search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை அணிகள் இன்று மோதல்
    X

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை அணிகள் இன்று மோதல்

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    • இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் நடந்து வருகிறது. இப்போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் நடக்கிறது.

    இதில் கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கல்லில் 7 ஆட்டங்களும் நடந்தன. நேற்றுடன் திண்டுக்கல்லில் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இன்று முதல் சேலத்தில் லீக் ஆட்டங்கள் தொடங்குகிறது. இங்கு 8 ஆட்டங்கள் நடக்கிறது.

    இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் பாபா அபராஜித், ஜெகதீசன், பிரதேஷ் ரஞ்சன் பால் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் சஞ்சய் யாதவ், ஹரீஸ் குமார் தங்களது பங்களிப்பை சிறப்பாக அளித்து வருகிறார்கள்.

    பந்து வீச்சில் ரஹில்ஷா, ராமலிங்கம் ரோகித், சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    நெல்லை அணி 4 ஆட்டத்தில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் கேப்டன் அருண் காார்த்திக், அஜிதேஷ், சூர்யபிரகாஷ், சோனு யாதவ் ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் பொய்யாமொழி, மோகன் பிரசாத், சந்தீப் வாரியர், லக்சய் ஜெயின், ஹரீஸ், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர். அந்த அணி 4-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்றுள்ளது. 2 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை அணி 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் தோற்றது. அந்த அணி இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. நாளைய ஆட்டத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×