என் மலர்

  ஆன்மிகம்

  சுட்டிக் குழந்தைகளின் தோஷம் நீங்க பரிகாரம்
  X

  சுட்டிக் குழந்தைகளின் தோஷம் நீங்க பரிகாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி உய்யக் கொண்டான் திருமலை கோவிலில் உள்ள ஸ்ரீபாலாம்பிகையை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம், திருஷ்டி போன்றவை நீங்கும்.
  திருச்சியில் இருந்து வயலூர் செல்லும் வழியில் உய்யக் கொண்டான் திருமலை கோவில் உள்ளது. இங்கு உஜ்ஜீவனநாதர் ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீஅஞ்சனாட்சி சமேதராகக் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

  இந்த ஈஸ்வரனுக்கு பானகம் படைத்து வழிபட ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். அதேபோல், ஸ்ரீஅஞ்சனாட்சி அம்பாளை வழிபட, கண் நோய்கள் அகலும். ஸ்ரீபாலாம்பிகையை வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம், திருஷ்டி போன்றவை நீங்கும். சில குழந்தைகள் எப்போதும் சுட்டித்தனமாக சேட்டை செய்து கொண்டே இருப்பார்கள்.

  என்னதான் செய்தாலும் அவர்கள் கட்டுப்படமாட்டார்கள். அத்தகைய குழந்தைகளை அழைத்து வந்து ஸ்ரீபாலாம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இதனால், அந்தக் குழந்தைகளின் சேட்டைகள் குறையும். அவர்களுக்கு தீர்க்காயுள் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த தலத்தில் பங்குனி பிரம்மோற்சவம் சிறப்புற நடைபெறும்.

  Next Story
  ×