என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முன்னதாக இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடக்கிறது.

    விழாவில் நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு அருட்பணியாளர் மைக்கல் ஏஞ்சல் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை ஜெபமாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 7 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு ஆராதனை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, தேர்பவனி நடக்கிறது.

    19-ந் தேதி காலை 7 மணிக்கு அருட்பணியாளர் பஸ்காலிஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் சேவியர் லாரன்ஸ் மறையுரை வழங்குகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு கொடியிறக்கம், 8 மணிக்கு பொதுக்கூட்டம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு மக்கள் மற்றும் ஊர் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×