என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்
    X
    வடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்

    வடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம்

    வடுகர்பேட்டையில் ஆரோக்கியமாதா ஆலய தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, வேண்டுதல் சப்பர பவனி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி மற்றும் புள்ளம்பாடி மறைவட்ட குருக்கள் தலைமையில் திருவிழா ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இரவு 5 சப்பரங்களின் பவனி நடைபெற்றது. நேற்று காலை அருட்தந்தைகள் தெரஸ்நாதன், லியோடோமினிக், நல்லுஸ்ராஜா ஆகியோர் தலைமையிலும், பின்னர் புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு ஹென்றிபுஷ்பராஜ் தலைமையிலும் அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாதா சொரூபம் தாங்கிய தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று(திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஆலய பங்குதந்தை தங்கசாமி தலைமையில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.
    Next Story
    ×