என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதூர் கண்ணொளி அன்னை புனித லூசியா புதிய ஆலயம்
புதூர் கண்ணொளி அன்னை புனித லூசியா புதிய ஆலய புனிதப்படுத்துதல் விழா இன்று நடக்கிறது
புதூர் மண்டைக்காட்டில் கண்ணொளி அன்னை புனித லூசியா ஆலய புனிதப்படுத்துதல் மற்றும் பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இதனையொட்டி காலை 6.30 மணிக்கு குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பிறகு அங்கிருந்து சிறப்பு திருக்கொடி பவனி நடக்கிறது.
மதியம் 3.30 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் இருந்து பவனியும், மாலை 5 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 5.30 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புதிய ஆலயம் புனிதப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதில் பங்குதந்தை அருட்பணி சாம்.எப்.மேத்யூ, துணை தலைவர் ஜீஸஸ், செயலாளர் சகாயராஜ், பொருளாளர் ஜெமிலன் மற்றும் பங்கு இறைமக்கள், பங்கு பேரவை, கட்டிடக்குழு, புனித அன்னாள் பிறரன்பு அருட்சகோதரிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8 மணிக்கு அன்பு விருந்து நடைபெறுகிறது. தொடர்ந்து 13-ந் தேதி வரை பெருவிழா நடைபெறுகிறது.

Next Story