என் மலர்

    ஆன்மிகம்

    பெருமாள் வழிபாடு
    X
    பெருமாள் வழிபாடு

    திருமண தடை, நினைத்ததை நிறைவேற்றும் தலங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திருமணம் கை கூடாமல் அவதிப்படுபவர்கள், நினைத்தது நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் நிறைவேறும்.
    * திருவாரூர் அருகில் மணக்கால் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது, ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில். இந்த ஆலயத்தில் யோக நரசிம்மருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இவருக்கு தொடர்ந்து 6 வாரங்கள், தேங்காய் உடைத்து, அதில் நெய் விளக்கேற்றி வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் நிறைவேறும்.

    * வேலூர் மாவட்டத்தில் உள்ளது காவேரிப்பாக்கம். இதன் அருகே உள்ள ரங்கநாதர் ஆலயத்தில் திருமணம் ஆகாத ஆண்கள், 116 விரலி மஞ்சளால் கோர்க்கப்பட்ட மாலை, 5 தேங்காய், ஒரு கிலோ நெய், ஒரு கிலோ நல்லெண்ணெய் சமர்ப்பித்து அர்ச்சனை செய்தால் திருமணம் கை கூடும். பெண்கள், ரங்கநாயகி தாயாருக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் மணப்பேறு வாய்க்கும். குழந்தை வரம் வேண்டுபவர்கள், தாயாருக்கு பால் அபிஷேகம் செய்வதோடு, வாசல்படியில் நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டு வணங்க வேண்டும்.
    Next Story
    ×