என் மலர்

    ஆன்மிகம்

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்ற போது எடுத்த படம்.

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனி நடைபெற்ற போது திரண்டிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர்.
    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டியில் மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சிறு சப்பரபவனி நடைபெற்றது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்த அருட்தந்தையர்கள் திருப்பலி நிறை வேற்றினர்.

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நாளான நேற்று காலை பூண்டி மாதா பேராலய பங்குதந்தையர்களாக இருந்து மறைந்த அருட்தந்தையர்கள் லூர்துசேவியர் மற்றும் ராயப்பர் ஆகியோர் நினைவு திருப்பலி நிறை வேற்றப்பட்டது. மாலையில் வழக்கம் போல் ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் திருவிழா திருப்பலி கும்ப கோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி தலைமையில் நடைபெற்றது.

    “மரியா சமூக அக்கறை கொண்ட புரட்சிப்பெண்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த திருப்பலியில் கும்பகோணம் பிஷப்புடன் மறைமாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பூண்டி மாதா பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள் ஜெயன், ஜேம்ஸ் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பலி்க்கு பின்னர் பூண்டி மாதாபேராலய முகப்பில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பூண்டி மாதாவின் சொரூபம் வைக்கப்பட்டது. தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி பூண்டி மாதாவின் ஆண்டு திருவிழா தேர்பவனியை புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    தேர்பவனி நடைபெற்ற போது திரண்டிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். தங்கள் கைகளில் இருந்த காசுகளையும், மலர்களை சமர்ப்பித்தும் வழிபட்டனர். தேர்பவனியின் போது வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தேர்பவனி நிறைவடைந்ததும் இன்று (புதன்கிழமை) காலை மரியா-சிதறுண்ட இதயங்களை ஒருங்கிணைப்பவர் என்ற தலைப்பில் காலை 6 மணிக்கு கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி திருப்பலி நிறைவேற்றுகிறார். இதனை தொடர்ந்து மாலையில் கொடியிறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    தேர்பவனியையொட்டி திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன் தலைமையில், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்பநாய் கொண்டு பேராலயத்தின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.
    Next Story
    ×