என் மலர்
ஆன்மிகம்

மதுரை வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை அண்ணாநகரில் உள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் அப்போலின் கிளாரட்ராஜ் கொடியேற்றினார். விழாவில் வருகிற 7-ந்தேதி வரை தினமும் மாலை 6½ மணிக்கு அன்னையின் சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. மேலும் 8-ந்தேதி காலை 7½ மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும்.
மாலை 6½ மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறும். பின்னர் அண்ணாநகர் முக்கிய வீதிகளில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடைபெறும். 9-ந்தேதி காலை கொடியிறக்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூயிஸ், உதவி பங்குத் தந்தை பீட்டர் மற்றும் பங்கு பேரவையினர் செய்துள்ளனர்.

Next Story