என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
    X

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் எடுத்தது.
    • முதல் இன்னிங்சில் இந்திய அணி 296 ரன்கள் எடுத்தது.


    Live Updates

    • 8 Jun 2023 9:11 PM IST

      22-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ரகானேவுக்கு LBW முறையில் அவுட் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ரகானே ரிவ்யூ எடுத்தார். நல்ல வேலையாக அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. நோபால் இல்லை என்றால் அந்த பால் அவுட் என அறிவிக்கப்பட்டிருக்கும்.

    • 8 Jun 2023 8:44 PM IST

      மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    • 8 Jun 2023 8:23 PM IST

      இந்திய அணி 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. சுப்மன் கில் 13, புஜாரா 14, ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளனர்.

    • 8 Jun 2023 8:18 PM IST

      கேமரூன் கிரீன் பந்து வீச்சில் புஜாரா கிளீன் போல்ட் ஆனார்.

    • 8 Jun 2023 7:41 PM IST

      இந்திய அணி முதல் 10 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் எடுத்துள்ளது.

    • 8 Jun 2023 7:25 PM IST

      போலண்ட் பந்து வீச்சில் சுப்மன் கில் 13 ரன்னில் போல்ட் ஆனார்.

    • 8 Jun 2023 7:21 PM IST

      பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.

    • 8 Jun 2023 6:52 PM IST

      இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா - சுப்மன் கில் களமிறங்கியுள்ளனர்.

    • 8 Jun 2023 6:39 PM IST

      இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் முகமது சமி, ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

    • 8 Jun 2023 6:38 PM IST

      469 ரன்னில் ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா.

    Next Story
    ×