்தலங்களை மறைத்து அவர்களை பாதுகாக்கின்றது. அதுபோல ஒருவருக்கொருவர் பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் இஸ்லாம் இவ்வாறு குறிப்பிடுகின்றது.
கதிஜா (ரலி) இறந்து பதினான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. அப்போது மக்கா வெற்றி கொள்ளப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா நகரினுள் நுழைகிறார்கள். அங்கு குழுமியிருக்கிற அனைவரும் நபி அவர்களை தங்கள் வீட்டில் விருந்தினராக தங்குமாறு அன்பு அழைப்பு விடுக்கின்றார்கள்.
நபி அவர்களோ ‘கதிஜாவின் கப்ருக்கு (கதிஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின்) அருகே எனக்குக் கூடாரம் அடியுங்கள்’ என்று அறிவிக்கின்றார்கள். பதினான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தனது மனைவி கதிஜா அவர்களின்மேல் நபியவர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகிறது இச்சம்பவம்.
அன்பு, பாசம், நேசம், கருணை, பரிவு, விட்டுக்கொடுத்தல், அரவணைத்து செல்லுதல், குற்றம், குறை காணாது தவிர்த்தல், மனம் விட்டு பேசுதல் இவைகள்தான் கணவன்-மனைவி இடையே நெருக்கத்தையும், மன பிணைப்பையும் ஏற்படுத்தும்.
கால மாற்றத்தினூடே இவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சிறு, சிறு பிரச்சினைகள், கருத்து மாறுபாடுகள் காலப்போக்கில் பெரிய பிரிவினையை ஏற்படுத்தி விடுகிறது.
இதில் கோபம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எதற்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்று வரையறை இல்லாமல் சாதாரண விஷயங்களுக்குக் கூட கோபத்தில் வார்த்தைகளை விட்டு மீண்டும் அதை அள்ள முடியாமல் பிரிந்து வாழ்கிறார்கள் பலர்.
‘கண்ணியமானவன், சங்கையானவன் மனைவிக்குக் கண்ணியம், சங்கை செய்வான். சாபத்திற்குரியவன் மனைவியை கேவலப்படுத்துவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். மனைவியை கேவலப்படுத்துபவன் சாபத்திற்கு உரியவன் என்பதே இதன் பொருள்.
தனது மனைவியை ஒருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் இது. தன் மரணப்படுக்கையில் அபுபக்கர் (ரலி) கூறியது நாம் கனவில்கூட நினைத்து பார்க்க முடியாது.
அவர்கள் கூறினார்கள் ‘என் மரணத்திற்கு பிறகு என் ஜனாஸாவை (உடலை) என் மனைவி அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) குளிப்பாட்ட வேண்டும்’.
‘ஏன்?’ என்று கேட்டார்கள் தோழர்கள்.
‘என் இதயத்துடன் நெருக்கமானவள் என் மனைவி. அவள் அதைச்செய்தால் எனக்கு பிடித்தமானதாக இருக்கும்’ என்று பதிலளித்தார்கள்.
தனது இறுதி சடங்கைக் கூட தனது மனைவி செய்ய வேண்டும் என்று விரும்பும் அளவிற்கு தனது மனைவியை நேசித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.
ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தாம். ஆணும் பெண்ணும் இதில் விதி விலக்கல்ல. மனைவி தன் கணவனுக்காகவும், அவன் குடும்பத்திற்காகவும் எத்தனையோ நன்மைகளை, தியாகங்களை செய்திருந்தாலும், அவள் அறிந்தோ, அறியாமலோ செய்த சிறு தவறுகளால் கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுத்து இறுதியில் பிரிவை நோக்குகிறார்கள். மனைவி இத்தனை நாள் தனக்கு செய்த உபகாரங்களை கணவன் கொஞ்சம்கூட நினைத்து பார்ப்பதில்லை.
‘எந்த முஃமினான கணவனும் தன் மனைவியை கோபப்பட்டு பிரிந்துவிட வேண்டாம். அவளின் ஒரு குணம் உன்னை வெறுப்படையச் செய்தால், மறு குணம் உன்னை திருப்தியுறச் செய்யும்’ என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.
அன்பும், கருணையும் இருக்கும் இடத்தில் பகைமைக்கும், பிரிவினைக்கும் வேலையில்லை. மனைவி என்பவள் குடும்பத்தை தாங்கும் அஸ்திவாரம். அவள் மீது காட்டப்படும் அன்பும், பரிவும், கண்ணியமும் மனைவி எனும் அஸ்திவாரத்தை பலப்படுத்தும். அது கட்டிடம் எனும் குடும்பத்தை மகிழ்ச்சியிலும், அமைதியிலும் நிலைத்திருக்கச் செய்யும்.

