என் மலர்
கிரிக்கெட் (Cricket)

லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா- 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
- உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
- நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.
உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது.
Live Updates
- 15 Nov 2023 2:59 PM IST
இந்த உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா 40 முதல் 49 ரன்களுக்குள் (48, 46, 40, 47) 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.

- 15 Nov 2023 2:34 PM IST
உலகக் கோப்பையில் அதிக சிக்சர் விளாசிய கிறிஸ் கெயில் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார். கிறிஸ் கெய்ல் 49 சிக்சர்களும் ரோகித் 51 சிக்சர்களும் விளாசி உள்ளனர்.
- 15 Nov 2023 1:50 PM IST
மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கை அணியை 55 ரன்களில் இந்திய அணி ஆல் அவுட் செய்த அதே பிட்சில் இன்று இந்தியா நியூசிலாந்து அணிக்கு இடையேயான உலகக் கோப்பை அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.







