search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவனுக்கு பயந்த யோபு
    X
    தேவனுக்கு பயந்த யோபு

    தவக்கால சிந்தனை: தேவனுக்கு பயந்த யோபு

    தேவ பிள்ளைகளே நாமும் யோபுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம் ஆமென்.
    தவக்கால சிந்தனை:  தேவனுக்கு பயந்த யோபு

    இந்த உலகத்தில் நமக்கு பல்வேறு இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம். ஆனால் நமக்கு இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி சொல்வோம். ஆனால் துன்பம் வரும் போது கடவுளே இல்லை என்கிற அளவுக்கு பேசுவோம். ஆனால் வேதத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று இந்த தவக்காலத்தில் சற்று தியானித்து பார்ப்போம்.

    யோபு என்ற பெயர் கொண்ட மனிதன் இருந்தான். அவன் உத்தமனும், தேவனுக்கு பயந்தவனும், பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். அவனுக்கு 7 மகன்களும், 3 மகள்களும் இருந்தனர். சொத்துக்களும் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தன. மேலும் ஆடு, மாடு,ஒட்டகம், கழுதைகள் என கால்நடைகளும் ஆயிரம் ஆயிரமாய் இருந்தன. இதனால் வேலையாட்களும் அதிகமாய் வேலை செய்தனர். இப்படி இருந்ததினால் மிகவும் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்தான். ஆனால் இதில் மிக முக்கியமானது என்னவென்றால் இவ்வளவு சொத்து, சுகம் இருந்தும் அவன் தேவனுக்கு மிகவும் பயபக்தியுடன் காணப்பட்டான். இதனால் இன்பமாக வாழ்ந்து வந்தான்.

    இப்படி இருந்து கொண்டிருந்த யோபுக்கு திடீரென சோதனை காலம் ஆரம்பித்தது. அவன் வளர்த்து வந்த கால்நடைகளை எல்லாம் உறவினர்கள் திருடிச்சென்று விட்டனர். பெற்ற பிள்ளைகள் எல்லாம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து விட்டனர். யோபுவுக்கோ உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பருக்கள் தோன்றி அகோரமான நோய்க்கு ஆளானான். இப்படி இருந்த போது அவனின் மனைவியோ யோபுவை பார்த்து தேவனை வெறுத்து உயிரை விடும் என்று வேண்டிக்கொண்டான். ஆனால் யோபுவோ, கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார் கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் என்றான். இப்படி துன்ப காலத்தை அனுபவித்த யோபு எந்த நிலையிலும் கடவுளை வெறுக்கவும் இல்லை, எந்தவித பாவமும் செய்யவில்லை. இதனால் யோபுவுக்கு இன்ப காலத்தில் இருந்த செல்வம். பிள்ளைகள் என இருமடங்காக கொடுத்து தேவன் ஆசீர்வதித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.

    ஆம் தேவ பிள்ளைகளே நாமும் யோபுவை போல இன்பத்திலும், துன்பத்திலும் தேவனை வெறுக்காமல் எப்போதும் தேவனுடைய பிள்ளைகளாய் வாழ்ந்து தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம் ஆமென்.

    சகோ.கிங்ஸ்லி, ஜோதிநகர், கே.செட்டிபாளையம்.
    Next Story
    ×