search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா.
    X
    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா.

    தூய அலங்கார உபகார மாதா ஆலய தங்க தேர் பவனி இன்று நடக்கிறது

    கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலய 9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் திருப்பலி, மறையுரை, திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை போன்றவை நடைபெற்றது.

    9-ம் நாள் திருவிழாவான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு வாணவேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பர் தங்கத் தேர் பவனியும் நடைபெறுகிறது. 10-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும், 8 மணிக்கு ஆங்கில திருப்பலியும் நடைபெறுகிறது. பின்னர் 9 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது.

    10.30 மணிக்கு மலையாள திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்குமாறு பங்கு பேரவை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் ஆண்டனி அல்காந்தர், துணை பங்கு தந்தைகள் ஜேக்கப், மெர்ஜின், கிங்ஸ்லின் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சேசுசுமன், துணைச் செயலாளர் பினோலின், பொருளாளர் தீபக் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×