
ஜனாப் சலீம், ஜனாப் அப்பாஸ் கனி, துணைச் செயலாளர் ஜாகிர்உசேன், பொருளாளர் சலீம்சேட் ஆகியோர் இப்பகுதி பள்ளிவாசலில் தொடர்ந்து பணியாற்றிய ஜெய்னுல் ஆப்தீன் மஹ்லரி, சையது இப்ராகிம், நிக்மத்துல்லாஹ் ரஹீம் ஆகியோருக்கு விருதுகள் வழங்கினர். மதராஸ் மாணவ-மாணவிகள் சமூக சிந்தனை, தேசப்பற்று, தொழுகை குறித்து பேசினர். சிறப்பு அழைப்பாளராக வங்கி முன்னாள் முதுநிலை மேலாளர் வீரராகவன், கிராம தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் சுகுமாறன், மேட்டுப்பாளையம் சதக்கத்துல்லாஹ் மக்தூமி ஆகியோர் மதநல்லிணக்கம் குறித்து பேசினர். ஜனாப் சலீம்சேட் நன்றி கூறினார்.