என் மலர்

  கிறித்தவம்

  புனித அந்தோணியார்
  X
  புனித அந்தோணியார்

  பரப்புவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரப்புவிளை புனித அன்னம்மாள் ஆலயத்தில் இருந்து ஜெபமாலை பவனி, தொடர்ந்து மாலை ஆராதனை போன்றவை நடந்தது. 10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) திருவிழா திருப்பலி நடக்கிறது
  ராஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய கிளை பங்கான பரப்புவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று மாலையில் புனித அன்னம்மாள் ஆலயத்தில் இருந்து ஜெபமாலை பவனி, தொடர்ந்து மாலை ஆராதனை போன்றவை நடந்தது.

  10-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மதியம் 1 மணிக்கு ஊர் அசனம் நடைபெறும்.

  விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அமல்ராஜ், பங்கு பேரவை துணைத்தலைவர் டி.வி.சி. விட்மன், செயலாளர் சேகர், பொருளாளர் பாத்திமா மைக்கேல் ராஜன் மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.
  Next Story
  ×