search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல்- சேலம் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி
    X

    டி.என்.பி.எல்- சேலம் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி

    • மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார்.
    • இறுதியில் ஸ்ரீஅபிஷேக் 32 (28) ரன்களும், சுவப்நில் சிங் 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    சேலத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் சேலம் ஸ்பர்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சேலம் அணி முதலில் களமிறங்கியது.

    ஆரம்பம் முதலே மதுரை அணி துல்லியமாக பந்து வீசியது. இதனால் சீரான இடைவெளியில் சேலம் அணி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இறுதியில், சேலம் ஸ்பர்டன்ஸ் அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வார் 29 ரன்களை எடுத்தார்.

    அமித் சாத்விக், கௌரிசங்கர் தலா 17 ரன்கள் எடுத்தனர். மதுரை சார்பில் குர்ஜப்நீத் சிங் 3 விக்கெட்டும், முருகன் அஷ்வின், கவுதம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து 99 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் நிஷாந்த் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆதித்யா 8 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய ஜெகதீசன் கவுசிக் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்ததாக ஸ்ரீஅபிஷேக்குடன், சுவப்நில் சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ரன் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில் ஸ்ரீஅபிஷேக் 32 (28) ரன்களும், சுவப்நில் சிங் 25 (16) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் மதுரை அணி 13 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றிபெற்றது.

    Next Story
    ×