search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புனித அந்தோணியார்
    X
    புனித அந்தோணியார்

    வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இன்று (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார்.
    தூய அந்தோணியார் திருத்தல பங்கு மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் அமைந்துள்ளது. இங்கு குமரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் சாதி மத வேறுபாடு இல்லாமல் வந்து செல்கிறார்கள். இந்த திருத்தல பங்கின் திருவிழா நேற்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதை முன்னிட்டு நேற்று இன்று காலை 10 மணிக்கு ஜெபமாலை, நவநாள், நற்கருணை கொண்டாட்டம் ஆகியவை அருட்பணியாளர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் நடந்தது. அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரை நிகழ்த்தினார்.

    மாலை 5 மணிக்கு ஜெபமாலை நவநாள் கொடி பவனியும் அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடியேற்றமும், நற்கருணை கொண்டாட்டமும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் யேசு ரத்தினம் தலைமையில் நடந்தது.

    இன்று (புதன்கிழமை) மாலையில் அருட்பணியாளர் டோமினிக் சாவியோ தலைமையில் நடக்கும் நற்கருணை கொண்டாட்டத்தில் அருட்பணியாளர் ஜார்ஜ் மறையுரை நிகழ்த்துகிறார். நாளை மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆனந்த் தலைமையிலும், 25-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையிலும், மாலை 5 மணிக்கு அருட்பணியாளர் ஆல்பர்ட் தலைமையிலும், 26-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.

    27-ந் தேதி காலை 8 மணிக்கு முதல்திருவிருந்து விழா கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையிலும், 28-ந் தேதி மாலை 5.30 மணிக்கு அருட்பணியாளர் பீட்டர் தலைமையிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடக்கிறது.

    மார்ச் 1-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்திலும், 9.30 மணி, 11 மணிக்கு தமிழிலும் நற்கருணை கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அன்று மாலை 4.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் திருவிழா நிறைவு நற்கருணை கொண்டாட்டம் நடைெபறும். நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்குகிறார்.
    Next Story
    ×