search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக் கோப்பை 2023.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து
    X

    உலகக் கோப்பை 2023.. இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து

    • நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் நம்ப முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. லீக் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கும் நியூசிலாந்து அணி, இவை அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தற்போது முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் தற்போது 1.923 ஆக இருக்கிறது.

    மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் 1.821 ஆக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இவைகளின் நெட் ரன் ரேட் முறையே 1.385 மற்றும் -0.137 ஆக இருக்கிறது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    Next Story
    ×