என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித பெரிய நாயகி அன்னை
    X
    புனித பெரிய நாயகி அன்னை

    பெரியநாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை தொடங்குகிறது

    கோணான்குப்பம் பெரிய நாயகி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோணான்குப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் ஆண்டு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டிய 300-வது ஆண்டு தொடக்க விழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு திருப்பலி மற்றும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை வேளையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 23-ந் தேதி காலை 7.30 மணிக்கு கூட்டு திருப்பலியும், அன்று இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 24-ந் தேதி கொடியிறக்கத்துடன் இந்த ஆண்டுக்கான விழா நிறைவடைகிறது.

    விழாவில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்குதந்தை அலெக்ஸ் ஒளில் குமார் மற்றும் வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×