ஒவ்வொரு பாவத்தையும் செய்யாமல் தவிர்த்து, இறைகுணத்தை செயல்படுத்த இடம் கொடுத்தால்தான், நம்மைப்பற்றி இறைவன் கொண்டுள்ள சித்தத்தின்படியான இறைநீதிகளை நிறைவேற்ற வழிபிறக்கும்.
உலகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான நன்மைகளை இறைவன் நிறுத்தாமல் அருளிக்கொண்டிருக்கிறார். தேவைக்கு அதிகமான நன்மைகளை இறைசித்தத்தைத் தாண்டி மனிதன் நாடும்போதுதான் பாவத்துக்குள் விழுகிறான்.
தேவைக்கு மேல் தேவை ஏற்படுவது போலவும், பணத்தை தேடிவைத்துக் கொள்ளாவிட்டால் உலகத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டு விடுவோம் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை சாத்தான் உருவாக்கி வைத்துள்ளான். அடுத்தவர்களை பார்த்து வாழும் பலர், இந்த மாயைக்குள் எளிதில் சிக்கிக்கொள்கிறார்கள்.
தகுதிக்கும் மேலானதை தேடத்தூண்டும் செயலை, ஆதாம் காலத்தில் இருந்து சாத்தான் செய்து வருகிறான். தரப்பட்டதோடு திருப்தியடையாத உள்ளத்தை (1 தீமோ.6;6), சாத்தான் எளிதில் வசப்படுத்திக் கொண்டு, அவர்களை ஏவாளைப் போல ஏமாற்றி வருகிறான். இதனால் வரும் அலைச்சல்களும், அங்கலாய்ப்புகளும் ஏராளம் ஏராளம்.
நட்புக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் இறைவன் அனுமதிக்கும் நபர்களையும் தாண்டி, உள்நோக்கத்தோடு தேடிக்கொள்ளும் நட்புகளாலும் பல வகையில் பாதை மாறி பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். உலகில் இதெல்லாம் இயல்புதானே என்று தவறுகளை பலர் நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.
இவற்றில் இருந்து மீட்படைய வேண்டுமானால், உண்மையான இறைப்பாதையை அவரவரே நாடிச்சென்று வேத சத்தியங்களைக் கண்டுகொள்வது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. இதற்காக இறைவனுக்கு நமது வாழ்க்கையில் எல்லா வகையிலும் இடம்கொடுக்க வேண்டியது அவசியம்.
ஏசு தனது இறைப்பணியைத் தொடங்கு வதற்கு முன்பு, அவரைப்பற்றிய பல்வேறு தகவல்களை தீர்க்கதரிசனமாக மக்களிடையே யோவான் ஸ்னானன் அறிவித்து வந்தான். ஞானஸ்னானம் என்ற ஒரு இறைநீதியை யோவான் ஸ்னானன் மூலம் நிறைவேற்றுவதற்கு ஏசு வந்தபோது அவன் மறுத்தான்.
அப்போது ஏசு, ‘இப்போது இடங்கொடு. இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்ற தாயிருக்கிறது’ என்றார் (மத்.3;15).
இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் இறைவனுக்கு இடம் கொடுத்து இறைநீதியை நிறைவேற்றுவது எல்லாருக்குமே தரப்பட்ட கட்டளையாக இருக்கிறது. இறைநீதியை நிறைவேற்ற வேண்டுமானால், வாழ்க்கையில் இறைவனுக்கு இடம் கொடுத்தாக வேண்டும் என்பதையும் அந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.
வாழ்க்கையில் இறைவனுக்கு இடம் கொடுப்பது என்றால் என்ன?
முழுமையான மனந்திரும்புதல்தான் இதற்கான முதல் தகுதியைத் தருகிறது. சரீர ரீதியான பாவங்களில் இருந்தும், உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பாவங்களில் இருந்தும், ஜென்ம சுபாவம் என்ற பிறவிக்குணங்களில் இருந்தும் மனந்திரும்புவது தான், அதில் முழுமையைத் தருகிறது.
