என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குடும்பம்
    X
    திருக்குடும்பம்

    பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் ராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. இதனையொட்டி நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு திருக்கொடியேற்றமும், திருப்பலியும் நடக்கிறது.

    திருப்பலிக்கு கோட்டார் வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். பிஷப் ரெமிஜியூஸ் பள்ளி தாளாளர் ஸ்டேன்லி சகாய சீலன் அருளுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    24-ந் தேதி இரவு 11 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா சிறப்பு நள்ளிரவு திருப்பலி நடக்கிறது. 25-ந் தேதி காலை 6.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலையில் நடைபெறும் திருப்பலிக்கு மேலராமன்புதூர் பங்கு பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்குகிறார். சூசைபுரம் பங்கு பணியாளர் ஜெகன் சில்வெஸ்டர் அருளுரையாற்றுகிறார்.

    27-ந் தேதி காலை 10 மணிக்கு கிறிஸ்தவ வாழ்வு சமூகம் சார்பில் திருமுழுக்கு சிறப்பு திருப்பலி நடக்கிறது. 28-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலிக்கு பக்சர் மறை மாவட்ட அருட்பணியாளர் அனில் பெனட் தலைமை தாங்குகிறார். இதில் முதல் திருவிருந்து பெறும் குழந்தைகளின் குடும்பத்தினர் பங்கேற்கிறார்கள்.

    29-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி அருளுரையாற்றுகிறார். மதியம் 2.30 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு பணியாளர் பேட்ரிக் சேவியர், இணை பங்குபணியாளர் ஜார்ஜ் கபிரியேல் கிஷோர், பங்கு நிர்வாகம், பங்கு இறைமக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    Next Story
    ×