என் மலர்
ஆன்மிகம்

வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
வேளாங்கண்ணியில் பேராலயத்தில் சிறிய தேர்பவனி
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் சிறிய தேர் பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயம், இந்தியாவில் உள்ள கத்தோலிக்க பேராலயங்களில் பிரசித்தி பெற்றதாகும். வங்க கடலோரம் பிரமாண்ட கட்டிட கலை அம்சத்துடன் காட்சி அளிக்கும் வேளாங்கண்ணி பேராலயத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வருவார்கள்.
இங்கு ஆண்டுதோறும் ஆரோக்கியமாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.கொரோனா காரணமாக வேளாங்கண்ணி பேராலய திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றியே நடந்தது.
விழா நாட்களில் அன்னையின் சிறிய தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதனை முன்னிட்டு நேற்று இரவு பேராலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

Next Story