ஒரு அழுக்கை வைத்துக் கொண்டு மற்றொரு அசுத்தத்தை நீக்கிக் கொள்வது முழுமையான சுத்தத்தைத் தராது. இதில் முழுத்தகுதியையும் பெற்றவன் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து செயல்பாட்டிலும் இறைவனுக்கு இடம் கொடுப்பவனாகவும், அதன் மூலம் அவனைப்பற்றிய இறைநீதிகளை நிறைவேற்றுபவனாகவும் இருக்க முடியும்.
இப்படிப்பட்ட ஆன்மிக வாழ்க்கைக்கு முழுமையான மனந்திரும்புதல் என்பதுதான் அடிப்படையாக உள்ளது. இந்த அடிப்படை அஸ்திவாரத்தை போடாமல், வெளி அடையாளத்துக்காக கூறப்பட்ட ஞானஸ்னானம், ‘ராப்போஜனம்’ என்ற ‘திருவிருந்து’ போன்றவற்றை மேலே மேலே கட்டிக்கொள்வதில் அர்த்தமில்லை.
இறைவனுக்கு இடம் கொடுக்கும் சூழ்நிலை வரும்போது, யோவான் ஸ்னானன் போல அதை மறுக்கும் நிலைதான் முதலில் ஏற்படுகிறது. ஏனென்றால், அது இயல்பு வாழ்க்கையில் இருந்து திசை திரும்பிச் செல்வதுபோல் உள்ளது.
முதலாவதாக, சரீர ரீதியான பல்வேறு பாவங்களை விட்டுவிட்டு, சாதக சூழ் நிலைகள் எழுந்தாலும் அவற்றை செய்யாமல் இருப்பதுதான், சரீர ரீதியான வாழ்க்கையில் இறைவனுக்கு இடம் கொடுத்தலாகும். அதோடு நின்றுவிட முடியாது.
இரண்டாவதாக, காமம், கெடுதல் நினைப்பது, பொறாமை, பொருளாசை (மாற்கு 7;21,22) உட்பட உள்ளத்தில் இருந்து புறப்பட்டு வரும் பல பாவங்களை விலக்கியாக வேண்டும். அதாவது, இச்சையான நினைவு-பார்வை, வேறுபாடு-கவுரவம் பார்ப்பது, மற்றவரின் பொருட்கள் மீது ஆசை வைப்பது என பலவகையான பாவங்கள் உள்ளன. உள்ளத்தில் இருந்து உருவாகும் இவற்றை விலக்கியாக வேண்டும்.
மூன்றாவதாக, பொய் சொல்வது, நினைத்தபடி நடக்காவிட்டால் எரிச்சல் படுவது, கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது கோபமடைவது போன்ற பல வகையான பிறவிக்குணங்களில் இருந்தும் நீங்கியாக வேண்டும்.
மேற்கூறப்பட்ட இந்த சில பாவங்களை, அதற்கான சூழ்நிலை எழும்போது செய்யாமல் கட்டுப்படுத்தி, இறைவன் சொன்னதை மட்டுமே செயல்படுத்த முழுமனதோடு முற்படுவதுதான் இறைவனுக்கு இடம் கொடுத்தலாகும்.
உதாரணமாக, பகைவனை நேசித்தல் என்பது இறைவனுக்கு இடம் கொடுப்பதில் ஒன்றாகும். இது இயல்புக்கு மாறானது.
இப்படி இயல்பாகச் செய்யும் பாவங்களை தவிர்க்க முழுமனதோடு முயன்றால், அதற்கு இறைஆவியின் பலம் தரப்படும் என்பதை கிறிஸ்தவம் மட்டுமே உறுதிபகர்கிறது. அதாவது, வெறும் போதனையை மட்டும் செய்யாமல், போதனையை வாழ்க்கையில் செயல்படுத்தக் கூடிய பலத்தையும் சேர்த்துத் தரும் ஒரே மார்க்கம் கிறிஸ்தவமே.
இப்படி ஒவ்வொரு பாவத்தையும் செய்யாமல் தவிர்த்து, இறைகுணத்தை செயல்படுத்த இடம் கொடுத்தால்தான், நம்மைப்பற்றி இறைவன் கொண்டுள்ள சித்தத்தின்படியான இறைநீதிகளை நிறைவேற்ற வழிபிறக்கும்.
அந்த வகையில் யோவான் ஸ்னானன் இடம் கொடுத்த போதுதான், அவனால் ஏசுவுக்கு திருமுழுக்கு ஞானஸ்னானம் கிடைக்கும் என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறியது. நாம் எதற்கு இடம் அளிக்கிறோம்?