search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம்
    X
    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம்

    மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம்

    நாகர்கேவில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம். புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பங்குமக்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.
    நாகர்கேவில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம். புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் பங்குமக்கள் இணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றோம்.

    ஐந்தாம் நூற்றாண்டில் பத்ரீசியன் குலத்தை சேர்ந்தவரும், பக்தி உள்ளவருமான ஜாண் என்பவர் குழந்தை இன்றி வெகு நாட்களாக இருந்தார். தன்னிடம் இருந்த ஏராளமான பொருட்களை ஒரு நல்ல காரியத்திற்கு செலவிட விரும்பினார். அந்த கருத்துக்காக அவரும் அவரது மனைவியும் சேர்ந்து தேவதாயாரிடம் உருக்கமாக வேண்டினர். இவர்களுக்கு தேவதாயார் கனவில் காட்சியளித்து அருகில் இருந்த மலையில் பனி உறைந்துள்ள ஓர் இடத்தில் தனது பெயரால் ஓர் ஆலயம் கட்டும்படி கேட்டுக்கொண்டார். மறுநாள் காலையில் அவ்விருவரும் திருத்தந்தையிடம் சென்று இந்த செய்தியை அறிவித்தனர்.

    திருத்தந்தை லியேரியுஸ் இதை கேட்டு வியந்தார். ஏனெனில் அவருக்கும் அதே இரவில் தேவதாயார் காட்சியளித்து அதே மலையில் ஓர் ஆலயம் எழுப்ப சொல்லியிருந்தார். உடனே ஏராளமான விசுவாசிகளை  அழைத்து கொண்டு தேவதாயார் குறித்த இடத்திற்கு சென்றனர். குறிப்பிட்ட ஓர் இடத்தில் உறைபனி விழுந்திருப்பதையும் ஒரு பெரிய கோவிலின் அளவுக்கு பனியால் குறிக்கப்பட்டிருப்பதையும் அங்கு சென்ற அனைவரும் கண்டு வியப்பு அடைநதனர். திருதந்தையின் உத்தரவோடு ஜாண் தனது சொந்த செலவில் ஓர் ஆலயத்தை கட்டி முடித்தார். இன்று வரை அங்கே பல புதுமைகள் நடந்து வருகின்றன. இதுவே புனித தஸ்நேவிஸ் அன்னையின் வரலாறாக கூறப்படுகிறது.

    இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்றின் காரணமாக மறவன்குடியிருப்பு புனித தஸநேவிஸ் மாதா ஆலய திருவிழாவானது அரசு மற்றும் மறைமாவட்ட விதிமுறை மற்றும் விழகாட்டுதலின் படி 3 நாள் திருவிழாவாக சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஆகஸ்டு 7-ந் தேதி ஆகஸ்டு  8 மற்றும் 9-ம் தேதிகளில் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    நேற்று காலை 6 மணிக்கு ஜெபமாலையும் அதனை தொடர்ந்து திருவிழா திருப்பலியும் நடைபெற்றது. இறைமக்கள் வீடுகளில் அமர்ந்து வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் விதமாக நிகழ்ச்சிகள் நேரலையாக - maravankudieruppu.com     இணையதளத்திலும்    Zoom appயிலும் உள்ளூர் தொலைக்காட்சி AJ channel (TCCL 140) யிலும் ஒளிபரப்பப்பட்டது.

    விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருட்பணியாளர், அருட்பணி பேரவை, ஆலய திருப்பணி குழு, பங்கு மக்கள் இணைந்து செய்தனர்.

    விழா நிகழ்ச்சியை கண்டு கழித்து புனித தஸ்நேவிஸ் மாதாவின் அருள் ஆசியை பெற அன்புடன் வேண்டுகிறோம்.
    Next Story
    ×