search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலங்குடி குரு பகவான் கோவில்
    X
    ஆலங்குடி குரு பகவான் கோவில்

    திருமணப்பேறு, புத்திரப்பேறு அருளும் ஆலங்குடி

    இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.
    ஆலங்குடி கும்பகோணம் – நீடாமங்கலம் – மன்னார்குடி சாலையில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது ஆபத்சகாயேசுவரர் கோவில்.

    இங்கு இறைவனார் ஆபத்சகாயேசுவரர், அம்மை ஏலவார் குழலி என்ற பெயர்களில் அருள்புரிகின்றனர். இத்தலம் சாயாரட்சை எனப்படும் மாலை (மாலை 5.30 முதல் 6.00 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் பூளைவனம் ஆகும். பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தி உலக உயிர்களை காத்த இடம் ஆதலால் இவ்விடம் ஆலங்குடி. இறைவன் ஆபத்சகாயேசுவரர் ஆவார்.

    முசுகுந்த சக்கரவர்த்தி தன் மந்திரியும், சிவபக்தருமான அமுதோகர் என்பவரது சிவபுண்ணியத்தில் பாதியளவை கேட்டு மந்திரி சம்மதிக்காததால் அவரின் தலையைக் கொய்ய உத்தரவிட்டான். மந்திரியின் தலையைக் கொய்தவுடன் அமுதோகர் என்ற சப்தம் இத்தலம் முழுவதும் கேட்டதும் அரசன் தன் தவறுக்கு வருந்தி இத்தல இறைவனை வணங்கி சாப விமேசனம் பெற்றான்.

    அம்மை இவ்விடத்தில் இறைவனை திருமணம் செய்ய தவம் இயற்றி இறைவனை கணவனாகப் பெற்றார். நவகிரக தலங்களில் இவ்விடம் குரு பகவானுக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல இறைவனை வழிபட கல்வியும் ஞானமும் கிடைக்கும். நல்ல திருமணப்பேறு, புத்திரப்பேறு கிடைக்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 98-வது தலமாகும்.
     
    திருகொள்ளம்புதூர் – வில்வ வனம் – அர்த்தசாம வழிபாடு
    Next Story
    ×