என் மலர்

  தோஷ பரிகாரங்கள்

  திருமணத் தடை செய்யும் தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...
  X

  திருமணத் தடை செய்யும் தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிலருக்கு பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது.
  • தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

  திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. திருமணத் தடை செய்யும் தோஷங்களையும் அதற்கான பரிகாரங்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

  செவ்வாய் தோஷம்

  ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக அனைவருக்கும் தெரிந்த தோஷம் "செவ்வாய் தோஷம்'' ஜாதக கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவர வில்லை . சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை. பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ப தோஷத்தினால் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பல்வேறு விதி விலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும் கூட 2,7,8-ம்மிடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8-ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12-ம் இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 4,12ல் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும். பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் செவ்வாய் கிழமை ராகு வேளையில் சுப்ரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

  ராகு - கேது தோஷம்

  செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக அனைவரும் அறிந்தது சர்ப்ப தோஷம். நிழல் கிரகம், சர்ப்பங்கள் எனப்படும் ராகு கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணத் தடையை சிலருக்கு உருவாக்குகிறது. 1,7-2,8 மிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். 5-ல் சர்ப்ப கிரகம் உள்ள ஜாதகத்திற்கு 5, 11-ல் சர்ப்பங்கள் இல்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு. சர்ப்ப தோஷத்தால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

  கால சர்ப்ப தோஷம்

  லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும். திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும். காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.

  கிரகண தோஷம்

  பூமியில் கிரகணம் சம்பவிக்கும் நாளுக்கு முன், பின் 7 நாட்கள் பிறக்கும் குழந்தைகளின் வினைப் பதிவு மிகவும் கடுமையாக உள்ளது. ராகு-கேது, சூரியன்-சந்திரனுடன் செவ்வாய், சனி சம்பந்தம் பெறுபவர்கள் அசுப பலனையும், குரு மற்றும் லக்ன சுபரின் சாரம் பெற்றவர்கள் எதையும் வென்று வெற்றி வாகை சூடுபவர்களாக இருக்கிறார்கள். லக்னம் 7-ம் இடம் சுப வலிமை பெற்று தசா புத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது. 1,7-2,8-ம் இடத்திற்கு கிரகண தோஷ பாதிப்பு இருந்து திருமணம் தடைபட்டால் ராம நாமம் பாராயணம் செய்ய வேண்டும் அல்லது எழுத வேண்டும்.

  சனி தோஷம்

  கர்மகாரகன் மற்றும் ஆயுட்காரகனாகிய சனி பகவான் மண வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் தரக்கூடிய 1, 2, 5, 7, 8 மற்றும் 12-ல் அமர்ந்தால் திருமணம் காலதா மதமாக நடைபெறும். இத்துடன் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், ராகு-கேது இணைந்தால் தோஷம் இரட்டிப்பாகும். சனிக்கு திரிகோணாபதிகள் மற்றும் குரு தொடர்பு இருப்பின் தோஷம் குறையும்.1, 2, 7, 8, 12-ல் உள்ள சனிக்கு இதே அமைப்புள்ள ஜாத கத்தையும், 5-ல் உள்ள சனிக்கு 5-ல் சனியில்லாத ஜாதகத்தையும் இணைத்தல் சிறப்பு. மேலும் தொடர்ந்து சிவ வழிபாடு செய்து வந்தால் திருமணத் தடை அகன்று மங்கலம் உண்டாகும்.

  சூரிய தோஷம்

  ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன், குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது 7-ல் அமர்ந்த சூரியன் களத்தரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது. 8-ல் அமர்ந்த சூரியன் திருமணத் தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும். ஞாயிற்று கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சூரிய ஓரையில் 1 கிலோ கோதுமை தானம் தருவதுடன் 6 வாரம் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

  சுக்கிர தோஷம்

  களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது. வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.

  களத்திர தோஷம்

  ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும்.

  புத்திர தோஷம்

  ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5ம் இடத்தை கொண்டும் பெண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5, 9-ம் இடத்தை கொண்டும் குருவின் வலிமையை கொண்டும் புத்திர பாக்கியத்தை தீர்மானிக்கலாம். 5-ம் அதிபதி அல்லது 5-ம்மிடஅதிபதி நீசம், வக்ரம், அஸ்தங்கம், பகை வீட்டில் தஞ்சம் 6, 8.12 ல் மறைவு, 5-ல் நின்ற குரு ஆகியவை புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். புத்திர தோஷம் உள்ள ஜாதகத்திற்கு புத்திர தோஷமற்ற ஜாதகத்தை இணைப்பதே. 5-ம்மிட வலிமை குறைவால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் பஞ்சமி திதியில் மீனாட்சி அம்மனை வழிபட வேண்டும்.

  புனர் பூ தோஷம்

  சனி, சந்திரன் சம்பந்தத்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷம். தாலி கட்டும் நேரத்தில் கூட திருமணத்தை நிறுத்தும் வல்லமை படைத்த தோஷம். திங்கள் தோறும் அம்பிகை வழிபாடு மற்றும் பச்சரிசி தானம் செய்ய வேண்டும்.

  மாங்கல்ய தோஷம்

  இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும். 8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி. வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.

  கிரக இணைவுகள் தரும் தோஷம்

  சிறப்பான மணவாழ்வை தடை செய்வதில் கிரக இணைவுகள் பெரும் பங்கு வகிக்கிறது. சில குறிப்பிட்ட கிரக இணைவுகள் மண வாழ்வையே முறிக்கும் வல்லமை படைத்தவைகள். 6,7,8 ஆகிய பாவக அதி பதிகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பெறுவது. சூரியனுடன் சுக்கிரன், செவ்வாய் இணைவு சந்திரன்-கேது, சுக்கிரன்-கேது, செவ்வாய்-கேது இணைவு பெறுதல். இதே போன்ற கிரக இணைவு பெற்று திருமணம் தடைபடுபவர்கள் அஷ்டமி திதியில் பைரவரை வழிபாடு செய்ய வேண்டும்.

  திதி சூன்ய பாதிப்பு

  அமாவாசை, பவுர்ணமி தவிர்த்து ஏனைய திதிகளில் பிறந்தவர்களுக்கு சூரிய ஒளிக்கதிர் ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களுக்கு கிடைக்காமல் இருந்தால் திதி சூன்ய பாதிப்பு ஏற்படுகிறது. திதி சூன்ய பாதிப்பு இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் தோஷம் விலகும்.

  பிரம்மஹத்தி தோஷம்

  ஜனன ஜாதகத்தில் குருவும், சனியும் அஷ்டம, பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெற்று பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கும். இதனால் வறுமை, நிம்மதியற்ற வாழ்க்கை , திருமணத் தடை , குழந்தை பேரின்மை போன்ற பல்வேறு பிரச்சினை உருவாகும்.

  விஷ கன்னிகா தோஷம்

  ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7,8 ஆகிய பாவகங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும் , சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. இத்தகைய தோஷம் ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது. இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-வது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும் போதோ தோஷத்தின் வீரியம் குறையும். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும் எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி கோட்ச்சார கிரகங்கள் தொடர் பெறும் காலங்களில் மட்டுமே சுப-அசுப விளைவுகள் ஏற்படும். ராகு-கேது, செவ்வாய் மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூட நம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை கண்டறிந்து உரிய பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.

  ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

  Next Story
  ×