search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்துமஸ் மரம்
    X
    கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸை வரவேற்கும் கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் இல்லங்களில் இந்த மரங்கள் அலங்கரிப்பதை பார்க்க முடியும்.
    கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவ மக்களின் இல்லங்களில் இந்த மரங்கள் அலங்கரிப்பதை பார்க்க முடியும்.

    இந்த மரங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்சியமான தகவல்களை வரலாற்றுக் குறிப்புகளின் மூலம் அறிய முடியும்.

    இந்த கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் அலங்கரிக்கும் பாரம்பரியமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர், தொடங்கியதாக கூறப்படுகின்றது.

    பேகன் மத மக்கள் பசுமையான மரங்களை கருவுறுதலின் அடையாளமாக தங்களது கதவு மற்றும் ஜன்னல்களில் அலங்கரித்து வணங்கி வந்தனர்.

    1500-ம் ஆண்டு மற்றும் 1600களுக்கு இடையில், லாட்வியா மற்றம் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்கத் துவங்கினர். பின்னர் ஜெர்மானியர்கள் இந்தப் பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டதாக காஸ் என்னும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

    நார்ட்மேன் பிர் எனப்பெயர் கொண்ட மரமே கிறிஸ்துமஸ் மரங்ளின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

    இந்த மரத்தின் இலையானது மென்மையான ஊசிபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இம்மரத்தில் வழக்கமாக மரங்களில் இருக்கும் நறுமணம் இல்லாததால் இது ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், நறுமனத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கும் சிறந்த தேர்வாகவும், விரும்பப்படுவதாகவும் அமைந்தது.

    தொண்ணூற்றெட்டு சதவீத கிறிஸ்துமஸ் மரங்கள் அனைத்தும் பண்ணைகளிலேயே வளர்க்கப்படுகின்றன.

    கிறிஸ்துமஸ் மரத்தின் ஒளிரும் மெழுகுவர்த்திகளை முதன்முதலில் ஏற்றிய பெருமை பதினாறாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி மார்டின் லூதர் என்பவரையேசாரும்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது ஜெர்மனியில் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவை அமெரிக்காவில் பிரபலமடைந்தன.

    பச்சை நிற சாயம் நனைக்கப்பட்ட வாத்தின் இறகுகளை கம்பிக் கிளைகளுடன் இணைத்தே முதன் முதலில் செயற்க்கை கிறிஸ்துமஸ் மரங்கள் தயாரிக்கப்பட்டன.

    கிறிஸ்துமஸ் மரங்களை தலைகீழாகத் தொங்கவிடுவதும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் பாரம்பரியமாக இருந்தது வந்திருக்கின்றது. பல ஸ்லாவிக் குழுக்களிடையே இப்பழக்கம் பொதுவாகக் காணப்பட்டதாகவும், ஆனால் இந்த பாரம்பரியம் எப்படி ஏன் தொடங்கியது என்பது இன்னும் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது, என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

    ஒரு கிறிஸ்துமஸ் மரமானது வழக்கமான உயரத்தை அடைய 15 ஆண்டுகள் வரை ஆகலாம். என்று கூறப்படுகின்றது.

    ஒரு கிறிஸ்துமஸ் மரத்தின் வழக்கமான உயரம் சுமார் ஆறு அல்லது ஏழு அடியாகும்.

    1846 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி தனது கணவர் மற்றும் கிறிஸ்துமஸ் மரத்தைச் சுற்றி நின்று கிறிஸ்துமஸை கொண்டாடிய புகைப்படம் வெளியான பிறகே இங்கிலாந்தில் பொதுமக்கள் கிறிஸ்துமஸ் மரங்களைத் தங்கள் வீடுகளிலும் அலங்கரிக்கத் தொடங்கினர்.

    அதன் பின்னரே அமேரிக்காவிலும் கிறிஸ்துமஸ் மரங்களை வீடுகளில் அலங்கரிப்பது பிரபலமானது.

    உலகின் மிக உயரமான 67.36 மீ (121 அடி) கிறிஸ்துமஸ் மரம் டக்ளஸ் பிர், 1950 டிசம்பரில் அமெரிக்காவின் சியாட்டிலிலுள்ள நார்த்கேட் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

    237 அடி உயரமுடைய செயற்கை கிறிஸ்துமஸ் மரமானது இலங்கையில் கொழும்பு நகரில் அலங்கரிக்கப்பட்டது. உலகின் உயரமான செயற்கைக் கிறிஸ்துமஸ் மரமாக இதனைக் கூறுகிறார்கள்.

    2010 ஆம் வருடம் பெல்ஜியம் நாட்டின் மேல்மெடி என்ற இடத்தில் வைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரமானது எறத்தாழ 1,94,62 வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சாதனை படைத்தது.

    2007 ம் ஆண்டு பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோவில் 85 மீ உயரமுடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரமானது 2.8 மில்லியன் மைக்ரோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

    2010 ஆம் ஆண்டு வளைகுடாநாடான அபுதாபியில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரமானது 181 நகைகளால் அலங்கரிக்கப்பட்ட விலையுயர்ந்த மரமாகக் கருதப்படுகிறது.

    1886 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட 12 இன்ச் உயரமுடைய கிறிஸ்துமஸ் மரமே மிகப் பழமையான ஒன்றாகக் கூறப்படுகின்றது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேனட் பார்க்கர் என்பவரே இந்த அழகிய கிறிஸ்துமஸ் மரத்தின் சொந்தக்காரராவார்.
    Next Story
    ×