search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகர ராசிக்காரர்களின் திருமண தடை நீக்கும் பரிகாரம்
    X

    மகர ராசிக்காரர்களின் திருமண தடை நீக்கும் பரிகாரம்

    நீண்டநாள் திருமணதடை உள்ளவர்களுக்கும் செவ்வாய் மற்றும் இராகு கேது தோஷத்தால் திருமண தடைவுள்ளவர்களும் மகர ராசிக்கே உரிய வழிபாட்டு முறைகள் உள்ளன.
    நீண்டநாள் திருமணதடை உள்ளவர்களுக்கும் செவ்வாய் மற்றும் இராகு கேது தோஷத்தால் திருமண தடைவுள்ளவர்களும் மகர ராசிக்கே உரிய வழிபாட்டு சூட்சும யோகநேரம் உள்ளது. இந்த எளிமையான சைவ சமய வழிபாட்டு முறையை பின்பற்றி திருமணயோகம் பெறுங்கள்.

    மகரராசிக்காரர்கள் திருமணத்தடை அகன்று திருமணயோகம் பெற அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு திங்கக்கிழமை மகரராசிக்கு யோகம் தரும் நேரமாகிய மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் ஆலயத்திலுள்ள கன்னி மூல கணபதியை வணங்கி பின்பு முருகன் வள்ளி தெய்வானையை வணங்கி பின்பு நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரபகவானுக்கும் சுக்கிரபகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 9 முறை வலம்வந்து மூலவராகிய சிவபெருமானையும் அம்பாளையும் 7 வாரங்கள் தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் வழிபட அதிவிரைவில் திருமணம் பெரும் யோகம் அமையும். வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் மூலவராகியசிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும். நவக்கிரக மேடையில் விளக்கேற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் தீபம் ஏற்றிக்கொள்ளவும்.

    திருமணயோகம் பெரும் நபரின் ராசிக்கே வழிபாட்டைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். திருமணயோகம் பெரும் நபரே வழிபாட்டைத் தொடங்க வேண்டும். அவர் கோவிலுக்கு போக முடியாத நாட்களில் தாய் அல்லது தந்தை கோவிலுக்கு சென்று வரலாம். மூவரும் போகமுடியாத நிலை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும்.

    குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம் . பரிகாரவழிபாடு தொடங்கிய சிலவாரங்களிலேயே பலன்கிடைத்துவிட்டால் இடையில்நிறுத்தாமல் வழிபாட்டு வாரம் முழுவதையும் நிறைவுசெய்ய வேண்டும். வாரம் ஒரு முறை பல வாரங்கள் தொடர்ந்து வழிபடவேண்டும் என்பதால் விரதமுறைகள் தேவை இல்லை ஆனால் கண்டிப்பாக கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.
    Next Story
    ×