search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமூக இடைவெளியை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    சமூக இடைவெளியை கடைபிடித்து கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை

    தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
    ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து கோவை புலியகுளம் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவில், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், மருதமலை முருகன் கோவில், காரமடை அரங்கநாதர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டன. அங்கு பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல் பள்ளி வாசல்களும் திறக்கப்பட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர்.

    அப்போது, காட்டூர் தேவாலயம் உள்பட ஒரு சில தேவாலயங்கள் மட்டுமே திறக்கப்பட்டன. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், டவுன்ஹால் புனித மைக்கேல் பேராலயம், நஞ்சப்பா ரோடு கிறிஸ்து அரசர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயம், காந்திபுரம் புனித பாத்திமா ஆலயம், அவினாசி ரோடு இமானுவேல் சி.எஸ்.ஐ. ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம், ரேஸ்கோர்ஸ் ஆல்சோல்ஸ் ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். அவர்கள், சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர்.

    முன்னதாக தேவாலயங்களின் நுழைவு வாசலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலயத்துக்கு வந்தது மனநிம்மதி அளிப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×