என் மலர்

  கிறித்தவம்

  காரைக்குடி தூய சகாய மாதா ஆலய தேர்பவனி
  X
  காரைக்குடி தூய சகாய மாதா ஆலய தேர்பவனி

  காரைக்குடி தூய சகாய மாதா ஆலய தேர்பவனி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காரைக்குடி தூய சகாய மாதா ஆலய திருவிழா திருப்பலி முடிந்ததும் சகாய அன்னையின் திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட வண்ணத்தேரில் ஆலய வளாகத்தில் பவனியாக வந்தது.
  காரைக்குடி தூய சகாய மாதா ஆலய திருவிழா திருப்பலி தேர்பவனியுடன் நடைபெற்றது. இதில் கோயம்புத்தூர் மறை மாவட்ட புனித பாத்திமா ஆலய பங்குத்தந்தை மரிய அந்தோணி அன்னையின் புகழ்பற்றி மறை உரையாற்றினார். ஏராளமான அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.

  பங்கு தந்தை எட்வின் ராயன் அனைவரையும் வரவேற்றார். திருப்பலி நிறைவில் உதவி பங்குத்தந்தை பினாட்டன் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். திருப்பலி முடிந்ததும் சகாய அன்னையின் திருஉருவம் அலங்கரிக்கப்பட்ட வண்ணத்தேரில் ஆலய வளாகத்தில் பவனியாக வந்தது. நிறைவு விழா திருப்பலியில் தேவகோட்டை ஆனந்தா கல்லூரி செயலர் கிருஷ்டி சேசுராஜ் பங்குத்தந்தையரோடு இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்.

  திருப்பலி நிறைவில் அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது. விழாவில் பங்கு தந்தையர்களோடு இணைந்து பங்கு பேரவையினர், அனைத்து பணிக்குழுக்கள், அருட் சகோதரிகள் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×