search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா- 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
    X

    லைவ் அப்டேட்ஸ்: நியூசிலாந்தை பழி தீர்த்தது இந்தியா- 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

    • உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திக்கவில்லை.
    • நியூசிலாந்து அணி விளையாடிய 9 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று இருக்கிறது.

    உலகக் கோப்பை 2023 தொடரின் அரையிறுதி போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும்.

    நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியிலும் வெற்றிநடையை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்-ஐ தேர்வு செய்து இருக்கிறது.

    Live Updates

    • 15 Nov 2023 3:18 PM GMT

      வில்லியம்சன் கேட்ச்சை முகமது சமி தவறவிட்டார்.

       

    • 15 Nov 2023 2:52 PM GMT

      மிட்செல் - வில்லியம்சன் அரை சதம் எடுத்து அசத்தினர். நியூசிலாந்து அணி 164 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

    • 15 Nov 2023 2:46 PM GMT

      விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர். வில்லியம்சன் - மிட்செல் ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.


    • 15 Nov 2023 2:29 PM GMT

      வில்லியம்சன் மற்றும் மிட்செல் ஜோடியின் அசத்தல் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 100 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

    • 15 Nov 2023 2:01 PM GMT

      விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்த ஜாம்பவான்கள்.

    • 15 Nov 2023 1:46 PM GMT

      அரையிறுதி போட்டியை நேரில் கண்டு மகிழ்ந்த ஷிகர் தவான் - ரஜினி காந்த்.



       


    • 15 Nov 2023 1:38 PM GMT

      முகமது சமி வீசிய 2 -வது ஓவரில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

    • 15 Nov 2023 1:18 PM GMT

      முதல் பந்திலேயே கான்வே விக்கெட்டை வீழ்த்திய முகமது சமி.

    • 15 Nov 2023 12:07 PM GMT

      விராட் கோலி சதம் அடித்ததை தொடர்ந்து ஷ்ரேயாஸ் சதம் அடித்தார்.

    • 15 Nov 2023 12:04 PM GMT

      இந்திய அணி 350 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×