search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    தோஷங்கள், பாவவினை போக்கும் பாதயாத்திரை
    X

    தோஷங்கள், பாவவினை போக்கும் பாதயாத்திரை

    • சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர்.
    • பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும்.

    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் 'பாதயாத்திரை' என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. மார்கழி மாதத்தில் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒரு சிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.

    குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, நத்தம், திருச்சி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியே காவடி எடுத்து, முருகா...! முருகா...! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி, பச்சை வண்ண உடையை அணிந்து பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.

    இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, எடுத்து ஆடிக்கொண்டே வருகின்றனர். பழனி ஆண்டவனுக்கு காவடி எடுத்தால் சகல வினைகள் நீங்கும். தோஷங்கள் விலகும். வாழ்வில் ஆனந்தம் பெருகும். பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.

    Next Story
    ×